சென்னை விரைவு செய்திகள்
1 Jun 2026, 11:53 pm

தற்பாலின ஈர்ப்பாளர்களுக்கான சட்ட அங்கீகாரம் கோரி ஜூன் 28ல் பேரணி

சென்னை,ஜூன் 1- சென்னை நகரில் ஜூன் 28 அன்று, தனது 18-வது ஆண்டாக ‘வானவில் சுயமரியாதை பேரணி’ நடைபெறுகிறது. சமூகக் கட்டுப்பாடுகள், ஆணாதிக்கம் மற்றும் பாலின பாகுபாடுகளைக் கடந்து, முழுமையான குடிமக்களாக வாழ்வதற்கான உரிமைகளை வலியுறுத்தி, தமிழ்நாட்டின் LGBTIQA+ சமூகம் மற்றும் ஆதரவாளர்கள் இந்தப் பேரணியை முன்னெடுக்கின்றனர். புதிய தமிழ்நாடு அரசிடம் அவர்கள் வைக்கும் முதன்மையான கோரிக்கை களில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் திரு நங்கை, திருநம்பி மற்றும் இடைபாலின நபர்களுக்குக் கிடைமட்ட இடஒதுக்கீடு வழங்குதல் மற்றும் மதராஸ் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி LGBTQIA+ கொள்கையை உடனடியாக நிறைவேற்றுதல் ஆகியவை முக்கியமானவை. மேலும், திருநர் நல வாரியத்தின் பெயரை மாற்றிப் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல், ஒரே பாலின உறவுகளுக்கான சட்ட அங்கீ காரம், தத்தெடுப்பு உரிமை, பாலின-நடுநிலை வசதிகள் மற்றும் மருத்துவத் துறையில் கண்ணியமான சிகிச்சை போன்ற கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டுள்ளன. பள்ளி மற்றும் உயர்கல்வி பாடத் திட்டங்களில் LGBTIQA+ உள்ளடக்கம், வெறுப்புப் பேச்சுகளைத் தடுத்தல், மாத விடாய் சுகாதாரத் திட்டங்களில் திருநம்பி மற்றும் நான்பைனரி நபர்களை உள்ளடக்கு தல் எனப் பல்வேறு சமத்துவக் கோரிக்கை களை இக்கூட்டமைப்பு முன்வைத்துள்ளது. சாதி, வர்க்கம், பாலின பாகுபாடுகளுக்கு எதி ரான சமூக நீதியை நிலைநாட்ட அனை வரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே இந்தப் பேரணியின் மைய நோக்கமாகும் என்று அந்த அமைப்பின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விவரங்களுக்கு, சகோதரன் அமைப்பின் Ms.ஜெயாவை +91 98418 65423 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பராமரிப்பின்றி மதுப்பிரியர்களின் புகலிடமான துரைப்பாக்கம் பூங்கா: சீரமைக்க கோரிக்கை!

சென்னை, ஜூன் 1- சென்னை துரைப்பாக்கம் ஸ்ரீ சாய் நகரில் உள்ள 2.5 ஏக்கர் பரப்பளவிலான பொதுப் பூங்கா, முறையான பராமரிப்பின்றிப் பாழ டைந்து கிடப்பதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடந்த 2015-ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இப்பூங்கா, 2024 பெருவெள்ளத்திற்குப் பிறகு கடுமையாகச் சேதமடைந்தது. குறிப்பாக, நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பாதைகள் உடைந்தும், மேடுபள்ளங்களாகவும் மாறிய தால், பாதுகாப்பு கருதிப் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் வருகை முற்றிலும் குறைந்துவிட்டதாக ஸ்ரீ சாய் நகர் வீட்டு உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் ஆர்.நாகராஜன் தெரிவித்துள்ளார். பூங்காவில் மின்விளக்குகள் எரியாத தாலும், இரவு நேரங்களில் பிரதான கதவு பூட்டப்படாமல் திறந்தே கிடப்பதாலும், இருட்டிய பிறகு இப்பூங்கா மதுப்பிரியர் களின் புகலிடமாக மாறி வருவதாக உள்ளூர் வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், 2024 மழைக் காலத்திற்குப் பிறகு இங்கு காவ லாளி யாரும் பணியில் இல்லாத நிலையி லும், அவருக்கான ஊதியம் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். அண்மையில் தேர்தல் அறிவி ப்பிற்கு முன்பாகச் சென்னை மாநகராட் சியால் தொடங்கப்பட்ட சீரமைப்புப் பணி கள், தேர்தல் நடத்தை விதிகள் காரணமாகப் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. எனவே, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இப்பணிகளை முடித்து, காவலாளியை நியமித்து, பூங்காவை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

