முந்தய பக்கம்

பணிநிரந்தரம் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் சென்னையில் உண்ணாநிலை போராட்டம்

15 Jul 2026, 11:27 pm
பணிநிரந்தரம் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் சென்னையில் உண்ணாநிலை போராட்டம்
<p><strong>பணிநிரந்தரம் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் சென்னையில் உண்ணாநிலை போராட்டம்</strong></p><p>சென்னை, ஜூலை 15 – பணி நிரந்தரம் செய்யக்கோரி புதனன்று (ஜூலை 15) சென்னையில் டாஸ்மாக் ஊழி யர்கள் சங்கத்தினர் (சிஐடியு) உண்ணா நிலை போராட்டம் நடத்தினர். டாஸ்மாக் நிறுவனத்தில் 23ஆண்டு களாக தொகுப்பூதிய முறையில் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தொகுப்பூதி யத்தை ரத்து செய்ய வேண்டும். பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம், ஓய்வூ தியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் சார்பில் இந்த உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது. சென்னை மாவட்டத்தலைவர் பா.பால கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்தப்போராட்டத்தில் சிஐடியு மாநில துணைத்தலைவர்கள் எஸ்.கே.மகேந்திரன், கே.விஜயன், மாவட்டச் செயலாளர்கள் ஜி.செந்தில்குமார் (தென்சென்னை), எஸ்.கே.முருகேஷ் (மத்தியசென்னை), தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம், தமிழ்நாடு தையல் தொழிலாளர் சம்மேளன தலைவர் பா.சுந்தரம் டாஸ்மாக் மாநில சம்மேளன நிர்வாகிகள் கே.பி.ராமு, ஜி.சந்திரன், ஜி.சதீஷ், எஸ்.வடிவேல், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ப.பாக்கியராஜ் உள்ளிட்டோர் பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram