கடந்த கால அரசின் தவறுகளை தவெக அரசும் செய்யலாமா ?குடிநீர் வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் அ.சவுந்தரராசன் கேள்வி
19 Aug 2026, 11:55 pm

கடந்த கால அரசின் தவறுகளை தவெக அரசும் செய்யலாமா ?குடிநீர் வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் அ.சவுந்தரராசன் கேள்வி

சென்னை, ஆக. 19 -பணி நிரந்தரம் கோரி புதனன்று (ஆக.19) சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியதலைமையகம் முன்பு தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.வாரியத்தில் 3 முதல் 20 அண்டுகள் பணியாற்றும் களப்பணியாளர்கள், சிலிட் ஆட்டோ, ஜெட்ராடிங், சூப்பர்சக்கர் ஓட்டுநர்கள் மற்றும் வால்வு ஆப்ரேட்டர்களை உள்ளிட்ட அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,கான்ட்ராக்ட் என்ற பெயரில் நடைபெறும் முறைகேடுகளை விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும், தொழிலாளர்களை வஞ்சிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், புழல் 300 எம்எல்டிதிட்டம், வீராணம் திட்டத் தொழிலாளர்களுக்கு பணியாணை வழங்க வேண்டும், மக்களுக்கு நாள்தோறும் 150 லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவேண்டு என வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

அ.சவுந்தரராசன்

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியதொழிலாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பேசியசிஐடியு அகில இந்திய துணைத்தலைவர் அ.சவுந்தரராசன், “ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த கோரி நாடு முழுவதும் போராட்டங்கள்வெடித்து வருகின்றன.

நிரந்தர தொழிலாளர்கள் செய்யும் அதே வேலையை செய்யும் ஒப்பந்த தொழிலாளிகளுக்கு அதே அளவுஊதியத்தை தர மறுப்பது ஏன், பணி நிரந்தரம் செய்ய மறுப்பது ஏன், 26 ஆயிரம் ரூபாய் குறைந்தபட்ச ஊதியம்வழங்க வேண்டும் என்று அரசே தீர்மானித்து விட்டு தர மறுப்பது ஏன்?”என்று கேள்வி எழுப்பினார்.

“தனியார்மயம், ஒப்பந்த முறை

யால் சமூக நீதி கேள்விக்குள்ளாகிறது. கடந்தகால ஆட்சியாளர்களின் தவறான கொள்கையால்தான் புதிய அரசுஅமைத்துள்ளது. அதிலிருந்து மாறுபட்டு தவெக அரசு செயல்பட வேண்டும். புதிய அரசு அமைந்து 100 நாட்கள் கடந்து விட்டது. ஒப்பந்த முறையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

“ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்வதற்கு மாறாக, புதிதாக ஒப்பந்த முறையில் ஆட்களை எடுப்பது எதிர்

மறையான விளைவுகளை உருவாக்கும். பணி நிரந்தரம் உள்ளிட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் அரசு போராட்டங்களை எதிர்கொள்ள நேரிடும்” என்றும்அவர் கூறினார்.இதனைத் தொடர்ந்து சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய மேலாண்மைஇயக்குநர் ஆனந்தை சந்தித்து சங்கநிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்து பேசினர்.சங்கத்தின் தலைவர் க.பீம்ராவ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளர்மு.பழனி உள்ளிட்டோர் பேசினர்.