ஐடிஐ யில் சேர ஜூன் 3-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூர், ஜூன் 1- திருவள்ளூர் மாவட்டம் வடகரை அரசு தொழிற்பயிற்சி நிலையம் உட்படத் தமிழக அரசு ஐடிஐ-களில் 2026-27 கல்வியாண்டு சேர்க்கைக்கு www.skilltraining.tn.in என்ற இணையதளம் மூலம் ஜூன் 3-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள் ளார். எலக்ட்ரீஷியன், ஃபிட்டர், மோட்டார் மெக்கானிக், வெல்டர், ஒயர்மேன் ஆகிய பிரிவுகளுக்கு 8 மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 14 முதல் 40 வயதுடைய இருபால ரும் ரூ.50 கட்டணத்தில் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் சேருபவர்களுக்குக் கட்டணமில்லாப் பயிற்சி, இலவச விடுதி, பேருந்து அட்டை, மிதிவண்டி மற்றும் மாத உதவித்தொகை ரூ.750 வழங்கப்படும். அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்கள் மூலம் மாதம் ரூ.1,000 கூடுதலாக வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 044-29555659 என்ற எண்ணை அணுகலாம்.

பெரியபாளையத்தில் கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் கைது

திருவள்ளூர், ஜூன் 1- திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த வட மதுரை கூட்டுச்சாலையில் போலீசார் ஞாயிறன்று நடத்திய வாகன சோதனையின்போது, மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று வாலிபர்களை மடக்கி விசாரணை நடத்தினர். அவர்கள் அழிஞ்சிவாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன் (25), சக்தி வேல் (21) மற்றும் வேலகாபுரத்தைச் சேர்ந்த ஆதி (25) என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் 2 செல்போன்களைப் பறிமுதல் செய்த போலீசார், மூன்று பேரையும் கைது செய்தனர். பின்னர், ஊத்துக்கோட்டை நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருக்கழுக்குன்றம் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்

திருக்கழுக்குன்றம், ஜூன் 1- செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த அகதீஸ்வரமங்கலம் கிராமத்தில் கடந்த மூன்று மாதங்க ளாக, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு செல்லும் குழா யில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள தாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரையில் எந்தவித நட வடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் முறையாக குடிநீர் வழங்க க்கோரி, காலி குடங்களுடன் கருங்குழி-திருக்கழுக்குன்றம் செல்லும் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து, சம்பவ இடத்துகு்கு வந்த திருக்கழுக்குன்றம் போலீ ஸார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், இரண்டு நாட்களில் குடிநீர் தட்டுப்பாட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் உறுதியளித்தனர். இதையடுத்து, பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். மேலும், குடிநீர் தட்டுப்பாட்டை சீரமைக்கவிட்டால், பெரியளவில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி 2-வது நாளாக பெண்கள் போராட்டம்

சென்னை, ஜூன் 1- செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அடுத்த பழவூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை மூட வலியுறுத்தி, அப்பகுதி பெண்கள் திங்களன்று 2வது நாளாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். விவசாய நிலங்கள் அருகே அமர்ந்து மது அருந்துபவர்களால் பயிர்கள் சேதமடைவ தாகவும், அவ்வழியாகச் செல்லும் பெண்க ளுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் கூறி, கடந்த ஞாயிற்றுக் கிழமை பெண்கள் முதற்கட்டமாக கடையை முற்றுகையிட்டனர். அப்போது காவல்துறை யினர் உறுதியளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்குச் சிலர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அதுகுறித்து காவல்துறை யினர் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாகவும் கூறி திங்களன்றும் பெண்கள் மீண்டும் கடையை முற்றுகை யிட்டனர். இதனால் டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை. மிரட்டல் விடுத்தவர் கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், கடையை மூடுவது குறித்து உயர் அதிகாரி களிடம் பேசி தீர்வு காண்பதாகவும் போலீ சார் உறுதியளித்ததை அடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.

