தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாடி ரயில் போக்குவரத்தை மெட்ரோ ஏற்க ரயில்வே ஒப்புதல்

19 Aug 2026, 11:57 pm
மாடி ரயில் போக்குவரத்தை மெட்ரோ ஏற்க ரயில்வே ஒப்புதல்

மாடி ரயில் போக்குவரத்தை மெட்ரோ ஏற்க ரயில்வே ஒப்புதல்

சென்னை,ஆக.19-சென்னையின் துரித ரயில் போக்குவரத்து (எம்ஆர்டிஎஸ்) எனப்படும் பறக்கும் ரயில் சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன்இணைக்கும் திட்டத்திற்கு ரயில்வே வாரியம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலானதொடர் முயற்சிகளுக்குப் பிறகு, தெற்கு ரயில்வே வசமிருந்த இந்த நகர்ப்புறரயில் அமைப்பைத் தமிழ்நாடு அரசுமுழுமையாகக் கையகப்படுத்துவதற்கான வழி தற்போது பிறந்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த90 நாட்களுக்குள்ளாக, தெற்கு ரயில்வேதனது சொத்துகள் மற்றும் பொதுவானநிர்வாகப் பணிகளைத் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கும். குறிப்பாக,டிக்கெட் வழங்குதல் எம்- யுடிஎஸ் முறை மூலம், தூய்மைப் பணிகள் மற்றும் பாதுகாப்பு போன்ற பொதுவானசெயல்பாடுகளுக்கு சென்னை மெட்ரோதரப்பிலிருந்து ஊழியர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.அதனைத்தொடர்ந்து வரும் 24 மாதங்களுக்கு,தெற்கு ரயில்வேயே தொடர்ந்து ரயில்ளை இயக்கிப் பராமரிக்கும்பணியை இலவசமாக மேற்கொள்ளும்.

வேளச்சேரி ஷெட் பகுதியில் மின்சார ரயில்களைப் பராமரிப்பது, அதற்கான மின் கட்டணத்தை ஏற்பது மற்றும்பணியாளர்களை நியமிப்பது போன்ற பொறுப்புகளைத் தெற்கு ரயில்வே கவனித்துக்கொள்ளும் அதேவேளையில், சென்னை மெட்ரோ நிர்வாகம்முழுமையாகப் பொறுப்பேற்கத் தங்களைமுழுமையாகத் தயார் படுத்திக்கொள்ளும்.

இந்த மாற்றத்தின் மூலம், துரித ரயில்போக்குவரத்து வழித்தடத்தில் உள்ள மொத்தம்21 நிலையங்களில் 19 நிலையங்களுக்குஉட்பட்ட நிலங்கள், நிலையக் கட்டடங்கள்,மின்தூக்கிகள்,நகரும் படிக்கட்டுகள்,நடைமேம்பாலங்கள், தண்டவாளங்கள், சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு அமைப்புகள் உள்ளிட்ட அனைத்துஉள்கட்டமைப்புகளும் கைமாறுகின்றன. முதலாம்கட்ட துரித ரயில் போக்குவரத்து திட்டத்தின் போது முழுமையாக ரயில்வே நிதியைக்கொண்டு உருவாக்கப்பட்ட உள்கட்டமைப்புகளின் தேய்மான மதிப்பைத் தமிழ்நாடுஅரசு செலுத்தும். அதேபோல், இரண்டாம் கட்டம் மற்றும் அதன் நீட்டிப்புப் பணிகளில் மாநில அரசும் தெற்குரயில்வேயும் 2:1 என்ற விகிதத்தில் செலவைப் பகிர்ந்து கொண்டதன் அடிப்படையில், தெற்கு ரயில்வேக்குச் சொந்தமான பங்குத் தொகைக்கான தேய்மான மதிப்பும் மாற்றுக் காலத்தில் செலுத்தப்படும்.மேலும், துரித ரயில் போக்குவரத்து திட்டத்திற்காக முன்பு மாநில அரசு வழங்கிய நிலங்கள் மீண்டும் அரசிடமேதிரும்பப் பெறப்படும். அதேசமயம், முதலாம் கட்டப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட சுமார் 1.296 ஹெக்டேர் ரயில்வே நிலம் மாநிலஅரசுக்குக் குத்தகைக்கு விடப்படவுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.