தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

23 Jul 2026, 9:49 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

மெரினா கடற்கரையை மூடியது தமிழக அரசு!

சென்னை, ஜூலை 23 - நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராகவும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி யும் தில்லியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரு கின்றன. இதனால் அங்கு பொதுப் போக்குவரத்து ஸ்தம்பித் துள்ளது; பல மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டு, இணைய சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது. போராடும் இளைஞர் களை அப்புறப்படுத்த போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் வருகின்றனர். இந்நிலையில், தில்லியில் மாணவர்கள் மீதான அடக்கு முறைக்குக் கண்டனம் தெரிவித்து, நாட்டின் பல பகுதிகளி லும், குறிப்பாக தமிழகத்திலும் இளைஞர்கள் மற்றும் மாணவ அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றன. இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரைக்குப் பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை அனைத்து நுழைவாயில்களும் மூடப்பட்டு, போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இளைஞர்கள் கடற் கரையில் கூடிப் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது மேற்கொள்ளப் பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களை விமர்சிப்பது அமைதியை குலைப்பது ஆகாது!

சென்னை உயர் நீதிமன்றம் கருத்து சென்னை, ஜூலை 23 - அரசையோ, அமைச்சர்களையோ விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றம் அல்ல; அது சமூகத்திற்கு இடையே பகை, வெறுப்பை ஊக்குவிப்பதாகக் கூற முடி யாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜனநாயகத்தில் மாறுபட்ட கருத்துகளின் குரல் மதிக்கப்பட வேண்டும் என்றும், மதம், இனம், மொழி, சமூகம் அல்லது சமூகங்களுக்கு இடையே பகை, வெறுப்பை உரு வாக்க வாய்ப்புள்ளதாகவோ, ஊக்குவிப்பதாகவோ இதைக் கூற முடியாது என்றும் உயர் நீதிமன்றம் கருத்து தெரி வித்துள்ளது. இதன் அடிப்படையில், பழனி கோயில் நில மோசடி விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் குறித்து அவதூறு பரப்பிய தாகக் கைது செய்யப்பட்டிருந்த வினோத் சூர்யா என்ப வரை ஜாமீனில் விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

“நீட் தேர்வே மோசடிதான்”: உதயநிதி ஸ்டாலின் சாடல்

சென்னை: ‘தி இந்து’ நாளிதழில் வெளியான தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினின் கட்டுரையைச் சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தமது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நீட் தேர்வில் மட்டும் மோசடியல்ல, நீட் தேர்வே ஒரு மோசடிதான் என்பதைப் படம்பிடித்துக் காட்டுவதாக இந்தக் கட்டுரை உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற, அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக் கனவைச் சிதைப்பதே ‘நீட்’ போன்ற நுழைவுத் தேர்வு களின் உண்மையான நோக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதிமுக கண்டனம்! தமிழகத்தில் போராடும் மாணவர்கள் அராஜகமாக கைது செய்யப்படுவதற்கு, அதிமுக ஐடி விங் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. “எங்களுக்கு ஜனநா யகன் வேண்டாம், ஜனநாயகம் வேண்டும்! போராடும் மக்களை அவதூறாகப் பேசி குண்டுகட்டாகக் கைது செய்வது தான் ஜனநாயகமா? வீதியில் இறங்கி மக்கள் போராடும் நிலையில் மக்களோடு நிற்க வேண்டிய ஜனநாயகன் எங்கே போனார்? பதில் இருக்கிறதா?” என்று அதிமுக ஐடி விங் தனது பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளது. மாணவர்களோடு கைகோர்த்து நிற்கிறேன் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடும் இந்திய மாண வர்களின் கைகளோடு தான் கைகோத்து நிற்பதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். அதிகார அடக்கு முறைக்கு எதிரான குரலுக்குப் பெருமை சேர்ப்பதே

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.