முந்தய பக்கம்

இனி பழைய மெட்ரோ கார்டுகள் செல்லாது - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!

30 Apr 2026, 12:26 pm
இனி பழைய மெட்ரோ கார்டுகள் செல்லாது - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!
<p>சென்னையில் பழைய மெட்ரோ கார்டுகள் நாளை முதல் செல்லாது என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.</p><p>இதன்படி, நாளை முதல் “சிங்கார சென்னை அட்டை” முழுமையாக நடைமுறைக்கு வருகிறது. புதிய ஒருங்கிணைந்த பயண அட்டையாக அறிமுகமாகும் இந்த அட்டை மூலம் மெட்ரோ சேவைகளை பயணிகள் பயன்படுத்தலாம்.</p><p>மேலும், பழைய மெட்ரோ கார்டுகளில் உள்ள இருப்புத் தொகையை புதிய “சிங்கார சென்னை அட்டை”யில் மாற்றிக்கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p>பயணிகள் விரைவாக புதிய அட்டையைப் பெற்றுக்கொள்ளவும், சேவையில் இடையூறு ஏற்படாத வகையில் மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது</p>
Share
FacebookXWhatsAppTelegram