மெட்ரோ ரயில் பூவிருந்தவல்லி - வடபழனி மஞ்சள் வழித்தடக் கட்டண விவரங்கள் வெளியீடு!
29 Sept 2026, 11:56 pm

மெட்ரோ ரயில் பூவிருந்தவல்லி - வடபழனி மஞ்சள் வழித்தடக் கட்டண விவரங்கள் வெளியீடு!

சென்னை, செப்.29-சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்இரண்டாம் கட்ட மெட்ரோதிட்டத்தின்கீழ் பூவிருந்தவல்லி முதல்வடபழனி வரையிலான ‘மஞ்சள்வழித்தடத்திற்கான’ பயணக் கட்டணப்பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பயணிகள் தங்களின்பயண தூரத்திற்கு ஏற்ப மிகக் குறைந்தகட்டணத்தில் பயணிக்கும் வகையில்இக்கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

பூவிருந்தவல்லி புறவழிச்சாலை மெட்ரோ நிலையத்தை தொடக்கப் புள்ளியாகக் கொண்டு இயக்கப்படும் இந்தவழித்தடத்தில், குறைந்தபட்சப் பயணக் கட்டணமாக ரூ.10-ம், அதிகபட்சப் பயணக் கட்டணமாக ரூ.40-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கட்டண விவரம்

ரூ.10 கட்டணம்: பூவிருந்தவல்லி புறவழிச்சாலையிலிருந்து பூவிருந்தவல்லி பேருந்து நிலையம் மெட்ரோவரை ரூ.20 கட்டணம்: பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனை, கரையான்சாவடி, குமணன்சாவடி மற்றும் காட்டுப்பாக்கம் மெட்ரோ நிலையங்கள்.ரூ.30கட்டணம்: அய்யப்பன்தாங்கல், தெள்ளியரகரம், போரூர் புறவழிச்சாலை மற்றும் போரூர் சந்திப்பு மெட்ரோ நிலையங்கள்.ரூ.40 கட்டணம்:பூவிருந்தவல்லி புறவழிச்சாலையிலிருந்து இறுதி நிலையமான வடபழனி மெட்ரோ நிலையம் வரை.பூவிருந்தவல்லி, போரூர், காட்டுப்பாக்கம் மற்றும் அய்யப்பன்தாங்கல் போன்ற வேகமாக வளர்ந்து வரும் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வடபழனி பகுதிக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பணி மற்றும் கல்வி நிமித்தமாகப் பயணிக்கின்றனர் என்று குறிப்பிடத்தக்கது.