கண்டலேறு நீர்மட்டம் குறைந்ததால் சென்னைக்கு கிருஷ்ணா குடிநீர் நிறுத்தமா?
1 hour before

கண்டலேறு நீர்மட்டம் குறைந்ததால் சென்னைக்கு கிருஷ்ணா குடிநீர் நிறுத்தமா?

சென்னை,செப்.14-ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கண்டலேறு நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருவதால், அங்கிருந்து சென்னைக்கு திறந்துவிடப்படும் கிருஷ்ணா நதி நீர் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது கண்டலேறு நீர்த்தேக்கத்தில் இருந்து சென்னையை நோக்கி வினாடிக்கு 40 கனஅடி தண்ணீர் மட்டுமே திறந்துவிடப்படுகிறது. இது வழக்கமாக சென்னைக்கு வழங்கப்படும் அளவைவிட மிகவும் குறைவாகும். மே முதல்செப்டம்பர் வரையிலான காலத்தில் சென்னைக்குவழக்கமாக 4 முதல் 5 டிஎம்சி வரை கிருஷ்ணா நீர் கிடைக்கும். ஆனால், இந்தஆண்டு சுமார் 3 டிஎம்சி தண்ணீர் மட்டுமே கிடைத்துள்ளது. இதனால், சென்னையின் குடிநீர் நீர்த்தேக்கங்களுக்குவரும் நீரின்அளவு குறைந்துள்ளது குறித்து கவலை ஏற்பட்டுள்ளது.

சென்னையின் நீர் இருப்பை அதிகரிக்கும் நோக்கில், அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசம் கண்டலேறு நீர்த்தேக்கத்தில் இருந்து பிப்ரவரி 25-ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடத் தொடங்கியது. இந்தத் தண்ணீர் மார்ச் 4-ஆம்தேதி பூண்டி நீர்த்தேக்கத்தை வந்தடைந்தது. எனினும், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நீர்நிலைகளில் பராமரிப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், மார்ச் 29-ஆம் தேதி தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.ஜூலை மாதத்தில் கண்டலேறு நீர்த்தேக்கத்தில் நீர் இருப்பு குறைவாக இருந்தபோதிலும், ஆந்திரப் பிரதேசம்சென்னைக்கான கிருஷ்ணா நீர் திறப்பைவினாடிக்கு 455 கனஅடியாக அதிகரித்தது.

செப்டம்பர் முதல் வாரம் வரை இதே அளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.இன்னும் மூன்று நாட்களில் நிறுத்தம்“ஆந்திரப் பிரதேசத்தில் மழைஇல்லாததால் கண்டலேறு நீர்த்தேக்கத்தில் நீர் இருப்பு 17 டிஎம்சி அளவுக்கு மட்டுமே இருந்தது. இதனால், இரண்டாவது பருவ சாகுபடிக்கான தனதுதேவையை ஆந்திரப் பிரதேசம் பூர்த்தி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, சென்னைக்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது.

செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் மட்டுமேதிறந்துவிடப்பட்டது. பின்னர், படிப்படியாக அது வினாடிக்கு 40 கனஅடியாகக் குறைக்கப்பட்டது. அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் சென்னைக்கான கிருஷ்ணா நீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று நீர்வளத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.