தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

7 Oct 2026, 2:08 am
சென்னை விரைவு செய்திகள்

சென்னையில் லேப்டாப் ஹார்ட்வேர், சிப்-லெவல் பயிற்சி

சென்னை, அக். 6-தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (ஈடிஐஐ) சார்பில் தொழில்முனைவோருக்கான 5 நாள் “லேப்டாப் ஹார்ட்வேர் மற்றும் சிப்-லெவல் பயிற்சி” வரும் 12.10.2026 முதல் 16.10.2026 வரை சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் லேப்டாப் பாகங்களைப் பிரித்து பொருத்துதல், மதர்போர்டு பழுதுகள், சிப்-லெவல் சேவைகள், மின்சுற்றுப் வரைபட ஆய்வு (Schematic Tracing), பயாஸ் கணினி நிரலாக்கம் (BIOS Flashing) உள்ளிட்ட பயிற்சிகளுடன் அரசு மானியங்கள் குறித்த விவரங்களும் வழங்கப்படும். பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, கணினி அறிவுடைய 18 வயதிற்கு மேற்பட்டோர் பங்கேற்கலாம். தங்கும் விடுதி வசதியும் உண்டு. கூடுதல் விவரங்களுக்கும் முன்பதிவிற்கும் www.editn.in என்ற இணையதளத்திலோ அல்லது 8668100181, 9360221280 என்ற எண்களிலோ தொடர்புகொள்ளலாம்.

மயிலாப்பூரில் ஏசி மெக்கானிக் கொலை: 7 பேர் கைது

சென்னை, அக். 6-சென்னை மயிலாப்பூரில் ஏசி மெக்கானிக் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 கல்லூரி மாணவர்கள் உட்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வேளச்சேரியைச் சேர்ந்த ஏசி மெக்கானிக் சத்தியசீலன் (21), மயிலாப்பூர் வீரபத்திரன் தெருவில் திங்கள்கிழமை இரவு நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு கும்பலால் வெட்டப்பட்டார். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்விரோதம் காரணமாக எதிர் தரப்பு இளைஞரைச் சத்தியசீலன் தாக்கியதற்குப் பழியாக இக்கொலை நடந்தது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக 5 சிறுவர்கள் உட்பட 7 பேரை மயி லாப்பூர் காவல்துறை யினர் கைது செய்தனர். இதில் 3 பேர் பிபிஏ முதலா மாண்டு கல்லூரி மாணவர்கள் ஆவர்.

வேகத்தடைகளை உரிய முறையில் பராமரிக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை, அக்.7-சென்னையில் உள்ள சாலைகளில் ஒளிரும் பெயிண்ட் மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கை அமைப்புகள் இல்லாமல் உள்ள வேகத்தடைகளைப் பராமரிக்கக் கோரிய வழக்கில், உரிய நடவடிக்கை எடுக்கு

மாறு தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி யுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விக்டர் தாக்கல் செய்த மனுவில், சென்னையில் பல இடங்களில் உள்ள வேகத்தடைகளில் ஒளிரும் பெயிண்ட் மற்றும் பூனைக்கண் போன்ற எச்சரிக்கை அமைப்புகள் இல்லாததால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்குவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இது குறித்து கடந்த ஜூலை 10 அன்று அனுப்பப்பட்ட கோரிக்கை மனு மீது நட வடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை மனுவை பரி சீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசு, சென்னை மாநகராட்சி, டிஜிபி, சென்னை போலீஸ் கமிஷனர் மற்றும் போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் ஆகியோருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

ஆதார் பெயர் மாற்ற விதிகள் எளிமைப்படுத்தல்: புதிய ஆவணப் பட்டியல் வெளியீடு!

சென்னை, அக். 6-ஆதார் அட்டையில் பெயர் மாற்றம்மற்றும் திருத்தங்களை மேற்கொள்வதற்கான புதிய நடைமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெளியிட்டுள்ளது.

இனிஷியல் விரிவாக்கம், நடுப்பெயர் அல்லது குடும்பப் பெயர் சேர்த்தல், சிறிய எழுத்துப் பிழை திருத்தங்கள் போன்ற சிறிய மாற்றங்களுக்கு உரிய அடையாளச் சான்றைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் பதி

வின் போது ஊழியர்களால் ஏற்பட்ட பிழைகளைத் திருத்த, பெரியவர்கள் பிற்சேர்க்கை-பி உறுதிமொழிப் பத்திர

த்துடன் அடையாளச் சான்றையும், சிறுவர்கள் பிற்சேர்க்கை-சி பத்திரத்துடன் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் சான்றுகளையும் அளிக்க வேண்டும்.

திருமணம் அல்லது விவாகரத்திற்குப் பின் பெயர் மாற்றம் செய்ய விரும்புபவர்கள் பிற்சேர்க்கை-டி உறுதிமொழிப் பத்திரத்துடன் அடையாளச் சான்றைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆங்கிலப் பெயரில் உள்ள பெரிய-சிறிய எழுத்துப் பிழைகள் மற்றும் புள்ளிகளை நீக்குதல் போன்ற எளிய திருத்தங்களுக்கு எந்த ஆவணமும் தேவையில்லை. அதேவேளையில், ஒரு நபர் தனது முழுப் பெயரையோ அல்லதுஅடையாளத்தையோ முற்றிலுமாக மாற்ற அரசு அரசிதழ் அறிவிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இத்தகைய பெயர் மாற்றங்களை அருகிலுள்ள ஆதார் சேவை மையங்கள் மூலமாக மட்டுமேமேற்கொள்ள முடியும் என்றும், இணையதளம் மூலம் முகவரி மாற்றத்தை மட்டுமே செய்ய முடியும் என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.