சென்னை விரைவு செய்திகள்
27 Sept 2026, 3:02 am

சென்னையில் தங்கம் விலை உயர்வு

சென்னை, செப். 26-சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.1,12,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய்மையான தங்கம் கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ரூ.15,284-ஆகவும், ஒரு சவரன் ரூ.1,22,272-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 18 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.10,575-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் பெரிய மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ₹160-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விவரங்கள் சரிபார்ப்பு என்ற பெயரில் காலதாமதம் தொழிலாளர்கள் குமுறல்

ராணிப்பேட்டை, செப். 26 –ராணிப்பேட்டை தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் கட்டுமான தொழிலாளர் நல வாரியதொழிற்சங்க தலைவர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில், ஆன்லைன் வாயிலாக தொழிலாளர்கள் சமர்ப்பிக்கும் பதிவுகள் மற்றும் கோரிக்கைகள் மீது‘விவரங்கள் சரிபார்ப்பு’ என்ற பெயரில் அரசு அதிகாரிகள் தேவையற்ற காலதாமதம் செய்வதாக தொழிற்சங்கநிர்வாகிகள் குற்றம்சாட்டினர். இத்தகைய காலதாமதப் போக்கினை அரசு உடனடியாக முறைப்படுத்த வேண்டும்என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்டுவதற்காக வழங்கப்பட்டு வரும் ரூ. 4 லட்சம் நிதியுதவி பெறவிண்ணப்பிக்கும் தொழிலாளர்களின் விவரங்களை முறையாகவும், விரைவாகவும் விசாரணை செய்துஉடனடியாக குடியிருப்பு வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.இந்நிகழ்வில் அரக்கோணம் பொது தொழிலாளர் சங்கத் தலைவர் சி. துரைராஜ், கட்டுமான தொழிலாளர் சங்கமாவட்டச் செயலாளர் த. ஞானமுருகன், ஏ.ஐ.டி.யு.சி மாவட்டச் செயலாளர் ஏ.எஸ். சங்கர் மேஸ்திரி உள்ளிட்ட பலதொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ரயில்வே காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்

செப்.29-ல் சென்னையில் கருத்தரங்கம்

சென்னை, செப். 26 –இந்திய ரயில்வேயில் 92,116 பணியிடங்களுக்கு ரயில்வே வாரியம் (ஆர்.ஆர்.பி) மூலம் கடந்த 2024-ஆம் ஆண்டுஅறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு 3.58 கோடி இளையோர் விண்ணப்பித்துள்ள நிலையில், ரயில்வேஅமைச்சகத்தின் பணிப்படி கடந்த ஜூலை 24 அன்று வெளியிடப்பட்ட தகவலின்படி, ஒவ்வொரு பணியிடத்திற்கும்சராசரியாக 389 பேர் போட்டியிடுகின்றனர். 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தப் போட்டிஅதிகரித்துள்ளது.

தற்போது ரயில்வே துறையில் சுமார் 3.5 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், அவற்றை உடனடியாகநிரப்புமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறையையும் உற்பத்திப் பிரிவுகளையும் கார்ப்பரேட்மயமாக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து,வரும் செப்.29 அன்று காலை 10 மணியளவில், சிஐடியு சார்பில் சென்னை ஐ.சி.எஃப். வடக்கு கல்கி நகர் பென்சூர்சென்டரில் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு, சிஐடியுவின் அகில இந்திய துணைத் தலைவர் டாக்டர் கே.ஹே மலதா, சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன்உள்ளிட்டோர் சிறப்புரையாற்ற உள்ளனர். டிஆர்இயு பொதுச்செயலாளர் ஏ.எம்.பேபிஷகிலா வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.