தீக்கதிர் முக்கிய செய்திகள்
4 Oct 2026, 11:37 pm

சென்னையில் இந்தியில் வழிகாட்டிப் பெயர் பலகை பொது மக்கள் அதிர்ச்சி

சென்னை, அக்.4 -சென்னை கோயம்பேடு மெட்ரோ அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டிப் பலகையில், தமிழ், ஆங்கிலத்துடன் இந்தி மொழியிலும் இடங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே மாநிலநெடுஞ்சாலை வழிகாட்டிப் பலகையில் இந்தி எழுத்துகள் இடம்பெற்றது. இந்த சம்பவத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தைத் தொடர்ந்து, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்தார். அப்போது, இருமொழிக் கொள்கையே தமிழக அரசின் மற்றும் தவெகவின் உயிர்க் கொள்கை என்றும், தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே மாநிலத்தின் கொள்கை என்றும், இந்தச் சம்பவத்திற்கு காரணமான இரு அதிகாரிகள்பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வு நடந்த இரண்டு நாட்களிலேயே, தலைநகர் சென்னையில் பொது மக்களும் வாகன ஓட்டிகளும் அதிகம் பயன்படுத்தும் முக்கிய சாலையில் திடீரென இந்தியிலும் பெயர்கள் எழுதப்பட்டிருப்பதைக் கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் இதுகுறித்து அரசு தரப்பில்இதுவரை எந்த விளக்கமும் தரப்படவில்லை. பெயர் பலகையும் அகற்றப்படவில்லை.

பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள்கருப்புக் கொடிப் போராட்டம்

சென்னை, அக்.4 -பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, மீனவர்கள் தங்கள் வீடு

களில் கருப்புக்கொடி ஏற்றிப் போராட்டம் நடத்தினர்.பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைக்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதனால் மீனவர்களின் பாரம்பரியத் தொழிலும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் எனக் கூறி அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். நொச்சிக்குப்பம் முதல் சீனிவாசபுரம், முள்ளிக்குப்பம் வரையிலான 10 மீனவக் கிராமங்களைச் சேர்ந்தோர் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியதுடன், கருப்புக்கொடி அணிவகுப்பும் நடத்தினர். அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.புதிய தலைமைச் செயலக எதிர்ப்புக் குழுவைச் சேர்ந்த டி.ஆர்.விஜயன், ஏற்கனவே உள்ள கட்டடத்தைப் பராமரித்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தலாம் எனவும், கோட்டையில் அமர்ந்து பார்த்தால் மக்களின் பிரச்சனை புரியாது எனவும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

‘வெற்றிப் பயணம்’ திட்டத்திற்கு எதிரான வழக்கு: இன்று விசாரணை

சென்னை: அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றிப் பயணிக்கும் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் திங்களன்று (அக்.5) விசாரணைக்கு வருகிறது.முதலமைச்சர் விஜய்யால் அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டத்தால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதாகவும், அரசாணை இல்லாமல் செயல்ப டுத்தப்படுவதால் தடை விதிக்க வேண்டும் என்றும் ஈரோட்டைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர் கலாமணி மனு தாக்கல் செய்துஉள்ளார். இவ்வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.

உதயநிதி மீது வழக்குப் பதிவு

சென்னை: தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரையில் குழந்தையைப் பயன்படுத்தியதாக, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது தாராபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.60 லட்சம் அபராதம்

சென்னை: தொடர் விடுமுறையொட்டி ஆம்னி பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுக்க தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட தணிக்கையில், விதிமீறல்ஈடுபட்ட பேருந்துகளிடம் இருந்து ரூ.60.54 லட்சம் வரி மற்றும் இணக்கக் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ள தாகப் போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.

சோதனை செய்யப்பட்ட 2,247 பேருந்துகளில் விதிமீறல் கண்டறியப்பட்ட 664

பேருந்துகளுக்கு இ-சலான் வழங்கப்பட்டுஉள்ளது. மேலும், கூடுதல் கட்டணம் வசூலித்த 11

பேருந்துகளில் பயணிகளுக்குப் பணம் திருப்பித் தரப்பட்டதுடன், தகுதிச் சான்றில்லாத 8 பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டன. அக்டோபர் 21 வரை இந்த தணிக்கை தொடரும் என அறிவிக்கப்பட்டுஉள்ளது.