தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

1 Jul 2026, 11:42 pm
சென்னை விரைவு செய்திகள்

பணமாற்று அலுவலகக் கொள்ளை: 4 பேருக்கு 6 ஆண்டுகள் சிறை

சென்னை, ஜூலை 1- மணப்பாக்கத்தில் உள்ள அந்நிய செலாவணி அலுவலகத்தில் புகுந்து ரூ.25,000 கொள்ளையடித்த வழக்கில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ரிகு அமர்சிங் சௌகான், ஜுகேந்திர சிங், அபிஷேக் சிங் மற்றும் யோகேஷ் குமார் ஆகிய 4 பேருக்கு தலா 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து ஆலந்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவத்தில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடத்தி, குஜராத்தின் சூரத் நகரில் பதுங்கியிருந்த குற்றவாளிகளை நந்தம்பாக்கம் காவல்துறையினர் கைது செய்தனர். குற்றம் நடந்த 5 மாதங்களுக்குள் விசாரணையை முடித்து நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

டாஸ்மாக் பார்கள் மூடல்

சென்னை, ஜூலை 1- தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளுடன் இணைக்கப்பட்ட பார்களுக்கான உரிமம் ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்ததையடுத்து, அனைத்து பார்களும் மூடப்பட்டன. இது குறித்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் கே. விக்னேஷ் கூறுகையில், பார்களுக்கான உரிமம் நீட்டிக்கப்படாததால் அவை மூடப்பட்டுள்ளதாகவும், புதிய டெண்டர்கள் இறுதி செய்யப்பட்ட பிறகே மீண்டும் திறக்கப்படும் என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள 4,765 டாஸ்மாக் கடைகளில், சுமார் 2,400 கடைகளுடன் இணைந்த பார்கள் தனியார் உரிமையாளர்களால் நடத்தப்பட்டு வந்தன. பார்கள் மூடப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் பொது இடங்களில் மது அருந்தினால் காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.

விபத்து வழக்கில் 13 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு

சென்னை, ஜூலை 1- சென்னையில் கடந்த 2013-ஆம் ஆண்டு மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் 13 வயது சிறுவன் உயிரிழந்த வழக்கில், எம்பி (EMPEE) குழுமத்தைச் சேர்ந்த ஷாஜி புருஷோத்தமன் குற்றவாளி என சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எழும்பூர் பகுதியில் நடந்த இந்த விபத்தில், மதுபோதையில் காரை இயக்கி, பேருந்து நிறுத்தத்தின் மீது மோதியதில் முனிராஜ் என்ற சிறுவன் பலியானார். இந்த வழக்கை விசாரித்த 7-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி பி. ஸ்ரீகுமார், ஷாஜி புருஷோத்தமன் மீதான குற்றவியல் கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகத் தீர்ப்பளித்தார். தீர்ப்பு நாளான திங்கட்கிழமை உடல்நலக்குறைவு எனக் கூறி அவர் ஆஜராகாததால், நீதிபதி ஜாமீனில் வர முடியாத வாரண்ட் பிறப்பித்து, அவரை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். காவல்துறையினர் அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மணப்பாக்கம் கொள்ளையில் 4 பேருக்கு 6 ஆண்டு சிறை

சென்னை, ஜூலை 1- மணப்பாக்கத்தில் உள்ள பணமாற்று அலுவலகத்தில் ரூ.25,000 கொள்ளையடித்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 4 பேருக்கு, ஆலந்தூர் நீதிமன்றம் தலா 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.80,000 அபராதமும் விதித்தது. 5 மாதங்களுக்குள் விசாரணை முடிக்கப்பட்டு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு ஜூலை 4 முதல் கட்டணமில்லா பயிற்சி

சென்னை, ஜூலை 1– டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 2ஏ மற்றும் குரூப் 4 உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் சனிக்கிழமையன்று (ஜூலை 4) சென்னையில் தொடங்குகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிக்கையில் 2026 ஜுன் 30 முதல் குரூப் 1 தேர்விற்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இந்த தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் ஜூலை 4 முதல் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புப் பயிற்சி மையம் தொடங்க உள்ளது. இப்பயிற்சி வகுப்புகளை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து இந்த கட்டணமில்லா பயிற்சியை வழங்க உள்ளது. அரசுப்பணி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை கடந்த 15 ஆண்டுகளாக அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் வெற்றிகரமாக நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த மையத்தில் பயிற்சி பெற்ற 130 க்கும் மேற்பட்டவர்கள் தேர்வுகளில் வெற்றிபெற்று ஒன்றிய மாநில அரசுப் பணிகளில் இணைந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக தேர்வுகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் திறமை மிக்க பயிற்றுநர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் மாதிரித் தேர்வுகளுடன் கூடிய கலந்துரையாடல் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் மற்றும் ஏனைய பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களும் கலந்து கொள்ளலாம். பயிற்சி வகுப்புகள் எண். 6/9, அக்ரஹாரம் சந்து, அரண்மனைக்காரன் தெரு (கச்சாலீஸ்வரர் ஆலயம் அருகில்) அமைந்துள்ள இக்கல்வி மையத்தில் நடைபெறும். வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 9.30 மணி முதல் மாலை 4.45 மணி வரையில் வகுப்புகள் நடைபெறும். ஆர்வமுள்ள தேர்வர்கள் முன்பதிவு செய்வதுடன் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் மற்றும் முகவரிக்கான ஆதார நகலுடன் வர வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 97912 85693, 73387 03324, 73581 44387, 90426 92613, 63698 74318, 94446 41712 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.