சேதமடைந்த எம்.ஆர். நகர் பிரதான சாலை
2 Nov 2026, 12:17 am
<p>சென்னை, நவ. 1-கொடுங்கையூர் எம்.ஆர். நகர் 2ஆவது பிரதான சாலை(மண்டலம் 4, வார்டு 35 மற்றும் 36க்கு உட்பட்ட பகுதி) வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சென்று வருகிறார்கள்.தற்போது இந்த சாலை சேதமடைந்து பள்ளம் மேடுகளாக காணப்படுகின்றன. இதனால், இவ்வழியே செல்லும்இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி, அடிக்கடி கீழேவிழுந்து காயம் அடையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.குறிப்பாக, இரவு நேரங்களிலும், மழைக் காலங்களிலும் இந்த பள்ளங்கள் சரியாகத் தெரியாததால் விபத்துகளின்எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முதியவர்களும், பள்ளிச் செல்லும் குழந்தைகளும் இந்த சாலையைப்பயன்படுத்த பெரிதும் அச்சப்படுகிறார்கள்.எனவே, பொதுமக்களின் பாதுகாப்பை கருதி, பெரிய அளவில் விபத்துகள் ஏற்படும் முன் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
