தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

6 Oct 2026, 1:07 am
சென்னை விரைவு செய்திகள்

சென்னை விரைவு செய்திகள்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

அம்பத்தூர், அக். 5-மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் துலால் (46), ரூயல் சலீம் (22). இவர்கள் இருவரும் அம்பத்தூர் மேனாம்பேடு இந்திரா நகர் பகுதியில் தங்கி இருந்து கட்டடப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இவர்கள் இருவரும் சாரம் கட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அருகில் சென்ற மின் கம்பி சாரத்தின் மீது உரசிியதில், மின்சாரம் பாய்ந்து இருவரும் தூக்கிவீசப்பட்டனர். இதில் துலால்உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ரூயல் சலீம் பலத்த காயம் அடைந்துஉயிருக்குபோராடினார். இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதூர் காவல் துறையினர் துலால் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர் கைது

சென்னை, அக். 5-சென்னை பெருங்குடியில் கல்லுக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (25). இவர் அந்த பகுதியில் வெல்டிங் தொழிலாளியாகவேலை செய்து வருகிறார்.ராஜேஷ்குமார், கடந்த 1-ஆம் தேதி வேலை முடிந்துகல்லுக்குட்டை எல்லையம்மன் கோயில் அருகே நடந்து வந்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு இளைஞர், ராஜேஷ்குமாரை தாக்கி அவர் வைத்திருந்த பணத்தை பறித்துக் கொண்டு தப்பியோடிய அதே பகுதியை சேர்ந்த கார்த்திக்(26) என்பவரை கைது செய்தனர்.

சுங்கச்சாவடிகளில் தானியங்கி கேமரா சுங்க வசூல் முறை

சென்னை, அக். 5-சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திரு பெரும்புதூர் நெமிலி மற்றும் வாலாஜா சென்னாசமுத்திரம் சுங்கச்சாவடிகளில் பூத்துகள் இல்லாத தானியங்கி கேமரா சுங்க வசூல் முறையைத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அமைத்துள்ளது.

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: 2 பேர் கைது

அம்பத்தூர், அக். 5-அம்பத்தூர் கள்ளிகுப்பத்தைச் சேர்ந்த தம்பதிக்கு 9 வயதில் மகள் உள்ளார். இவர்,

அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில்4ஆம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வீட்டு அருகில் உள்ளமளிகை கடைக்கு பொருள்கள் வாங்க சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டி

ருந்த அம்பத்தூர் ஒரகடம் வஉசி தெருவைச் சேர்ந்த கணேசன் (61) என்பவர் சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமி வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்துபெற்றோர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கணேசனை அம்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில்ஒப்படைத்தனர். புகாரின் அடிப்படையில் போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கணேசனைஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

அதே போல் அம்பத்தூர் அருகே பாடி பிரபல ஜவுளி கடைக்கு தம்பதி 6 வயது மகளுடன் துணிகள் வாங்க சென்றார். அப்போது அங்கு பணியாற்றிய பீகாரைச்சேர்ந்த ஹசிசூல் ஹக் (23) சிறுமியிடம் தவறாக நடந்துள்ளார். புகார் அடிப்படையில் அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து ஹசிசூல் ஹக்கை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

வைரஸ் காய்ச்சல்சுகாதாரத்துறை எச்சரிக்கை

புதுச்சேரி, அக்.5-புதுச்சேரி அரசு சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் செவ்வேள் வெளியிட்டுள் செய்தி குறிப்பு:

இந்தியாவில் தற்போது பருவ கால இன்புஃளுயன்சா பன்றி காய்ச்சல் பாதிப்பு அதி

கரித்து வருகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்ட கண்காணிப்பின்படி தற்போது பரவி வரும் வைரஸ் பருவ கால இன்புஃளுயன்சா வைரசாகவே உள்ளது. புதிய அல்லது அசாதாரண மர பணு மாற்றங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. பெரும்பாலான தொற்றுகள் லேசானவை மற்றும் தானாகவே குணமடைய கூடியவை. எனவே விழிப்புடன் இருப்பது அவசியம் என்றாலும் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.

பொதுவாக அதிக காய்ச்சல், குளிர், நடுக்கம், தொடர்ந்து காணப்படும் வறட்டு இருமல் மற்றும் தொண்டை வலி, கடுமையான தசை வலி மற்றும் உடல் சோர்வு, தலைவலி, மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கடைப்பு போன்ற அறிகுறிகளுடன் தொற்று தொடங்கலாம். இன்புஃளுயன்சா என்பது ஒரு வைரஸ் தொற்று ஆகும். ஆன்டிபயாட்டிக் மருந்துகள் வைரஸ்களை அழிக்காது. மருத்துவரின் ஆலோசனை இன்றி வைரஸ் எதிர்ப்பு மருந்து களை சுயமாக உட்கொள்ள வேண்டாம். அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் மருத்து வரின் ஆலோசனை படியே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.