மக்கள் பயன்பாட்டிற்கு பூங்கா திறப்பு
2 Nov 2026, 12:18 am
<p><strong>மக்கள் பயன்பாட்டிற்கு பூங்கா திறப்பு</strong></p><p>சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலம், வார்டு-145க்குட்பட்ட நெற்குன்றம், மாதா கோவில் தெருவில் மாநகராட்சி மூலதன நிதியில் ரூ.1.95 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பூங்காவை மேயர் பிரியா ஞாயிறன்று மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தெற்கு வட்டார துணை ஆணையாளர் அஃதாப் ரசூல், மண்டலக்குழுத் தலைவர் நொளம்பூர் வே.ராஜன், மாமன்ற உறுப்பினர் த.சத்தியநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
