சென்னை விரைவு செய்திகள்
18 Jul 2026, 11:47 pm

கேட்பாரற்ற வாகனங்கள் அகற்றம்: உரிமை கோருவோர் 15 நாட்களுக்குள் அணுக அறிவுறுத்தல்

சென்னை, ஜூலை 18- சென்னை பெருநகர காவல் எல்லைக்குட் பட்ட மயிலாப்பூர், கொளத்தூர், புளியந்தோப்பு, வண்ணாரப்பேட்டை மற்றும் கோயம்பேடு ஆகிய காவல் நிலையப் பகுதிகளில், சாலைகளில் நீண்ட நாட்களாகக் கேட்பாரற்று போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த 1,863 வாகனங்களை காவல்துறையினர் அதிரடியாக அப்புறப்படுத்தியுள்ளனர். அப்புறப்படுத்தப்பட்ட இந்த வாகனங்கள் அனைத்தும் அந்தந்த காவல் நிலைய வளாகங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் குறித்த விவரங்கள், சென்னை பெருநகர மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.chennaicorporation.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள், இந்தச் செய்தி வெளியான நாளிலிருந்து 15 நாட்களுக்குள் உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களை அணுகித் தங்கள் வாகனங்களை உரிமை கோரிக் கொள்ளலாம். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உரிமை கோரப்படாத வாகனங்கள் அனைத்தும், மின்னணு ஏலம் (E-Auction) மூலம் பொது ஏலத்தில் விடப்பட்டு, அகற்றப்படும் என காவல் துறை நிர்வாகம் எச்சரித்துள்ளது. வாகன உரிமையாளர்கள் காலதாமதமின்றி இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்கள் வாகனங்களை மீட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கட்டிட மேஸ்திரியை கடத்தி பணம் பறித்த 2 பேர் கைது

திருவள்ளூர்,ஜூலை 18- திருவள்ளூர் நீதிமன்றம் அருகே கட்டிட மேஸ்திரி ராஜாவை கடத்திச் சென்று தாக்கி, பணம் மற்றும் செல்போன்களைப் பறித்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் 1-ஆம் தேதி, ராஜா பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரை ஏற்றிச் சென்று, புல்லரம்பாக்கம் பகுதியில் வைத்துத் தாக்கி ரூ.6,850 மற்றும் இரு செல்போன்களைப் பறித்தனர். காவல் நிலைய எல்லைப் பிரச்சனையால் புகார் மீது நடவடிக்கை எடுப்ப தில் தாமதம் ஏற்பட்டது. மூன்று மாதங்களுக்குப் பிறகு, பாதிக்கப்பட்டவர் மீண்டும் மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் அலுவலகத்தில் புகார் அளித்ததையடுத்து, புல்லரம் பாக்கம் போலீசார் தீவிர விசா ரணை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, புல்லரம்பாக்கத்தைச் சேர்ந்த ஜாக் என்கிற விஜயராஜ் (போலீஸ்காரர் மகன்) மற்றும் ஆதி ஆகிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை மதுரவாயலில் லாரி மோதி முதியவர் பலி

அம்பத்தூர், ஜூலை 18- சென்னை மதுரவாயலில் பின்னோக்கி வந்த லாரி மோதி முதியவர் உயிரிழந்தது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அரும்பாக்கம் பால விநாயகர் கோயில் 3ஆவது தெருவைச் சேர்ந்தவர் காண்டீபன் (62). இவர் லாரி ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். காண்டீபன், வெள்ளிக்கிழமை இரவு தான் ஓட்டிச் சென்ற லாரியை மதுரவாயல் புறவழிச்சாலையில் உள்ள இணைப்பு சாலையில் நிறுத்துவதற்கு பின்னோக்கி இயக்கினார். அப்போது அங்கு நடந்து வந்து கொண்டிருந்த 65 வயது மதிக்கதக்க ஒரு முதியவர் மீது அந்த லாரி மோதியதில், பலத்தக் காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல் துறையினர் முதியவர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, இறந்தவர் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இசேவை மையங்களில் ஆட்சியர் ஆய்வு

திருவள்ளூர்,ஜூலை 18- திருவள்ளூர் மாவட்ட த்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்பாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற தனியார் பொது இ-சேவை மையங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கவிதா நேரில் ஆய்வு திருவள்ளுர் வட்டத்தி ற்குட்பட்ட திருப்பாச்சூர் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் பொது இ-சேவை மையம், பெரும்பாக்கம் சந்திப்பில் அமைந்துள்ள பொது இ-சேவை மைய ங்களை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.