மூலக்கடை வந்தடைந்த ‘சேர்வராயனுக்கு உற்சாக வரவேற்பு
20 May 2026, 1:31 am

மூலக்கடை வந்தடைந்த ‘சேர்வராயனுக்கு உற்சாக வரவேற்பு

சென்னை, மே 19- சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 3இல் சேர்வராயன் என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக பணியை முடித்து மூலக்கடை மெட்ரோ நிலை யத்தை வந்தடைந்தது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், கட்டம் 2இல் 118.9 கி.மீ. நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிட்டு பணிகள் முழுவீச்சில் நடை பெற்று வருகிறது.

மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 3இல் மாத வரம் பால் பண்ணை முதல் கெல்லீஸ் வரை முதல் 9 கி.மீ. நீளத்திற்கு சுரங்க ப்பாதை அமைக்கும் பணியை டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்தப் பணிக்காக மொத்தம் 7 சுரங்கப்பாதை தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், ‘சேர்வராயன்’ என்று பெயரி டப்பட்ட சுரங்கப்பாதை தோண்டும் இயந்திரம் மாதவரம் நெடுஞ்சாலை ரயில் நிலையத்திலிருந்து மூலக்கடை ரயில் நிலையம் வரை கீழ் வழித்தடம் பகுதியில் சுரங்கம் தோண்டும் பணியைத் தொடங்கியது.

மொத்தம் 824.6 மீட்டர் நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணியை முடித்து மூலக்கடை மெட்ரோ நிலையத்தை வந்தடைந்தது.

ஒட்டுமொத்தமாக, சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2இல் இதுவரை 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் தனது பணியை முடித்து இலக்குகளை வெற்றிகரமாக எட்டியுள்ளது. மாதவரம் நெடுஞ்சாலை மற்றும் மூலக்கடைக்கு இடையேயான சுரங்கப் பாதை பகுதி, பல்வேறு பெரும் சவால் கள் நிறைந்த மிகக் கடினமான ஒரு பகுதியாகும்.

உதாரணமாக, சேர்வார யன் சுரங்கம் தோண்டும் இயந்திரம் பக்கிங்காம் கால்வாய்க்கு அடியிலும், எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைக்கு அடியிலும், 14க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகளை கடந்தும் சுரங்கம் அமைக்கும் பணியை முடித்தது.

இதனால் பொது மக்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் அல்லது தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்படாத வண்ணம், அவர்களுக்கு மாற்றுத் தண்ணீர் வசதிகளை உடனுக் குடன் செய்து கொடுத்து இந்த சவா லான பணி வெற்றிகரமாக முடிக்கப் பட்டுள்ளது.

சுரங்கப்பாதை அமைக்கும் பணி முழுவதும், அனுமதிக்கப்பட்ட குறைந்தபட்ச நில அதிர்வு மற்றும் மாற்றங்களுக்குள் மிகச் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டது. மேலும், இந்த பணி நடைபெற்ற காலம் முழுவதும் விரி வான கண்காணிப்புக் கருவிகள் மூலம் தொடர் கண்காணிப்பு உறுதிசெய்யப் பட்டது.