சென்னை விரைவு செய்திகள்
2 Nov 2026, 11:16 pm

வ.சுப்பையா சிலை புறக்கணிப்புசிபிஎம் கடும் கண்டனம்

புதுச்சேரி, நவ. 2–புதுச்சேரி விடுதலை நாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்ட வேளையில், பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திற்கு எதிராகச் செந்தீயாய்ப் போராடிய விடுதலைப் போராட்டத் தளபதியும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவருமான தோழர் வ.சுப்பையாவின் திருவுருவச் சிலை திட்டமிட்டு இருளில் மூழ்கடிக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலக் குழு வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் எஸ். ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தெற்கு ஆசியாவிலேயே முதன்முறையாக 8 மணி நேர வேலை உரிமையை வென்றெடுத்த புரட்சிகர மண்ணின் அடையாளத்தை இன்றைய ஆட்சியாளர்கள் முற்றிலும் தொலைத்துவிட்டனர். சுதந்திர தின விழாவிலேயே துறைச் செயலாளர்கள் பங்கேற்காமல் தவிர்ப்பதும், தியாகி வ.சுப்பையாவின் சிலையைப் புறக்கணிப்பதும் ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கையே காட்டுகிறது.கடந்த 2004-இல் சட்டப்பேரவையில் அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி ஜூலை 30 தியாகிகளுக்கு நினைவகம் அமைக்கப்படவில்லை. பஞ்சாலைகளை மீட்க நடவடிக்கை எடுக்காத அரசு, புதுச்சேரியின் தியாக வரலாற்றைப் பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டத்தில் உடனடியாகச் சேர்க்க வேண்டும். ஜூலை 30 தியாகிகளுக்கு உடனடியாக நினைவுச்சின்னம் எழுப்ப வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நிலை 1 ஆக தரம் உயர்த்தசமூக நீதித்துறை பள்ளிஆசிரியர்கள் கோரிக்கை

சிதம்பரம், நவ. 2-தமிழகத்தில் சமூக நீதித்துறை பள்ளிகளில் பணிபுரியும் கம்ப்யூட்டர் பயிற்றுநர்களின் நிலை 2 பணியிடங்களை நிலை 1 ஆக தரம் உயர்த்த வேண்டும் என ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் கடந்த 2019- ஆண்டில் 1853 கம்ப்யூட்டர் பயிற்றுநர் நிலை 2 பணியிடங்கள், நிலை 1 ஆக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. ஆனால், சமூகநீதிதுறை பள்ளிகளில் 58, பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் 10 என மொத்தம் 68 பணியிடங்கள் இதுவரை தரம் உயர்த்தப்படாமல் உள்ளன.இதனால், கடந்த 7 ஆண்டுகளாக பட்டதாரி ஆசிரியர் நிலைக்கு இணையான பணிகளை மேற்கொண்டு வரும் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 68 கம்ப்யூட்டர் பயிற்றுநர் நிலை 2 பணியிடங்களையும் நிலை 1 ஆக தரம் உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் திறப்பு

உளுந்தூர்பேட்டை, நவ.2-கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் எலவனாசூர்கோட்டையில் சிஐடியு அப்துல்கலாம் ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிலாளர்கள் சங்கம் திறப்பு விழா நடைபெற்றது.

சங்கத் தலைவர் எ.ஆராச்சி தலைமை தாங்கினார். கிளை செயலாளர் எ.ராஜிவ்காந்தி வரவேற்றார்.

சங்க பலகையை ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் பி.ஏழுமலை திறந்து வைத்தார். அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்க மண்டல பொருளாளர் வி.முருகன் கொடியேற்றினார்.

இந்நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு எம்.செந்தில், சிபிஐ(எம்) ஒன்றிய செயலாளர் வி.ரகுராமன், அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்க மண்டல துணை செயலாளர் கே.கந்தசாமி, தியாகதுருகம் ஆட்டோ சங்க தலைவர் எம்.நாயகம் ஆகியோர் பேசினர்.ஆட்டோ சங்க பொருளாளர் கே.அன்பழகன் நன்றி கூறினார்.

ரயிலில் அடிபட்டு ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு

அம்பத்தூர், நவ. 2-அம்பத்தூர் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன் (40), ஞாயிற்றுக்கிழமை இரவுஅயப்பாக்கத்தில் ஆட்டோவை நிறுத்திவிட்டு அண்ணனூர் ரயில் நிலையம் வழியாக வீட்டிற்குச் செல்லத் தண்டவாளத்தைக் கடந்துள்ளார்.

