தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

30 May 2026, 12:22 am
சென்னை விரைவு செய்திகள்

மது பாட்டில்கள் கடத்தியவர் கைது

விழுப்புரம், மே 29- புதுச்சேரியில் இருந்து விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் மதுபானம் கடத்தி வந்த வேலு (32) என்பவரை விழுப்புரம் கெங்கராம்பாளையம் மதுவிலக்கு சோதனைச் சாவடியில் போலீசார் கைது செய்தனர். மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி கந்தசாமி மேற்பார்வையில், ஆய்வாளர் ஆனந்தி தலைமையிலான போலீசார் நடத்திய வாகனத் தணிக்கையில் அவர் பிடிபட்டார். அவரிடமிருந்து 201 மது பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

ஜி.எஸ்.டி சாலையில் தொடரும் எதிர் திசை வாகன ஓட்டங்கள்: வாகன ஓட்டிகள் அவதி!

சென்னை, மே 29- சைதாப்பேட்டை முதல் கிண்டி வரையிலான ஜி.எஸ்.டி சாலையில், குறிப்பாக மெட்ரோ ரயில் தூண்களுக்கு அடியில், விதிகளை மீறி எதிர் திசையில் வாகனங்கள் இயக்கப்படுவது வழக்க மாகிவிட்டதால் தினசரி பயணிகள் அச்சத்தில் பயணித்து வருகின்றனர். ராஜ் பவன் அருகேயுள்ள போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், தாலுகா அலுவலகச் சந்திப்பில் காத்திருப்பதைத் தடுக்கவும் இருசக்கர வாகனங்களும், ஆட்டோக்களும் மெட்ரோ காரிடார் வழியாக எதிர் திசையில் நுழைந்து வேளச்சேரி பிரதான சாலை மற்றும் கிண்டி நோக்கிச் செல்கின்றன. அதிகாலை மற்றும் மாலை நேரப் பணி நேரங்களில் அதிவேகமாக வரும் வாகனங்களின் குறுக்கே இவை திடீரென வருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இப்பகுதியில் போக்கு வரத்து போலீஸார் இல்லாததே இந்த விதிமீற லுக்குக் காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டும் நிலையில், விபத்து களைத் தடுக்க அங்கு தடுப்புகள் அமைக்கப்படும் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தங்கம் விலை மீண்டும் உயர்வு!

சென்னை, மே 29- சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.800 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,16,800-க்கும், ஒரு கிராம் ரூ.14,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போல், வெள்ளியின் விலை யும் கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.2,90,000-க்கு விற்பனை யாகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.