முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

3 Oct 2026, 1:21 am
சென்னை விரைவு செய்திகள்

சென்னை விரைவு செய்திகள்

திருவிழாக்களில் யானைகளைப் பயன்படுத்த வழிகாட்டு நெறிமுறைகள்

சென்னை, அக்.2–கோயில் திருவிழாக்க ளில் யானைகளைப் பயன்படுத்தும்போது பின்பற்ற வேண்டிய வழி காட்டு நெறிமுறைகளை வகுப்பதற்காகக் குழுவை அமைத்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், வரைவு நெறிமுறைகளை நான்கு வாரங்களில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சேவா அறக்கட்டளை தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை நீதி பதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, விலங்குகள் நல ஆர்வலர்களின் இடையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்தது. மேலும், யானை களின் உடல் தகுதி, பிரத்யேக வாகனங்கள், திருவிழாக்களில் பட்டாசு மற்றும் ஒலிப்பெருக்கி சத்தத்திலிருந்து பாது காக்கத் தேவையான தூர இடைவெளி உள்ளிட்டவை குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கத் தலைமை வனப் பாதுகாவலர், அறநிலையத் துறை ஆணையர் மற்றும் கால்நடை நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 30 ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தது.

கோயில் ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு நாட்கள் உயர்வு

சென்னை, அக்.2 -அரசு ஊழியர்களுக்கு இணையாக திருக்கோயிலில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு நாட்கள் 240 நாட்களாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், மகப்பேறு விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தி யும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு

திருக்கோயில் தொழிலாளர்கள் யூனியன் பொதுச் செயலாளர் தனசேகர் வரவேற்று நன்றி தெரிவித்துள்ளார்.

தங்கம் சவரனுக்கு ரூ.760 உயர்ந்தது

சென்னை, அக்.2-சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவ ரனுக்கு ரூ.760 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,10,200-க்கும், கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,775-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram