தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

17 hours before
சென்னை விரைவு செய்திகள்

உடைந்த மினி குடிநீர் தொட்டியைசீரமைத்து தர மக்கள் கோரிக்கை

உளுந்தூர்பேட்டை, நவ.23-கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் நொணையவாடி - பூ.மலையனூர் செல்லும் சாலையில், அய்யனார் கோவிலுக்கு அருகில் பூ.மலையனூர் ஊராட்சியில் கடந்த 2018-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட மினி குடிநீர் தொட்டி தற்போது உடைந்து சேதமடைந்துள்ளது. மேலும், அதன் அருகில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறும் பயன்பாடின்றி உள்ளது.

எனவே, சேதமடைந்த குடிநீர் தொட்டியை சீரமைத்து, ஆழ்துளை கிணற்றிற்கு மின் இணைப்பு, மோட்டார் வசதி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் சிறையில்வாலிபர் சாவு

கடலூர், நவ. 23-விருத்தாசலம் பழமலைநாதர் நகரைச் சேர்ந்த முருகன் மகன் விக்னேஷ் (24). இவர் கடந்த 2025 செப்டம்பர் மாதம் முதல் கடலூர் மத்திய சிறையில் விசா ரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமை இரவு சிறையில் திடீரென மயங்கி விழுந்த விக்னேஷுக்கு சிறை மருத்துவர் முதலுதவி அளித்தார். பின்னர், மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரி வித்தனர்.

மாதர் சங்க மத்தியசென்னை மாவட்ட பேரவை

சென்னை, நவ. 23 –அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்ட பேரவை கூட்டம் சனிக்கிழமையன்று (நவ. 21) சேத்துப்பட்டில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஆ.நாகராணி தலைமையில் தாங்கினார். துணைத் தலைவர் ஏ.சாந்தி வரவேற்றார். சங்கத்தின் மாநிலப் பொருளாளர் ஜி.ராணி, மாவட்டச் செயலாளர் வெ.தனலட்சுமி, மகளிர் சட்ட உதவி மன்ற மாநிலத் தலைவர் யு.அனு நிஷா உள்ளிட்டோர் பேசினர். மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.நாக

ரத்தினம் நன்றி கூறினார்.

நிர்வாகிகள் தேர்வு

மாவட்டத் தலைவராக ஆர்.நாகரத்தினம், செய லாளராக வி.அம்முகுட்டி, பொருளாளரக வி.தமிழ்ச்செல்வி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

சார்மினார் விரைவு ரயில் மீண்டும் தாம்பரத்திலிருந்தே புறப்படும்

சென்னை, நவ.23-சென்னை கடற்கரையிலிருந்து புறப்பட்டு ஹைதரா பாத்துக்கு இயக்கப்பட்டு வந்த சார்மினார் விரைவு ரயில், ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் தாம்பரத்திலிருந்தே புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை தாம்பரத்திலிருந்து ஹைதராபாத் நிலை யத்துக்கு சார்மினார் விரைவு ரயில் (எண்: 12759) இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பராமரிப்புப் பணிகள் காரணமாக, தாம்பரத்துக்குப் பதிலாக சென்னை கடற்கரை நிலையத்திலிருந்தே இந்த விரைவு ரயில் புறப்பட்டுச் செல்லும் என அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது சார்மினார் விரைவு ரயில் மீண்டும் தாம்பரத்திலிருந்தே புறப்பட்டு ஹைதராபாத் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை (நவ. 22) தாம்பரத்திலிருந்து மாலை 5.30 மணிக்குப் புறப்பட்ட சார்மினார் விரைவு ரயில், மறுநாள் காலை 8 மணிக்கு ஹைதராபாத் சென்ற டைந்தது. இந்த ரயில் சென்னை எழும்பூர் நிலையத்தில் வழக்க மாக நின்று செல்லும் நிலையில், ஜனவரி 21, 22 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரை நிலையத்திலும் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆற்காட்டில் நவ. 25-ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

ராணிப்பேட்டை, நவ. 23–ராணிப்பேட்டை மாவட்டத்தில் எரிவாயு உருளை (கேஸ் சிலிண்டர்) நுகர்வோர்கள் மற்றும் விநியோகிக்கும் முகவர்களுக்கான மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் வரும் புதன்கிழமை (நவ. 25) மாலை 3 மணி அளவில் நடைபெற உள்ளது. ஆற்காடு வட்டாட்சியர் அலு வலகத்தின் முதல் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் இக்கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களிடமிருந்து பெறப்படும் சேவை குறைபாடுகள் மற்றும் தேவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, உரிய குறைகளைவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.