தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

54 minutes before
சென்னை விரைவு செய்திகள்

சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் நீர் இருப்பு 35.57 சதவீதமாக சரிவு

சென்னை, அக். 9-சென்னை மாநகரின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் நீர் இருப்பு கணிசமாகக் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளனசென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழ வரம் மற்றும் கண்ணன்கோட்டை ஆகிய ஐந்து ஏரிகளில் மொத்த நீர் இருப்பு 35.57 சதவீதமாகச் சரிந்துள்ளது. மொத்தம் 11.757 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட இந்த ஏரிகளில், தற்போதைய நிலவரப்படி 4.182 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பில் உள்ளது. இதன் மூலம் ஏரிகளின் மொத்த கொள்ளளவில் சுமார் 64.43 சதவிகிதம் பகுதி தற்போது நீரின்றி வறண்டுள்ளதாகத் தெரிகிறது.

மழைக்காலங்களில் கிடைக்கும் நீரை இந்த ஏரிகளில் சேமித்து வைத்து வெயில் காலங்களில் சென்னையின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்துவது வழக்கம். இந்த ஏரிகளில் சேமிக்கப்படும் தண்ணீர் சுத்தி

கரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஏரி களின் நீர் இருப்பு தொடர்ந்து குறைந்து வருவதால் கிடைக்கும் தண்ணீரைப் பாதுகாப்பாகவும் முறையாகவும் பயன்படுத்துவது அவசியமாகிறது.

வரும் நாட்களில் மழை பெய்து ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்தால் மட்டுமே நீர் இருப்பு உயர வாய்ப்புள்ளது.நீர்வரத்து மற்றும் குடிநீர் பயன்பாட்டின் அளவை பொறுத்தே ஏரிகளின் நீர் இருப்பில் மாற்றங்கள் ஏற்படும் என்பதுகுறிப்பிடத்தக்கது.

மின்சாரம் தாக்கி இறந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ.14.50 லட்சம் இழப்பீடு

சென்னை, அக். 9-செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த நெமந்தம் கிராமத்தைச் சேர்ந்த விவ

சாயி செங்கேணி, கடந்த 2021 டிசம்பர் 31-ல் அறுந்து விழுந்த மின் கம்பி தாக்கி உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு ரூ.14.50 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி மனைவி தனலட்சுமி மற்றும் மகன்கள் மணிகண்டன், சத்யா ஆகியோர் உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ.5 லட்சம் போக மீதமுள்ள ரூ.9 லட்சத்து 50 ஆயிரத்தை, 2021 முதல் 6 சதவீத வட்டியுடன் சேர்த்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

சென்னையில் 19 இடங்களில் இன்று பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்

சென்னை, அக்.9-சென்னையில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவிஆணையாளர் அலுவலகங்களில் அக்டோபர் மாதத்திற்கான பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சனிக் கிழமையன்று (அக்.10) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.இம்முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு உள்ளிட்ட மாற்றங்களைச் செய்து கொள்ளலாம். மேலும், நியாயவிலைக்கடைக ளுக்கு நேரில் வர இயலாத மூத்த குடிமக்களுக்கு அங்கீகாரச் சான்று வழங்குதல், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் நுகர்வோர் குறைபாடுகள் தொடர்பானபுகார்களுக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.அனைத்துச் சேவை

களும் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு வரும் கடவுச்சொல் மூலமாகவே மேற்கொள்ளப்படும்என்பதால், குடும்ப அட்டைதாரர்கள் தங்களது பதிவுசெய்யப்பட்ட கைப்பேசி யுடன் மண்டல அலுவலகங் களை அணுகு மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ரேஷன் கடைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 35 கிலோ அரிசி: சோழவரம் மாநாட்டில் வலியுறுத்தல்

திருவள்ளூர், அக். 9-அனைத்துவகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் சோழவரம் ஒன்றிய மாநாடு பகுதித் தலைவர் வழக்கறிஞர் எம். சுசில்குமார் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட துணைச் செயலாளர் வி.ரவிக்குமார் வரவேற்க, மாவட்டத் தலைவர் பி. நடேசன் துவக்கி வைத்துப் பேசினார்.

மாநாட்டில் மாவட்ட செயலாளர் என். கீதா, பொருளாளர் வி. நித்தியா னந்தம், ஒன்றிய செயலாளர் ஏ.வி. புரு

ஷோத்தமன், பகுதி துணைத் தலைவர் ஆர்.சுகன்யா, விவசாயிகள் சங்கத் தலை வர் ஜி.வி. எல்லையன், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் எம். சந்திரசேகரன் மற்றும் ரஜினிமோகன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநில துணைத் தலைவர் எம். குமார் நிறைவுரை ஆற்ற, பி. அம்பிகா நன்றி கூறினார்.

முடிவில், சங்கத்தின் புதிய தலைவராக ஏ.வி. புருஷோத்தமன், செயலாளராக வழக்கறிஞர் எம். சுசில்குமார், பொரு

ளாளராக ஆர். சுகன்யா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ரேஷன் கடை களில் 35 கிலோ அரிசி வழங்குவதுடன், ரூ.6,000 உதவித்தொகை, வேலை வாய்ப்பு உருவாக்குவது, நூறு நாள்

வேலை முழுக்கூலி மற்றும் மானி யத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.