தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

22 May 2026, 1:28 am
சென்னை விரைவு செய்திகள்

அம்மா உணவகங்களை மேம்படுத்த உள்ளாட்சி நிதியைப் பயன்படுத்த முதலமைச்சர் உத்தரவு!

சென்னை, மே 21- சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களின் உள்கட்ட மைப்பு மற்றும் உணவின் தரத்தை மேம்படுத்த, உள்ளாட்சி அமைப்புகள் தங்களின் சொந்த நிதியைப் பயன்படுத்திக் கொள்ள முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி பிறப்பித்துள்ள அரசாணையின்படி, சென்னை மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் தங்களின் சொந்த நிதி மூலம் புதிய பாத்திரங்கள், தரமான மளிகைப் பொருட்கள் வாங்குதல் மற்றும் கட்டடப் பழுதுபார்ப்புப் பணி களை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 383 அம்மா உணவகங்களைச் சீரமைக்க ரூ.7.4 கோடி மதிப்பில் பணி கள் ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக மாந கராட்சி ஆணையர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். மேலும், மெரினா கடற்கரை மற்றும் ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளுக்காக இரண்டு நடமாடும் அம்மா உணவகங்களும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயி வீட்டில் 14.5 சவரன் நகை, 1 கிலோ வெள்ளி கொள்ளை!

திருவள்ளூர், மே 21- திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கம் கிராமத்தில், பட்டப்பகலில் விவசாயி ஒருவரின் வீட்டின் பூட்டை உடைத்து 14.5 சவரன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். ஆத்துப்பாக்கம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விவசாயி சுரேஷ்குமார். இவரும் இவரது மனைவி புவனேஸ்வரியும் செவ்வாயன்று வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள தங்களது விவசாய நிலத்திற்குப் பூ பறிக்கச் சென்றுள்ளனர். மதியம் அவர்கள் வீடு திரும்பியபோது, முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, மர்ம நபர்கள் பீரோவில் இருந்த நகை, வெள்ளி மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து புவனேஸ்வரி அளித்த புகாரின்பேரில், பெரியபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் 234 ரவுடிகள், கஞ்சா வியாபாரிகள் கைது!

சென்னை, மே 21- தாம்பரம் அருகே இரு கானா பாடகர்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் உத்தரவின்பேரில் மாநகர் முழுவதும் நள்ளிரவு அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சென்னையின் 12 காவல் மாவட்டங்களிலும் போலீசார் நடத்திய இந்த சிறப்பு வேட்டையில், 133 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 101 பேர் என மொத்தம் 234 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 21.4 கிலோ கஞ்சா மற்றும் 1,070 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றங்களை ஒடுக்க இத்தகைய சோதனைகள்தொடரும் என காவல் துறை எச்சரித்துள்ளது.

5 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

சென்னை, மே 21- சட்டம்-ஒழுங்கு பிரிவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் எஸ்.ரமேஷ் (ஓட்டேரி), ஜி.எஸ்.புஷ்பராஜ் (மீனம்பாக்கம்), ஐ.காதர் மீரா (மாதவரம்), ஏ.கண்ணகி (வானகரம்) மற்றும் குற்றப்பிரிவைச் சேர்ந்த டி.கிருபாநிதி (மதுரவாயல்) ஆகிய ஐந்து பேரும் உடனடியாக சென்னை பெருநகர காவல் துறையின் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்கான புதிய பணியிடங்கள் இன்னும் ஒதுக்கப்படாத நிலையில், இந்த இடமாற்ற உத்தரவின் நகல்கள் சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து மற்றும் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர்களுக்கும், சென்னை மாநகரத்தின் பிற இணை மற்றும் துணை ஆணையர்களுக்கும் முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் அடுத்த நான்கு நாட்களுக்கு அனல் காற்று நீடிக்கும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை, மே 21- சென்னையில் நேற்று உச்சக்கட்டமாக 107.6 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி அனல் காற்று வீசிய நிலையில், மேலும் 4 நாட்களுக்கு இதே போன்ற கடுமையான வெப்பத் தாக்கம் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு திசையில் இருந்து வீசும் காற்று காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய வட கடலோர மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும், அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் காரணமாக பொதுமக்கள் கடும் அசவுகரியங்களைச் சந்திக்க நேரிடும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் துரை தெரிவித்துள்ளார். அதேவேளையில், தமிழகத்தின் கோவை மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, ஈரோடு மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் சவரனுக்கு ரூ.480 உயர்வு

சென்னை, மே 21- சென்னையில் தங்கம் விலை வியாழனன்று சவரனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ரூ.14,810-க்கும், சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.1,18,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.290-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.