தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புடவை, துப்பட்டா கதவில் சிக்கினால் ரயிலை நிறுத்தும் புதிய தொழில்நுட்பம் சென்னை மெட்ரோவில் தொடக்கம்!

17 May 2026, 2:06 am
புடவை, துப்பட்டா கதவில் சிக்கினால்  ரயிலை நிறுத்தும் புதிய தொழில்நுட்பம்  சென்னை மெட்ரோவில் தொடக்கம்!

புடவை, துப்பட்டா கதவில் சிக்கினால் ரயிலை நிறுத்தும் புதிய தொழில்நுட்பம் சென்னை மெட்ரோவில் தொடக்கம்!

சென்னை, மே 16 சென்னை மெட்ரோ ரயில் பயணி களின் பாதுகாப்பை அடுத்த கட்டத் திற்கு எடுத்துச் செல்லும் வகையில், கதவுகளில் ஆடைகள் சிக்கி இழுத்துச் செல்லப்படுவதைத் தடுக்கும் “இழு படுதலைத் தடுக்கும் வசதி” (Anti-Drag Feature) என்ற புதிய தொழில்நுட்பம் சனிக்கிழமை (மே 16) தொடங்கி வைக்கப்பட்டது.

சென்னை மெட்ரோ ரயில் நிறு வனத்தின் இயக்குநர் மனோஜ் கோயல் இந்த அதிநவீன வசதி கொண்ட முதல் மெட்ரோ இரயிலைக் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

இது எப்படிச் செயல்படுகிறது? பொதுவாக மெட்ரோ ரயில் கதவு கள் மூடும்போது கை, பை போன்ற பெரிய பொருட்கள் சிக்கினால் கதவு கள் தானாகத் திறக்கும் தொழில்நுட்பம் ஏற்கெனவே உள்ளது.

ஆனால், தற்போது இந்தியச் சூழலுக்கு ஏற்ப பிரத்யேகமாக இந்த புதிய “இழுபடு தலைத் தடுக்கும் வசதி” சேர்க்கப் பட்டுள்ளது.

இதன் மூலம், பெண்களின் புடவை முந்தானை, துப்பட்டா (ஷால்) அல்லது பைகளின் மெல்லிய பட்டைகள் போன்ற பொருட்கள் எதிர்பாராத விதமாக கதவுகளுக்கு இடையே சிக்கி இழுக்கப்பட்டால், இந்தத் தொழில் நுட்பம் அதை உடனே கண்டுபிடித்து விடும்.

உடனே ரயிலின் பிரேக்குகள் தானாகவே செயல்பட்டு ரயில் உடனடியாக நிறுத்தப்படும்.

பின்னர், சிக்கிய பொருளை எடுப்பதற்காக அந்த குறிப்பிட்ட கதவு மட்டும் திறக்க ப்பட்டு, பொருள் எடுக்கப்பட்ட பின் இரயில் மீண்டும் பாதுகாப்பாகப் புறப்படும்.

உலகிலேயே முதல் முறை! இந்திய மெட்ரோ வரலாற்றிலேயே இந்த வசதி அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

அது மட்டுமல்லாமல், சமீபத்திய சர்வ தேச விதிகளின்படி (EN 14752:2025) உலகிலேயே முதல் முறையாக இந்தத் தொழில்நுட்பம் சென்னை மெட்ரோ வில் தான் பயன்படுத்தப்பட் டுள்ளதாகக் கருதப்படுகிறது.

அடுத்தடுத்த ரயில்களில்... தற்போது ஒரு ரயிலில் இந்த வசதி தொடங்கப்பட்டுள்ள நிலையில், கட்டம்-1 இல் இயக்கப்பட்டு வரும் மீதமுள்ள 51 மெட்ரோ ரயில்களிலும் இந்த இழுபடுதலைத் தடுக்கும் வசதி யைப் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

அனைவருக்கும், குறிப்பாகப் பெண் பயணிகளுக்குப் பாதுகாப்பான பயணச் சூழலை உருவாக்கச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எப்போதும் உறுதியாக உள்ளது என்ப தற்கு இந்த முயற்சி ஒரு சான்றாகும்.

இந்தத் தொடக்க விழாவில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அதிகாரி கள் மற்றும் ஆலோசகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.