தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மெட்ரோ பயணிகளின் வசதிக்காக 55 புதிய நகரும் படிக்கட்டுகள் அறிமுகம்

16 May 2026, 2:04 am
மெட்ரோ பயணிகளின் வசதிக்காக   55 புதிய நகரும் படிக்கட்டுகள் அறிமுகம்
<p><strong>மெட்ரோ பயணிகளின் வசதிக்காக 55 புதிய நகரும் படிக்கட்டுகள் அறிமுகம்</strong></p><p>சென்னை, மே 15- சென்னை மெட்ரோ ரயில் முதற் கட்டத் திட்டம் மற்றும் அதன் விரிவாக்கப் பாதைகளில் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில், 27 முக்கிய நிலையங்களில் கூடுதலாக 55 புதிய நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள் ளன. பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம், சென்னை மெட்ரோவில் உள்ள மொத்த நகரும் படிக்கட்டுகளின் எண்ணிக்கை 226-லிருந்து 281-ஆக உயர்ந்துள்ளது. இந்தப் புதிய வசதியை ஒரு மெட்ரோ பயணியே முன்னின்று தொடங்கி வைத்தார். இந்தத் தொடக்க விழாவில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்கு நர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்ற னர். நிலையங்கள் வாரியாகப் பார்க்கும் போது, திருமங்கலம் மற்றும் அண்ணா நகர் கிழக்கு நிலையங்களில் தலா 5 படிக் கட்டுகளும், வடபழனியில் 4 படிக்கட்டு களும், ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் டவர் மற்றும் அரசினர் தோட்டம் ஆகிய இடங்களில் தலா 3 படிக்கட்டுகளும் கூடு தலாக நிறுவப்பட்டுள்ளன. இவை தவிர கிண்டி, சென்ட்ரல், எழும்பூர், விமான நிலை யம் உள்ளிட்ட பல முக்கிய நிலையங்க ளிலும் தலா இரண்டு புதிய படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் இயங்காத இரவு நேரங்களில் மட்டுமே இந்தப் பணிகளைச் செய்ய வேண்டியிருந்ததாலும், ஏற் கெனவே உள்ள வசதிகளுக்குப் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டி யிருந்ததாலும், இந்தப் பணி ஒரு சவாலாக இருந்தது. இருப்பினும், சென்னை மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த போக்கு வரத்து சேவையை வழங்கும் நோக்கில், மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சிறப்புக் குழு வினர் இந்தப் பணிகளைத் தடையின்றி முடித்துள்ளனர். இதன் மூலம் முதிய வர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் மெட்ரோ நிலையங்களைப் பயன்படுத்துவது இனி மேலும் எளிதாகும் என்று சென்னை மெட்ரோ நிறுவனம் தெரி வித்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.