தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

4 Nov 2026, 1:14 am
சென்னை விரைவு செய்திகள்

சிதம்பரம் தொகுதியில் வைரக்கற்கள் பட்டை தீட்டும் தொழிற்சாலை எம்எல்ஏ மு.தமிமுன்அன்சாரி தகவல்

சிதம்பரம், நவ 3-சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியில் வைரம் மற்றும் இதர கற்களைப் பட்டை தீட்டும் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் சிதம்பரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மு.தமிமுன்அன்சாரி தெரிவித்தார்.

மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவரும், சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினருமான மு.தமிமுன்அன்சாரி செவ்வாய்க்கிழமை சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

கடலூர் மாவட்டத்தின் கடைமடைப் பகுதிகளில் விவசாயப் பாசனத்துக்குத் தண்ணீர் கிடைக்கும் வகையில் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிதம்பரம் நகரில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் வீடுகளை இழந்த மக்களுக்கு, பேருந்து நிலையம், சின்னக்கடைத்தெரு, சீர்காழி சாலை உள்ளிட்ட பகுதிகளில் இடிக்கப்பட்ட வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளில் மீண்டும் வீடுகள் கட்டித் தர வேண்டும்.சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் டைடல் பார்க் அமைக்க வேண்டும் என்றும் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். இதன் மூலம் இப்பகுதியின் தொழில் வளர்ச்சிக்கும், இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கும் வழிவகை ஏற்படும்.மேலும், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார்.

கடலூரில் கொட்டித் தீர்த்த கன மழை

கடலூர், நவ. 3-வங்கக்கடலில் உருவாகியுள்ள முரசு புயல் மற்றும் வானிலை மாற்றம் காரணமாக தமிழகம் புதுச்சேரியில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

கடலூர் மாநகரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. குறிப்பாக இருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையம், லாரன்ஸ் சாலை சுரங்கப்பாதை. புதுப்பாளையம் பாரதி சாலை, மஞ்சக்குப்பம் நேதாஜி சாலை, செம்மண்டலம், கடலூர் முதுநகர் துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளிலும், முக்கிய சாலைகளிலும் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் சாலைகளில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடலூரை சுற்றியுள்ள பகுதிகளான பண்ருட்டி நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது காலையிலும் கடலூரில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்தது.

இதேபோல் புதுச்சேரியிலும் செவ்வாயன்று அதிகாலை முதல் மழை பெய்தது. இதனால் நகரில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளது.

அனுமதியின்றி செயல்படும் 87 ரிசார்ட்டுகளை மூட உத்தரவு

சென்னை, நவ. 3- ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் சரணாலயப் பகுதியில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாகச் செயல்பட்டு வரும் 87 ரிசார்ட்டுகளையும் உடனடியாக மூடவும், சீல் வைக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவையை சேர்ந்த ஒலி விழிப்புணர்வு இயக்கத்தின் நிறுவனர் கற்பகம் தொடர்ந்த வழக்கில், இதுகுறித்து எடுத்த நடவடிக்கைகள் குறித்து நவம்பர் 27-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தங்கம் விலை உயர்வு

சென்னை, நவ.3-சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,02,400-க்கும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.12,800-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.200-க்கும், கிலோ ரூ.2 லட்சத்திற்கும் விற்பனையானது.

ரயில்களில் பட்டாசு கொண்டு செல்ல தடை சென்னை ரயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு சோதனை

சென்னை, நவ. 3-தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுத் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் ரயில்வே பாதுகாப்புப் படை சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ரயில்கள் மற்றும் ரயில் நிலைய வளாகங்களுக்குள் பட்டாசுகள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் உள்ளிட்ட ஆபத்தான பொருட்களை பயணிகள் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடையை மீறுவோருக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வெடி பொருட்களைக் கண்டறியும் கருவிகள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர், பெரம்பூர், தாம்பரம், சென்னை கடற்கரை, மாம்பலம், பரங்கிமலை உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் தீவிர சோதனைகள் நடைபெற்று வருகின்றன. மேலும், பாதுகாப்பு மற்றும் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. பண்டிகைக் கால கூட்ட நெரிசலில் பயணிகள் பாதுகாப்பாகப் பயணிக்கவும், பொறுப்புணர்வுடன் தீபாவளியைக் கொண்டாடவும் தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் கேட்டுக்கொண்டுள்ளது.

திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவர் மீது பாலியல் சீண்டல் புகார்

திருவண்ணாமலை, நவ 3-திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணி

யாற்றும் முதுநிலை மருத்துவர் மீது, அங்கு பயிலும் மாணவிகள் மற்றும் பெண் பணியாளர்கள் சார்பில் பாலியல் சீண்டல் புகார்கள் கூறப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த 15 ஆண்டுகளாக அதே மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர், தன்னிடம் கல்வி கற்கும் மாணவிகளிடம் அச்சுறுத்தும் வகையிலும், கண்ணியமற்ற முறையிலும் தொடர்ந்து நடந்து கொள்வ தாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுபோன்ற தொடர் பாலியல் தொல்லைகள் மற்றும் மன உளைச்சல் காரணமாகவே ஏற்கனவே பல மாணவிகள் தங்களது மருத்துவப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வெளி யேறியுள்ளதாகத் கூறப்படுகிறது. இது குறித்து கல்லூரி முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கும் முறையாகத் தகவல் தெரிவிக்கப்பட்ட போதிலும், இது

வரை எந்தவிதமான உறுதியான நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மாணவிகள் தீவிர மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், எனவே, உரிய விசாரணை நடத்தி தவறு செய்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

‘‘காணாமல் போய் 22 நாளாகிறது என் மகளை கண்டுபிடித்து தாருங்கள்’’செஞ்சி சிறுமியின் தாய் கண்ணீர் பேட்டி

விழுப்புரம், நவ.3-விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தில் வடிவேல் பவானி தம்பதியின் மகள் ஹேமலதா (7). இந்த சிறுமி கடந்த 12ம்தேதி காலை மாயமானார். தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கடந்த மாதம் 22ம்தேதி விசார ணையை துவக்கிய சிபிசிஐடி, போலீ சார் ஏற்கனவே சிறுமியின் தாய் பவானி,தந்தை வடிவேல், பாட்டி சாந்தி, சிறுமியின் அக்கா, உறவினர்கள், அக்கா வின் மாப்பிள்ளை வீட்டார் என குடும்பத்தி னரிடமும், ஜோதிடர், கோவில் பூசாரி, சரித்திர பதிவேடு குற்றவாளி மற்றும் சிறுமியின் குடும்பத்தினருக்கு அதிகம் போன் செய்தவர்கள் என 50க்கும் மேற்பட்டவர்களுடன் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் எவ்வித துப்பும் கிடைக்காமல் திணறி வருகின்றனர்சிறுமி மாயமாகி 22 நாட்கள் ஆன நிலையில் சிறுமியின் தாய் பவானி நிருபர்களிடம் கூறியதாவது:

குழந்தை காணாமல் போன நாள்முதல் இன்று வரை நாங்கள் சொல்வதை ஒன்றுகூட தெளிவாக சமூக ஊடகங்கள் வெளியிடுவதில்லை. நாங்கள் கூறுவது ஒன்று அவர்கள் செய்வது ஒன்று. குறிப்பாக இந்த யூடியூப் சேனல்கள் எங்களைப்பற்றி அவதூறு கருத்துக்களை பதிந்து வருகிறார்கள். இதனாலே மற்றவரிடம் பேசுவதற்கு எங்களுக்கு பயமாக இருக்கிறது. மன உளைச்சலாகவும் இருக்கிறது. குழந்தை காணாமல் போய் 22 நாட்கள் ஆகிறது. இதுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லை என்று போலீசார் கூறு கின்றனர் அனைவரது முயற்சியாலும் எனது குழந்தையை மீட்டுத் தந்தாலே போதும், வேறு எதுவும் எங்களுக்கு வேண்டாம். இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.

கிராவல் மண் கடத்திய 5 லாரிகள் பறிமுதல்

திருவள்ளூர், நவ. 3-ஆந்திர மாநிலத்திலி ருந்து அனுமதி இல்லாத இடத்திற்கு கிராவல் மண் கொண்டு செல்ல முயன்ற 5டிப்பர் லாரிகளைக் கனிம வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த னர்.

