தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இடதுசாரிகளின் எதிர்ப்புக்கு மேயரின் பொறுப்பற்ற பதில்

27 Sept 2026, 2:33 am
இடதுசாரிகளின் எதிர்ப்புக்கு மேயரின் பொறுப்பற்ற பதில்

இடதுசாரிகளின் எதிர்ப்புக்கு மேயரின் பொறுப்பற்ற பதில்

சென்னை. செப். 26 -கட்டண உயர்வு தொடர்பாக இடதுசாரி உறுப்பினர்கள் எழுப்பிய ஆட்சேபனைக்கு பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பொறுப்பற்ற முறையில் பதிலளித்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் வெள்ளியன்று (செப்.25) ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் 21 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

அதில், தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் செவிலி யர் மாணவிகள் மாநகராட்சி மருத்துவ மனைகளில் பயிற்சி பெறும் கட்டணத்தை உயர்த்தி மாநில அரசு அரசாணை (எண்.778, நாள் 6.7.2026) வெளியிட்டுள்ளது.

அதாவது, டிப்ளமோ நர்சிங் பயிற்சி கட்டணம் ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து 3 ஆயிரமாகவும், பிஎஸ்சி நர்சிங் கட்டணம் 3ஆயிரம் ரூபாயிலிருந்து 6 ஆயிர மாகவும், எம்எஸ்சி நர்சிங் பயிற்சிக்கு 6 ஆயிரத்திலிருந்து 7 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும் என்ற தீர்மானமும் கொண்டு வரப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குழுத் தலைவர் ஆர்.ஜெயராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ரேணுகா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த கட்டண உயர்வு மாணவிகள்தான் செலுத்த வேண்டி வரும். எனவே, இந்த தீர்மானத்தை நிறைவேற்ற கூடாது என்று கூறினர். இடதுசாரி மாமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று தீர்மானத்தை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேயரின் முறையற்ற பதில்

எதிர்ப்புக்கு பதிலளிக்காத மேயர் ஆர்.பிரியா, நீங்கள் கூட்டணியில் தானே உள்ளீர்கள் . அங்கே போய் கேளுங்கள் என்று முறையற்ற வகையில் பதில் அளித்தார். மேலும், திமுக, அதிமுக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சி மாமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயராமன், தவெக அரசை எதிர்ப்பதாக சட்டமன்றத்திலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் கூறும் திமுக, தவெக அரசின் அரசாணைக்கு இசைவளித்து தீர்மானம் நிறைவேற்றுகிறது. அதற்கு அதிமுக, பாஜக, அமமுக போன்ற கட்சிகள் ஆதரிக்கின்றன. மக்களுக்காக மாமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் இடதுசாரிகள் மட்டுமே வலுவான குரல் எழுப்புகின்றனர் என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.