முந்தய பக்கம்

செவித்திறன் குறையுடையோர் பள்ளி நூற்றாண்டு விளையாட்டு விழா

10 Aug 2026, 12:30 am
செவித்திறன் குறையுடையோர்  பள்ளி  நூற்றாண்டு விளையாட்டு விழா

செவித்திறன் குறையுடையோர் பள்ளி நூற்றாண்டு விளையாட்டு விழா

சென்னை, ஆக. 9-சென்னை சிறுமலர்செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டில் நடைபெற்ற விளையாட்டு விழாவெகு சிறப்பாகவும், கோலாகலமாகவும் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியும், காவல்துறை முன்னாள் தலைமை இயக்குநருமான சீமா அகர்வால் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு, மாணவர்களின்அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு விழாவைச் சிறப்பித்தார்.

தென் சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் மற்றும் பிஎன்ஓய் நிறுவனத்தின் நிர்வாகஇயக்குநர் அனிஷ்ஷா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.விழாவில் மாணவர்களின் குழு விளையாட்டுக்கள், யோகா, சைக்ளிங், சிலம்பம், மான்ஸ் டரில் ஆகியவை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. குறிப்பாக, செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்களது திறமைகளை நம்பிக்கையுடன் வெளிப்படுத்திய நிகழ்ச்சிகள் அனைவரின் பாராட்டைப் பெற்றதுடன், அவர்களுக்கு மிகுந்த ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்தன.விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருந்தினர்கள் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாரட்டினர்.

Share
FacebookXWhatsAppTelegram