தி.நகர் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் புதுப்பிப்பு

சென்னை, ஜூன் 1- சென்னை தி.நகரில் கடந்த 2021-இல் தொடங்கப்பட்ட பல்அடுக்கு வாகன நிறுத்து மிடம், போதிய பராமரிப்பின்றி சில தளங்கள் செயலிழந்ததால் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் இருந்தது. இதை யடுத்து, அங்கு ரோப்புகளை மாற்றுதல் மற்றும் எஞ்சின் பழுதுபார்ப்பு போன்ற பணிகளுக்காகப் புதிய டெண்டர் விடப்பட் டுள்ளதாக, ஞாயிற்றுக்கிழமையன்று ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். இப்பணிகள் முடிந்ததும், மாற்றியமைக் கப்பட்ட கட்டணங்களுடன் 222 கார்கள் மற்றும் 513 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் அனைத்துத் தளங்களும் முழு மையாகப் பயன்பாட்டிற்கு வரும். மேலும், நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க திருவொற்றியூரில் திரையரங்கத்துடனும், கோடம்பாக்கத்தில் வணிக வளாகத்துடனும் பொது-தனியார் பங்களிப்பு முறையில் மேலும் இரு புதிய பன்னடுக்கு வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்படவுள்ளன.

சிபிஎஸ்இ பிளஸ்-2 விடைத்தாள் மறுமதிப்பீடு இணையதளக் கோளாறுகளால் மாணவர்கள் தவிப்பு!

சென்னை, ஜூன் 1- சிபிஎஸ்இ பிளஸ்-2 விடைத்தாள் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை யன்றும் சிபிஎஸ்இ இணையதளம் தொடர்ந்து முடங்கியதால் பெற்றோர் மற்றும் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். கடந்த மே 19 அன்று இந்த இணைய தளம் தொடங்கப்பட்டதில் இருந்தே தொழில் நுட்பக் கோளாறுகள், கட்டணம் செலுத்து வதில் சிக்கல் மற்றும் அதிகப்படியான பயன்பாட்டாளர்கள் போன்ற பிரச்சினைகள் நீடித்து வருகின்றன. இக்கோளாறுகளைக் கண்டறிய சென்னை ஐஐடி நிபுணர்களை சிபிஎஸ்இ குழுவினர் வரவழைத்துள்ளனர். அதிகப்படியான போக்குவரத்து காரண மாகவே இந்தத் தற்காலிகச் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், பல மாணவர்கள் வெற்றிகரமாக விண்ணப்பித்துள்ளதாகவும் சிபிஎஸ்இ மண்டல அலுவலகம் தெரிவித் துள்ளது. முன்னதாக விடைத்தாள் நகல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிப் பதற்கான கடைசி தேதிகள் முறையே மே 22 மற்றும் 29 என அறிவிக்கப்பட்டிருந்த நிலை யில், தொழில்நுட்பக் கோளாறுகள் காரண மாக அவை மே 25 மற்றும் ஜூன் 1 என நீட்டிக்கப்பட்டன. தற்போது நிலவும் சூழலால் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகப் பள்ளித் தாளாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கூடுதல் மின்சாரப் பேருந்துகள்: புதிய பணிமனைகள் அமைக்க திட்டம்!

சென்னை, ஜூன் 1- சென்னை மாநகர போக்குவரத்து கழக பயணிகள் அடுத்த ஆண்டு முதல் கூடுதல் மின்சாரப் பேருந்து சேவைகளைப் பெற வுள்ளனர். இதற்காக, நகரின் பல்வேறு பகுதிகளில் மேலும் 7 புதிய மின்சாரப் பேருந்து பணிமனைகளை இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டி முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது. இந்த மின்சாரப் பேருந்துகள் தற்போதைய பேருந்துகளுக்கு மாற்றாக இல்லாமல், பேருந்துகளின் எண்ணிக்கை யையும் சேவைக்கான நேரத்தையும் அதி கரிக்கும் கூடுதல் சேவையாக இயக்கப்படவுள்ளன. தற்போது சென்னையில் ஏசி மற்றும் ஏசி அல்லாத 625 குறைந்த தள மின்சாரப் பேருந்துகள் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதல் பேருந்துகளைக் கையாள்வதற்காக ஆலந்தூர், ஆவடி, ஐயப்பன்தாங்கல், கே.கே.நகர், பாடியநல்லூர் மற்றும் பெரம்பூர் உள்ளிட்ட 7 பணிமனைகள் மின்சாரப் பேருந்து பணிமனைகளாக மாற்ற ப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, பல்லவன் இல்லம் மற்றும் பூந்தமல்லி மின்சாரப் பணிமனைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இதுவரை ‘சுவிட்ச் மொபிலிட்டி’ நிறுவனம் மட்டுமே மின்சாரப் பேருந்துகளை வழங்கி வரும் நிலையில், புதிய நிறுவனங்களையும் இதில் இணைக்க எம்டிசி திட்டமிட்டுள்ளது.