தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

11 Jun 2026, 12:14 am
சென்னை விரைவு செய்திகள்

பாரதிராஜா மறைவு: விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் இரங்கல்!

வேலூர், ஜூன் 10- இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் மறைவு ஒவ்வொரு தமிழன் மனதிலும் பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது என்று விஐடி பல்கலைக்கழக வேந்தரும், தமிழியக்க நிறுவனத் தலைவருமான கோ.விசுவநாதன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழ் சினிமாவில் புதிய பாதையை உருவாக்கி, பலரையும் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்ற ஆளுமை இயக்குநர் பாரதிராஜா. ‘16 வயதினிலே’, ‘மண் வாசனை’ போன்ற காவியங்கள் மூலம் தமிழ்நாட்டின் சினிமாவைத் ‘தமிழ் சினிமா’ ஆக்கிய ஒப்பற்ற கலைஞர் அவர். கிராமத்து அடையாளங்களையும், மனிதர்களின் உண்மை உணர்வுகளையும் கொஞ்சமும் செயற்கைத்தனமின்றித் திரையில் மீட்டெடுத்தவர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனை வைத்து அவர் இயக்கிய ‘முதல் மரியாதை’ திரைப்படம் உலகமே வியந்த உன்னதப் படைப்பாகும். ‘பாரதிராஜா வருவதற்கு முன்னர் எங்கள் ஊருக்கு சினிமா வந்தது; அவர் வந்ததற்குப் பின்னர் எங்கள் ஊரே சினிமாவில் வந்தது’ என்று சொல்லும் அளவிற்கு அரை நூற்றாண்டு காலம் திரையுலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், திரை உலகினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆட்சியர் உத்தரவு!

ராணிப்பேட்டை, ஜூன் 10- ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த தேர்ச்சி பெற்ற பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ந.ப்ரியா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய ஆட்சியர், அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவது ஆசிரியர்களின் தார்மீகக் கடமை என்றும், இதில் எவ்வித சாக்குப்போக்குகளையும் ஏற்க முடியாது என்றும் திட்டவட்டமாகக் கூறினார். கற்றலில் பின்தங்கிய மாணவர்களைத் தனிக்குழுக்களாகப் பிரித்து சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் எனவும், அவர்களின் தேர்வு பயத்தைப் போக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். மேலும், பள்ளி இடைநிற்றலை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஆட்சியர், பள்ளிகளுக்கு அருகில் போதைப்பொருள் நடமாட்டம் இருந்தால் உடனே தகவல் தெரிவிக்குமாறும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். வரவிருக்கும் காலாண்டுத் தேர்வில் தேர்ச்சியை அதிகரிக்க எடுத்த முயற்சிகள் குறித்து, அடுத்த கூட்டத்தில் தலைமையாசிரியர்கள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

மூத்த பத்திரிகையாளர் வே.சிறீதரின் தாயார் காலமானார்!

வந்தவாசி,ஜூன் 10- மூத்த பத்திரிகையாளர் ‘விடுதலை’ வே.சிறீதரின் தாயாரும் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி, மறைந்த எம்.எஸ்.வேணுகோபால் இணையருமான வே.சுசீலா அம்மையார் (வயது 85) புதனன்று வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். அவரது இறுதி நிகழ்ச்சி வியாழனன்று (ஜூன்11) பகல் 11 மணி அளவில் நடை பெற உள்ளது. முகவரி: 14ஏ, திருநீலகண்டர் தெரு, வந்த வாசி, திருவண்ணாமலை மாவட்டம்.

காணாமல் போன மகளைத் தேட போலீஸ் அலட்சியம்

திருப்பத்தூர், ஜூன் 10- திருப்பத்தூர் மாவட்டம் எலவம்பட்டி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முருகனின் மனைவி கீதா (40). இவர்களது இரண்டாவது மகள் மோனிஷா (18), தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தார். கடந்த சனிக்கிழமை வீட்டை விட்டு வெளியேறிய மோனிஷா, அதன்பின் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், போலீ சார் இந்த புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தாய் கீதா, வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நெரிசலைக் குறைக்க ஆகஸ்ட் முதல் ‘நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு’ சென்னையில் அமல்

சென்னை, ஜூன் 10- சென்னையின் மிக முக்கியப் பிரச்சனை யான போக்குவரத்து நெரிசலுக்குத் தொழில்நுட்ப ரீதியாகத் தீர்வு காணும் வகையில், ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை (ஜிகா) நிதியுதவியுடன் ரூ.530 கோடி மதிப்பில் ‘நுண்ணறிவு போக்கு வரத்து அமைப்பு’ திட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் முழுமையாகச் செயல்படுத்தப்பட உள்ளது. சென்னையில் வாகனங்களின் எண்ணிக்கை 63 லட்சத்தைத் தாண்டியுள்ள தால் ஏற்படும் நெரிசலைக் கட்டுப்படுத்த, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இத்திட்டத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதன்படி, சிக்னல்களில் உள்ள சென்சார்கள் மற்றும் கேமராக்கள் வாக னங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு, அதிக வாகனங்கள் உள்ள பாதைக்குத் தானாகவே கூடுதல் நேரம் பச்சை சிக்னலை வழங்கும். இதற்காக திட்டமிடப்பட்டுள்ள 165 முக்கிய சந்திப்புகளில் 112 இடங்களில் பணிகள் நிறைவடைந்துள்ளன. இத்திட்டத்தின் முக்கிய அம்சமாக, சிக்னல் மீறல் மற்றும் அதிவேகப் பய ணத்தைக் கண்காணித்துத் தானாகவே அபராதம் விதிக்கும் வசதி 10 இடங்களில் அமைக்கப்பட உள்ளது. மேலும், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் 2,940 பேருந்துகளில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டு, அவை வரும் நேரத்தை மக்கள் அறியும் வசதியும், மாற்றுப் பாதைகள் மற்றும் பயண நேரத்தை வாகன ஓட்டிகளுக்குத் தெரிவிக்கும் ஏஐ தகவல் பலகைகளும் நிறுவப்பட்டு வருகின்றன. ஒட்டுமொத்தப் போக்குவரத்தையும், விபத்துகளையும் உடனுக்குடன் கண்காணித்து நடவடிக்கை எடுக்க சென்னை வேப்பேரியில் நவீன ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும்போது, வாகனங்களின் காத்திருப்பு நேரம் குறைவதோடு, எரிபொருள் வீணா வது தடுத்து நிறுத்தப்பட்டு காற்று மாசுபாடும் பெருமளவு குறையும் என அதிகாரிகள் மற்றும் சுற்றுச்சூழல் நிபு ணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.