தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சொத்து வரி கணக்கீட்டில் தவறு குடியிருப்போர் குற்றச்சாட்டு

28 Jun 2026, 11:48 pm
சொத்து வரி கணக்கீட்டில் தவறு   குடியிருப்போர் குற்றச்சாட்டு
<p><strong>சொத்து வரி கணக்கீட்டில் தவறு குடியிருப்போர் குற்றச்சாட்டு</strong></p><p>சென்னை, முகப்பேர் மேற்கு பகுதியில் அமைந்துள்ள 1,840 அடுக்குமாடி குடியிருப்புகளைச் சேர்ந்த மக்கள், பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) தங்களின் சொத்து வரியைத் தவறாகக் கணக்கிட்டுள் ளதாகப் புகார் தெரிவித்துள்ளனர். இந்தத் தவறான மதிப்பீட்டின் காரண மாக, தங்கள் குடியிருப்பு சங்கம் ஆண்டுக்கு சுமார் ₹30 லட்சம் வரை கூடுதல் வரி செலுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள் ளதாக அவர்கள் கூறுகின்றனர். இந்த விவகாரம் குறித்து குடியிருப் பாளர்கள் மார்ச் மாதத்திலிருந்தே மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்துள்ளனர். மார்ச் இறுதியில் வரி செலுத்த வேண்டிய கட்டாயம் இருந்ததால், வேறு வழி யின்றி அந்தத் தொகையைச் செலுத்தி யதாகவும், அதன் பிறகு தேர்தல் முடிந்த பின்னரும் மீண்டும் முயற்சி த்தும் இதுவரை சரியான தீர்வு கிடைக்க வில்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பரப்பளவு கணக்கீட்டில் குளறுபடி வீட்டின் விற்பனைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உண்மையான பரப்பளவை விட, மாநகராட்சி வரி விதிப்பில் கூடுதல் பரப்பளவு காட்டப் பட்டுள்ளது. குடியிருப்பாளர்களின் புகாரின்படி: 1,062 சதுர அடி கொண்ட 2BHK வீடுகளுக்கு, 1,498 சதுர அடிக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. 1,288 சதுர அடி கொண்ட வீடு களுக்கு, 1,728 சதுர அடிக்கு வரி கணக் கிடப்பட்டுள்ளது. 1,657 சதுர அடி கொண்ட வீடுக ளுக்கு, 2,103 சதுர அடிக்கு வரி நிர்ண யிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உண்மையான அளவை விடக் கூடுதல் பரப்புக்கு வரி விதிக்கப் பட்டிருப்பதே தங்களின் புகாருக்குக் காரணம் என அவர்கள் விளக்கு கின்றனர். மாநகராட்சியின் பதில் இந்த பிரச்சனை சமீபத்தில் மாநக ராட்சி மன்றக் கூட்டத்தில் எதிரொ லித்தபோது இதற்குப் பதிலளித்த மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, இந்தச் சிக்கலை முழுமையாக ஆய்வு செய்து விரைவில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் கூறுகையில், “குறிப் பிட்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பு களில் பரப்பளவு கணக்கீட்டில் குளறு படி இருப்பதாகப் புகார் எழுந்துள் ளது. எனவே, அந்த வீடுகளை உரிமையாளர்களின் முன்னிலையி லேயே மீண்டும் நேரில் சென்று அளவீடு செய்து, தவறு இருந்தால் அதைச் சரிசெய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித் துள்ளார். மாநகராட்சி மொத்தம் 14 லட்சத்திற் கும் அதிகமான சொத்துக்களுக்கு வரி வசூலிக்கும் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தச் சம்பவம் குடியிருப்பாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.