சென்னை விரைவு செய்திகள்
10 May 2026, 1:38 am

பெரம்பூரில் ஏடிஎம் கார்டை மாற்றி ரூ 42 ஆயிரம் மோசடி

சென்னை, மே 9- பெரம்பூரில் உதவி செய்வது போல நடித்து முதியவர் ஒருவரின் ஏடிஎம் கார்டை மாற்றி, அவரது வங்கிக் கணக்கிலிருந்து 42 ஆயிரம் ரூபாயைத் திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். பெரம்பூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சிஎம்டிஏ ஊழியரான ராஜேந்திரன் (69), கடந்த புதன்கிழமை காலை பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள ஏடிஎம் மையத்திற்குப் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அவருக்கு உதவி செய்வதாகக் கூறி ஏடிஎம் இயந்திரத்தை இயக்கியுள்ளார். பணப்பரி வர்த்தனை தோல்வி அடைந்துவிட்டதாகக் கூறி, ராஜேந்திரனிடம் ஒரு கார்டைத் திருப்பித் தந்து விட்டு அந்த நபர் அங்கிருந்து சென்றுவிட்டார். வீட்டிற்குச் சென்ற சிறிது நேரத்தில், தனது கணக்கிலிருந்து நான்கு தவணைகளாக மொத்தம் 42 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக ராஜேந்திரனின் செல்போ னுக்கு குறுஞ்செய்தி வந்தது. அதிர்ச்சியடைந்து கார்டைச் சரிபார்த்தபோது, அது போலியானது என்ப தும் அசல் கார்டு திருடப் பட்டதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் செம்பியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஏடிஎம் மையத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

சென்னையில் மே 11 முதல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தொடக்கம்

சென்னை, மே 9- தேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் மே 11-ம் தேதி முதல் மீண்டும் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பால் அமலுக்கு வந்த நடத்தை விதிகளின் காரணமாக, பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க நேரடியாகக் கூடும் குறைதீர் முகாம்கள் கடந்த சில நாட்களாகத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகி நடத்தை விதிகள் முழுமையாகத் திரும்பப் பெறப்பட்டுள்ளதால், வரும் திங்கட்கிழமை (மே 11) முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கம்போல குறைதீர் கூட்டங்கள் மற்றும் இதர சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

விவோ எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போன் அறிமுகம்!

சென்னை, மே 9- இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ , தனது சிறிய வகை ஸ்மார்ட்போன்களின் வெற்றியைத் தொடர்ந்து, இன்று தனது புதிய மாடலான “விவோ எக்ஸ்300 எப்இ” ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. நவீனத் தலைமுறையினரின் ரசனைக்கு ஏற்ப, ஸ்டைல் மற்றும் தரத்தை மையமாக வைத்து இது வடி வமைக்கப்பட்டுள்ளது. ஒரு கையில் பிடித்துப் பயன்படுத்த எளிதாக இருக்கும் வகையில் 16.04 செ.மீ (6.31 இன்ச்) பிளாட் ஸ்கிரீன் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் உள்ளவர்களுக்காகச் சிறந்த ‘செய்ஸ்’ கேமரா தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பயனர்களுக்குத் தொழில்முறைத் தரத்திலான புகைப்படங்களை வழங்குகிறது. ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்தச் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் சக்திவாய்ந்த பிராசஸர் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே 11 ரயில்வே கேட்களை அகற்றி சாதனை

சென்னை, மே 9- சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், ரயில் இயக்கத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவும் கடந்த 2025-26 நிதியாண்டில் 11 ரயில்வே கேட்களை தெற்கு ரயில்வே வெற்றிகரமாக அகற்றியுள்ளது. சுமார் ரூ.100 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், 7 சுரங்கப்பாதைகள், 3 மேம்பாலங்கள் மற்றும் ஒரு கீழ்ப்பாலம் ஆகியவை கட்டப் பட்டுள்ளன. குறிப்பாக, குரோம்பேட்டை ராதா நகர் சுரங்கப்பாதை திறக்கப்பட்டதன் மூலம் ஜி.எஸ்.டி சாலைக்கான போக்குவரத்து எளிதாக்கப்பட்டுள்ளது. இதேபோல் வாலாஜா ரோடு, ஜோலார்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் புதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே, பட்டாபிராம் மற்றும் ஆவடி பகுதிகளில் நிலவும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, அங்கு கூடுதல் சுரங்கப்பாதை மற்றும் கீழ்ப்பாலங்களை அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.