முந்தய பக்கம்

எல்.பி. சாலையில் போக்குவரத்து மாற்றம்

28 Jun 2026, 12:52 am
எல்.பி. சாலையில் போக்குவரத்து மாற்றம்
<p><strong>எல்.பி. சாலையில் போக்குவரத்து மாற்றம்</strong></p><p> சென்னை, ஜூன் 27- சென்னையில் நடைபெறவுள்ள மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளுக்காக, எல்.பி. சாலையில் சனிக்கிழமை முதல் போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் சிக்னல் முதல் எல்.பி. சாலை-எம்.ஜி. சாலை சந்திப்பு வரையிலான பகுதி போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளதால், திருவான்மியூரிலிருந்து திரு.வி.க. பாலம் நோக்கிச் செல்லும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் எம்.ஜி. சாலை, சாஸ்திரி நகர் வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளன. இதேபோல், திருவான்மியூர் நோக்கிச் செல்லும் வாகனங்கள் சாஸ்திரி நகர் வழியாகவும், இலகுரக வாகனங்கள் இந்திரா நகர் வழியாகவும் மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களைச் செயல்படுத்த சாஸ்திரி நகரில் சில சாலைகள் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளன, இந்திரா நகர் 2-வது அவென்யூவில் கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்பதால், வாகன ஓட்டிகள் தங்களின் பயணத் திட்டத்தை முன்கூட்டியே மாற்றியமைத்துக் கொள்ளுமாறு போக்குவரத்து காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram