சென்னை விரைவு செய்திகள்
yesterday

தங்கம் விலை நிலவரம்

சென்னை,ஆக.29- சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சனிக்கிழமை (ஆக.29) காலையில் அதிரடியாக பவுனுக்கு ரூ.2,360 குறைந்து, ரூ.1,16,040-க்கு விற்பனையானது. ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது.

மு.க.ஸ்டாலின் பாதுகாப்பு குறைப்பு

சென்னை, ஆக.29-முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், தவெக ஆட்சி மாறியதும் இசட் பிரிவு வழங்கப்பட்டது. இந்த

நிலையில், மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டி

ருந்த இசட் பிரிவு பாது காப்பு, சனிக்கிழமை முதல் எஸ்கார்ட் பாதுகாப்பாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செய லாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமிக்கும் இதே பாதுகாப்புதான் வழங்கப் பட்டிருக்கிறது.

செம்மஞ்சேரி சர்வதேச விளையாட்டு நகரம்: அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துக!வாலிபர்கள் கோரிக்கை

சென்னை, ஆக. 29 -செம்மஞ்சேரி சர்வதேச விளையாட்டு நகரம் தொடர்பாக அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று வாலிபர்கள் கோரியுள்ளனர்.

சென்னை செம்மஞ்சேரியில் சர்வதேச தரத்தில் மெகா விளையாட்டு நகரம் அமைக்கும் திட்டம் விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைய இருந்தது. உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு மைதானங்கள், பயிற்சி மையங்கள் மற்றும் வீரர்களுக்கான கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம் சென்னையை சர்வதேச விளையாட்டு போட்டிகளின் முக்கிய மையமாக மாற்ற முடியும்.

இந்நிலையில், செம்மஞ்சேரி விளையாட்டு நகரம் அமைக்கும் திட்டத்திற்காக வழங்கப்பட்டிருந்த ரூ.206 கோடி மதிப்பிலான பணி ஆணையை அரசு ரத்து செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

பணி ஆணை மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளதா? அல்லது விளையாட்டு நகரம் அமைக்கும் திட்டமே கைவிடப்பட்டுள்ளதா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்கவில்லை.

ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்ததை விட ஆசிய விளையாட்டுப் போட்டிகள் போன்ற சர்வதேச போட்டிகளை நடத்தக்கூடிய வகையில் புதிய விளையாட்டு நகரத்தை அமைக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். திட்டம் தொடருமா? புதிய திட்டம் என்ன? எப்போது புதிய ஒப்பந்தம் கோரப்படும்? அதன் மதிப்பீடு என்ன? எப்போது பணிகள் தொடங்கும்? என்பன போன்ற விவரங்களை அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

தமிழகத்தில் ஏராளமான திறமையான இளம் வீரர்கள் உள்ளனர். பொருளாதார வசதி இல்லாத வீரர்களுக்கும் தரமான பயிற்சி, மைதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் கிடைக்க வேண்டும். செம்மஞ்சேரி விளையாட்டு நகரம் சர்வதேச வீரர்களுக்கான கட்டமைப்பாக மட்டுமின்றி, தமிழகத்தின் அனைத்து பகுதி இளைஞர்களும் பயன்படுத்தக்கூடிய வகையில் வகையில் அமைய வேண்டும்.

எனவே, செம்மஞ்சேரி விளையாட்டு நகரத் திட்டத்தை கைவிடாமல், மேம்படுத்தி மேலும் நவீன முறையில் சர்வதேச தரத்திலான விளையாட்டு நகரமாக உருவாக்க வேண்டும். புதிய திட்டம் இருந்தால் அதனை உடனடியாக அறிவித்து, காலக்கெடுவுடன் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்.

இவ்வாறு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் என்.குமரன், செயலாளர் தீ.சந்துரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.