தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை குடிநீர் வாரியத்தின் தலைமைபொறுப்பில் பெண் பொறியாளர்கள் சாந்தா ஷீலா நாயரின் தொலைநோக்கு பார்வை சாத்தியமானது

2 hours before
சென்னை குடிநீர் வாரியத்தின்  தலைமைபொறுப்பில் பெண் பொறியாளர்கள் சாந்தா ஷீலா நாயரின் தொலைநோக்கு பார்வை சாத்தியமானது

சென்னை குடிநீர் வாரியத்தின் தலைமைபொறுப்பில் பெண் பொறியாளர்கள் சாந்தா ஷீலா நாயரின் தொலைநோக்கு பார்வை சாத்தியமானது

சென்னை,நவ.10-சென்னையின் குடிநீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகளைப் பராமரிக்கும் அமைப்பில் பெண்கள் நீண்டகாலமாகவே பணியாற்றி வருகிறார்கள். ஆனால், சென்னை குடிநீர் வாரியம் தொடங்கப்பட்டதில் இருந்து முதல்முறையாக, தலைமைப் பொறியாளர்கள் மற்றும் பொறியியல் இயக்குநர்கள் உள்ளிட்ட முக்கியத் தலைமைப் பொறுப்புகளில் தற்போது பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளது வரலாற்றுச் சாதனையாகும்.

இந்தக் குடிநீர் வாரியத்தில் 218 பெண் பொறியாளர்கள் உட்பட மொத்தப் பணியாளர்களில் 56விழுக்காட்டினர் பேர் பெண்கள் எனும் தருணத்தில் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது. 1991ல் உதவிப் பொறியாளராகப் பணியில் சேர்ந்த ஜி. பார்வதி, தற்போது பொறியியல் பிரிவு இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார். அவருடன் 5 பேரைக் கொண்ட அனைத்து உறுப்பினர்களும் பெண் பொறியாளர்கள் ஆவர்.

"மனித வாழ்க்கையோடு நேரடியாகத் தொடர்புடையது என்பதால் நான் சிவில் பொறியியலைத் தேர்ந்தெடுத்தேன். அடிப்படை வசதிகளை வழங்கும் அமைப்பான குடிநீர் வாரியத்தில் பணியில் சேர்ந்தேன். 1990ல் குடிநீர் வாரியத்தில் சில பெண் உதவிச் செயற்பொறியாளர்களே இருந்தனர்; அதன்பிறகு அந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்தது. எனது சில பணிப் பொறுப்புகளில் நுகர்வோருடன் நீண்ட நேரம் நேரடியாக உரையாட வேண்டியிருந்தது" என்று பார்வதி தெரிவித்தார்.

ஆரம்ப கட்டங்களில், பல பெண் பொறியாளர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டியிருந்தது. அவர்களின் நாளின் பெரும்பகுதி பயணிப்பதிலேயே கழிந்தது. உதாரணமாக, தலைமைப் பொறியாளரான கே. உமாவின் வேலை நாள், பணிகளை ஆய்வு செய்வதற்குச் செல்வதும், பின்னர் மேலதிகாரிகளுக்குத் தகவல் அளித்துவிட்டு திரும்புவதுமாக இரண்டு மணி நேரப் பயணத்துடன் தொடங்கும்.

வழிகாட்டுதல்

முன்பு களப்பணிகளிலும் அலுவலக வேலையிலும் மட்டுமே பெண்கள் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரு அமைப்பில், அவர்களின் இந்த வளர்ச்சி படிப்படியான மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது. 1990-களின் மத்தியில் அப்போதைய மேலாண்மை இயக்குநர் சாந்தா ஷீலா நாயர் பெண் பொறியாளர்களுக்கும் இத்தகைய களப்பணிகளை திறந்துவிட்டபோது இந்த மாற்றம் வேகம் பெற்றது.

அவர்களின் ஆரம்பகால பணிகளில் பெரும்பாலானவை அவசரப் புகார்களுக்குத் தீர்வுகாண்பதும், பராமரிப்புப் பணிகளுக்காகக் களஆய்வு செய்வதுமே ஆகும். புதிய குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளுக்கான விண்ணப்பங்களைக் கண்காணிக்கும் அதே வேளையில், பெரும்பாலானோர் பொதுமக்கள் கூட்டத்தையும் அவர்களின் குறைகளையும் கையாள வேண்டியிருந்தது.

"ஆரம்பத்தில் இது மிகவும் சவாலாக இருந்தது" என்று தலைமைப் பொறியாளர் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) எம். கீதா நினைவு கூர்ந்தார். காலப்போக்கில் பெண் பொறியாளர்கள் இச்சூழலை எதிர்கொள்ளக் கற்றுக்கொண்டனர். தொழில்நுட்ப மற்றும் முடிவெடுக்கும் பொறுப்புகளில் பெண்களை ஏற்றுக்கொள்வதில் சக ஊழியர்களும் பொதுமக்களும் மெல்ல மெல்ல மாறத்தொடங்கினர்.

தொழில்நுட்ப வளர்ச்சியால் பணியின் தன்மை மாறியுள்ள அதே வேளையில், அதன் அளவும் அதிகரித்துள்ளது. தற்போது, மொபைல் போன்கள் மூலம் பொறியாளர்கள் அதிகாலை முதலே கள நிலவரங்களைப் பகிர்ந்துகொள்ள முடிகிறது. தலைமைப் பொறியாளரும் திட்ட இயக்குநருமான கே. சித்ரா கூறுகையில், சில நேரங்களில் பணிப் பொறுப்புகள் தொடர்ந்து இருக்கும் எனக் குறிப்பிட்டார். இருப்பினும், பணி-வாழ்க்கை சமநிலை என்பது ஒரே சூத்திரத்தைப் பின்பற்றுவதில்லை; அது ஒவ்வொருவரின் திறன் மற்றும் சூழ்நிலையைப் பொறுத்தது என்றும் அவர் கூறினார்.

மீஞ்சூர் முதல் பேரூர் வரையிலான கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்களில் பணியாற்றிய தலைமைப் பொறியாளர் ஜே.சுகந்தி கூறுகையில், தனது பணி புதிய பகுதிகளுக்கு அழைத்துச் சென்றதாகவும், சவாலான திட்டங்களை அறிமுகப்படுத்தியதாகவும் தெரிவித்தார். தொழில்நுட்ப முன்னேற்றங்கள் கடல்நீரைக் குடிநீராக்கும் மாற்று நீர் ஆதாரங்களை அறிமுகப்படுத்தியுள்ளன; மீட்டரிங் மூலம் தரவுச் சேகரிப்பையும் மேம்படுத்தியுள்ளன என்று அவர் கூறினார்.

"சவாலான களப்பணிகளுக்கும் தலைமைப் பொறுப்புகளுக்கும் பெண்கள் பொருத்தமானவர்கள் அல்ல என்றே கருதப்பட்டனர். ஆனால் அவர்கள் பணியின் ஒவ்வொரு அம்சத்திலும் தங்கள் திறமையை நிருபித்துள்ளனர். நமது அர்ப்பணிப்பும் செயல்படும் திறனுமே முக்கியமே தவிர, நமது பாலினம் அல்ல" என்று பெண் பொறியாளர்கள் உறுதியளிக்கின்றனர்.நன்றி: தி இந்து

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.