விழுப்புரம் மண்டல புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் ஸ்ரீனிவாசராவ் தலைமையிலான கனிம

வளத்துறை அதிகாரிகள், பெரியபாளையம் அருகே யுள்ள மஞ்சாங்கரணை பகுதியில் வாகனச் சோத

னையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திராவிலி ருந்து சென்னையில் நடைபெறும் சாலைப் பணிக்காகக் கிராவல் மண் கொண்டு வர அனுமதி பெற்று, அதனை கன்னி கைப்பேர் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்த மான இடத்திற்குச் சட்ட விரோதமாக சப்ளை செய்ய முயன்றது தெரியவந்தது.

இதனையடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட5 டிப்பர் லாரிகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவர்களுக்கு அப ராதம் விதித்து லாரிகளைப் பெரியபாளையம் காவல் நிலையத்தில் ஒப்ப டைத்தனர். இச்சம்பவம்குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய லாரிஓட்டுநர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து: சென்னையைச் சேர்ந்தவர் பலி!

காட்மண்டு, நவ. 3-நேபாள நாட்டின் எவரெஸ்ட் அடிவாரத்தில் உள்ள பெரிச்சே ஹெலிபேடில் ‘பிஷ்டெயில் ஏர்’ மற்றும் ‘ஏர் டைனஸ்டி’ ஆகிய 2 ஹெலிகாப்டர்கள் தரையிறங்க முயன்றபோது ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.

இவ்விபத்தில் சென்னையைச் சேர்ந்த பயணி வசந்த் குமார் பாலராமராஜு (47) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சைலேஷ் கிருஷ்ணா படேல் (49) மற்றும் விமானிகள் கே.சி. பிரஜ்வல், ரவீந்திர பிரஜாபதி ஆகிய 3 பேர் காயமடைந்து காட்மண்டு மெடிசிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து நேபாள சிவில் விமான போக்குவரத்து ஆணையமும் காவல்துறை யும் விசாரணை நடத்தி வருகின்றன.

விருகம்பாக்கம் காவல் ஆய்வாளர்கள் இருவர் மீது துறை ரீதியான நடவடிக்கை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, நவ. 3-சென்னை வடபழனி குமரன் காலனியில் 1,800 சதுர அடி நிலத்துக்குப் போலியான ஆவணங்கள் தயாரித்ததாக எஸ். சூர்யா என்பவர் அளித்த புகாரின் பேரில், வடபழனியைச் சேர்ந்த பால்துரை உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி பால்துரை தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ரமேஷ், புகாரை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய விருகம்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டிருந்தார்.இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பால்துரைக்கு எதிரான புகாரை வாபஸ் பெறும்படி புகார்தாரர் சூர்யாவை இன்ஸ்பெக்டர் மிரட்டியதாகவும், அதை ஏற்காத சூர்யா மீது பால்துரை மனைவி அளித்த புகாரின் பேரில் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பொய் வழக்குத் தொடரப்பட்டு சூர்யா கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பால்துரையின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, விருகம்பாக்கம் காவல் ஆய்வாளர்களான முனிசேகர் மற்றும் ராஜேஷ் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டார். மேலும், கோயம்பேடு காவல் மாவட்ட எல்லையைத் தவிர்த்து, இணை ஆணையர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி மூலம் இந்த விசாரணை நடத்தப்ட்டு டிசம்பர் 4-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து: சென்னையைச் சேர்ந்தவர் பலி!

காட்மண்டு, நவ. 3-நேபாள நாட்டின் எவரெஸ்ட் அடிவாரத்தில் உள்ள பெரிச்சே ஹெலிபேடில் ‘பிஷ்டெயில் ஏர்’ மற்றும் ‘ஏர் டைனஸ்டி’ ஆகிய 2 ஹெலிகாப்டர்கள் தரையிறங்க முயன்றபோது ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.

இவ்விபத்தில் சென்னையைச் சேர்ந்த பயணி வசந்த் குமார் பாலராமராஜு (47) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சைலேஷ் கிருஷ்ணா படேல் (49) மற்றும் விமானிகள் கே.சி. பிரஜ்வல், ரவீந்திர பிரஜாபதி ஆகிய 3 பேர் காயமடைந்து காட்மண்டு மெடிசிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து நேபாள சிவில் விமான போக்குவரத்து ஆணையமும் காவல்துறை யும் விசாரணை நடத்தி வருகின்றன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.