அப்போது சென்னை நோக்கி வந்த விரைவு ரயில் மோதியதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆவடி இருப்புப்பாதை காவல்துறையினர் உடலைக் கைப்பற்றித் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதுடன், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இணையவழி வீட்டுமனை பட்டா குறவன் பழங்குடி மக்கள் கோரிக்கை

ராணிப்பேட்டை, நவ. 2 –தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டசெயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட தலைவர் ஜி. மகாலிங்கம் தலைமையில் பள்ளூரில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் குறவன் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்து

ரைக்க வேண்டும் என சட்டமன்றத்தில் வலியுறுத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் டி.லதாவுக்கும், அக்கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்திய அக்கட்சியின் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்தல். குறவன் இனத்தை பழங்குடி பட்டியலில் சேர்க்க ஒன்றிய அரசுக்குப் பரிந்துரை செய்த தமிழகமுதல்வர் சி. ஜோசப் விஜய் லட்சக்கணக்கான குறவன் இனமக்களின் சார்பில் நன்றி தெரிவித்தல். அரக்கோணம் வட்டம், பள்ளூர் கிராமத்தில் சர்வே எண் 617-ல் வசித்து வரும்குறவன் இன மக்களுக்கு உடனடியாக கணினியில் ஏற்றப்பட்ட வீட்டுமனை பட்டா வழங்க கோருதல் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதில் மாவட்ட செயலாளர் எஸ். டில்லி தீர்மானங்களை முன்மொழிய, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்துசங்கத்தின் மாநிலத் தலைவர்வி.கே. தணிகாசலம் விளக்க உரையாற்றினார். உடன் மாவட்ட நிர்வாகிகள் ரமேஷ் பாபு, தாமோதரன், கே. அன்பு,வி.குணசேகரன், டி. சிவசங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிறைவாக, மாவட்ட பொருளாளர் எம்.அஜித் குமார் நன்றி தெரிவித்தார்.

போக்குவரத்து முடக்கம் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை!

சென்னை, நவ.2-மதுரவாயல் நொளம்பூர் யூனியன் சாலை வழியே நொளம்பூர் மற்றும் முகப்பேருக்குச் செல்லும் பயணநேரத்தைக் குறைக்கக் கூவம் ஆற்றின் குறுக்கேபாலங்கள் அமைக்கப்பட்டும், ஆக்கிரமிப்புகள் மற்றும் அரைகுறை விரிவாக்கப் பணிகளால் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுவதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.இது குறித்துப் பேசிய மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன், அப்பகுதியில் நேரில் ஆய்வு செய்து தற்காலிக ஆக்கிரமிப்புகளை உடனடியாக அப்புறப்படுத்தவும், வீடுகள்போன்ற ஆக்கிரமிப்புகளுக்கு மாற்று இடம் வழங்கிச் சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

ஆனைமல்லூர் கிராமசபை கூட்ட முறைகேடு நடவடிக்கை எடுக்க விதொச வலியுறுத்தல்!

ராணிப்பேட்டை, நவ.2-ஆற்காடு வட்டம் திமிரி, ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆனைமல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைகூட்டத்தில், பொதுமக்கள் அளித்த கோரிக்கைகளை அரசுஅலுவலர்கள் பதிவேட்டில் பதிவு செய்யாமல் அவசர அவசரமாகக் கையெழுத்து மட்டும் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிகாரிகளின் இந்த அலட்சியப் போக்குஅப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். வெங்கடேசன், மாவட்டத்தின் பல்வேறு கிராமசபை கூட்டங்களில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு நிலுவையிலுள்ள தீர்மானங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும், ஆனைமல்லூர் கூட்டத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து மாவட்ட ஆட்சியரும் திட்ட இயக்குநரும் தலையிட்டு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மயானத்தில் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை

சென்னை, நவ.2-சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான மயானத்தில் சடலங்களை அடக்கம் செய்யக் கிறிஸ்தவ சமுதாயத்தினரிடம் பணம் வசூலிக்க முயற்சிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முகப்பேர் கிராமத்தில் 40 ஆண்டுகளாகக் கிறிஸ்தவ சமுதாய மயானமாகப் பயன்படுத்தப்பட்ட நிலத்தில்

உடல்களை அடக்கம் செய்யதேவநீதி என்பவர் ரூ.1லட்சம் வரை வசூலிப்பதாகக்கூறி, மைக்கேல் பாண்டியன்தொடர்ந்த வழக்கு தலைமைநீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. குறிப்பிட்ட மயான நிலத்தை மாநகராட்சி உதவிப் பொறியாளர் உடனடியாகச் சுவாதீனம் எடுக்க வேண்டும் என்றும்,நில மாற்ற நடவடிக்கைகளை 6 மாதங்களில் முடிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், மயானத்தில் கட்டணம் வசூலிக்க எந்தத் தனிநபருக்கும் உரிமையில்லை என்றும், மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

தங்கம் விலை உயர்வு

சென்னை,நவ.2-சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்துரூ.1,02,200-க்கும், கிராமுக்கு ரூ.45 உயர்ந்துரூ.12,775-க்கும் விற்பனையாகிறது.