சென்னை விரைவு செய்திகள்
9 Aug 2026, 12:04 am

சென்னை விரைவு செய்திகள்

ஐஐடி மெட்ராஸ் 6 பேராசிரியர்களுக்கு ஆராய்ச்சி நிதி விருது

சென்னை, ஆக. 8-மூத்த அறிவியல் மற்றும் பொறியியலாளர்க ளுக்கான தேசிய விருதான ஏ.என்.ஆர்.எஃப். ஜே.சி. போஸ் ஆராய்ச்சி நிதிக்கு ஐஐடி மெட்ராஸின் 6 பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சுஜாதா சீனிவாசன், தலப்பில் பிரதீப், தீபா வெங்கடேஷ், ஜிதேந்திர எஸ். சங்வாய், ராம கிருஷ்ணன் சுவாமிநாதன் மற்றும் சுந்தர்கோபால் கோஷ் ஆகியோர் இந்த விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர். இவர்க ளுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 25 லட்சம் ஆராய்ச்சி நிதி வழங்கப்படும்.

பேராசிரியர் சுஜாதா சீனிவாசன் மலிவு விலை செயற்கை உறுப்பு களையும், தலப்பில் பிரதீப் குடிநீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பங்களையும் உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை விமான நிலையத்தின் பிளாசா விரைவில் திறப்பு

சென்னை, ஆக.8-இரண்டு ஆண்டு தாமதத்திற்குப் பிறகு, இரண்டாவது கார் ஏறும் தளத்தை உள்ளடக்கிய சென்னை விமான நிலையத்தின் பிளாசா பகுதிக்கு இறுதியாக ஒப்புதல் கிடைத்துள்ளது. இது இரண்டு வாரங்களில் திறக்கப்பட வாய்ப்புள்ளது என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிளாசா திறப்பு விழாவிற்குப் பிறகு இரண்டாவது கார் ஏறும் தளம் பயணிகளின் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்.

கடந்த 2024 ஜூலை மாதம், உள்நாட்டு முனையத்திற்கு எதிரே இருந்த கார் ஏறும் தளம் கனரக அடுக்கு வாகன நிறுத்துமிடத்தின் நான்காவது மாடிக்கு மாற்றப்பட்டது. பயணிகளிடையே பெரும் எதிர்ப்பை பெற்றது. சென்னை விமான நிலையத்திற்கு வந்து கார் பிடிப்பது மிகவும் ஏமாற்றமளிக்கும் அனுபவமாக இருந்த நிலையில், இறுதியாக பிளாசா திறக்கப்படுவதில் மகிழ்ச்சி அடைவதாக பயணிகள் தெரிவித்தனர்.

ஒரே வாரத்தில் 308 புகார்களுக்கு உடனடி தீர்வுசிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை நடவடிக்கை

சென்னை, ஆக. 8 —சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை கடந்த ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 6 வரையிலான ஒரு வாரத்தில் 308 புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது.

காணாமல்போன 308 பெண்கள், 3 குழந்தைகள் மற்றும் அறிவுசார் குறைபாடுடைய 6 பேர் மீட்கப்பட்டு குடும்பத்தி

னரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலும், குழந்தைத் திரு

மணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, பள்ளியில் இடைநின்ற 62 குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 3,402 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதோடு, குற்றங்கள் நடைபெற வாய்ப்புள்ள பகுதிகளில் தீவிர ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 16 குற்றவழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் 16வது உணவுப்பொருள் கண்காட்சி

சென்னை, ஆக. 8-இந்திய தொழில் கூட்டமைப்பு தெற்கு மண்டலம் சார்பில் 16வது உணவுப்பொருள் கண்காட்சி சென்னை வர்த்தக மையத்தில் ஞாயி றன்று நிறைவு பெறுகிறது.

ஆகஸ்ட் 7 முதல் 9 வரை நடைபெறும் இக்கண்காட்சியில் 250-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்களும், 25,000-த்திற்கும் அதிகமான வர்த்தக பார்வை யாளர்களும் பங்கேற்றனர். உணவுப் பதப்படுத்துதல், பேக்கேஜிங் மற்றும் கோல்டு செயின் தொடர்பான தொழில்நுட்பங்கள் இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் சிஐஐ புட்புரோ 2026 தலை வர் பி. தியாகராஜன், கூட்ட மைப்பின் தெற்கு மண்டலத் தலைவர் பி.ரவிச்சந்திரன், ஆந்திரப் பிரதேச முதன்மைச் செயலாளர் சிரஞ்சீவ் சவுத்ரி மற்றும் முன்னாள் தலைவர் எம். லட்சுமிபிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தங்கம் விலை உயர்வு

சென்னை, ஆக. 8-சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.13,965-க்கும், சவரனுக்கு ரூ.520 அதிகரித்து ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 720 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.