தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பறக்கும் ரயில் நிலையங்களைப் பராமரிக்க ரூ.150 கோடி நிதி தேவைப்படும்: மெட்ரோ

yesterday
பறக்கும் ரயில் நிலையங்களைப் பராமரிக்க ரூ.150 கோடி நிதி தேவைப்படும்: மெட்ரோ

பறக்கும் ரயில் நிலையங்களைப் பராமரிக்க ரூ.150 கோடி நிதி தேவைப்படும்: மெட்ரோ

சென்னை,நவ.12-தெற்கு ரயில்வேயிடம் இருந்து பறக்கும்ரயில் (எம்ஆர்டிஎஸ்) சேவையைக் கையகப்படுத்திய பிறகு, இரண்டு ஆண்டுகால மாற்றத்திற்கான காலகட்டத்தில் ரயில் நிலையங்களைப் பராமரிப்பதற்காகத் தமிழக அரசிடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (சிஎம்ஆர்எல்) சுமார் 150 கோடிரூபாய் நிதி கோரியுள்ளது.

தமிழக அரசும் தெற்கு ரயில்வேயும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட உடனேயே இந்த இரண்டு ஆண்டுகால மாற்றத்திற்கான கட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பறக்கும் ரயில் திட்டத்தைச் சென்னைமெட்ரோ ரயில் நிறுவனம் கையகப்படுத்த ரயில்வே வாரியம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஒப்புதல் அளித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புரிந்துணர்வுஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துப் பணிகளைத் தொடங்கியதுதற்போது, நிதி இழப்பீடு தொடர்பாக ஒருமித்த கருத்தை எட்டுவதற்காகத் தமிழகஅரசுக்கும் தெற்கு ரயில்வேக்கும் இடையேபேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. திட்டமிட்டபடி இந்த ஆண்டு டிசம்பர்மாதத்திற்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானால், பறக்கும் ரயில் நிலையங்களின் பராமரிப்பை மேம்படுத்தும் பணிகளைச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் உடனடியாகத் தொடங்கவேண்டியிருக்கும்.

இந்த 150 கோடி ரூபாய் நிதியானது அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்புப் பணியாளர்களை நியமித்தல், தூய்மைப் பணி நிறுவனங்களை ஒப்பந்தம் செய்தல், பயணச்சீட்டு விநியோகப் பணிகள் மற்றும் பழுதடைந்த மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகளைச் சீரமைத்தல் ஆகியவற்றுக்காகப் பயன்படுத்தப்படும் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாற்றத்திற்கான காலகட்டம் தொடங்கும்போது இந்த நிதியை விடுவிக்கத் தமிழக அரசு பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

பறக்கும் ரயில் நிலையங்கள் மிகவும் பிரமாண்டமான பரப்பளவைக் கொண்டிருப்பதால், ஒவ்வொரு நிலையத்திலும் பயணிகள் அதிகம் வந்து செல்லும் குறிப்பிட்ட பகுதியை முதலில் அடையாளம் கண்டு, அப்பகுதியை மேம்படுத்துவதிலும், அங்குப் பாதுகாப்பு மற்றும்தூய்மைப் பணியாளர்களை நிறுத்துவதிலும் மெட்ரோ நிறுவனம் கவனம் செலுத்தவுள்ளது.

இது குறித்து மெட்ரோ வட்டாரங்கள்கூறுகையில், "நாங்கள் பொறுப்பேற்றவுடன், அனைத்து முக்கிய இடங்களிலும் போதிய வெளிச்சம் மற்றும் பாதுகாப்பு இருப்பதை முதலில் உறுதிசெய்வோம். மேலும், அனைத்து நிலையங்களிலும் உள்ள மின்தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் முறையாகஇயங்குவதை உறுதி செய்வோம்" எனத் தெரிவித்தன. இந்தஅடிப்படைப் பிரச்சினைகள் குறித்துப் பறக்கும் ரயில் பயணிகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகாததால், பறக்கும்ரயில் செயல்பாடுகளை மெட்ரோ நிறுவனம் கையகப்படுத்துவதற்கு எதிர்பார்த்ததை விடக் கூடுதல் கால அவகாசம் ஆகலாம் எனத் தெரிகிறது. பராமரிப்பு நிறுவனங்களைத் தேர்வு செய்ய ஒப்பந்தப்புள்ளிகள் கோரி, அப்பணிகளைத் தொடங்குவதற்கு மெட்ரோ நிறுவனத்திற்குக்குறைந்தபட்சம் 3 முதல் 5 மாதங்கள் வரை தேவைப்படும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.