முந்தய பக்கம்

தீக்கதிர் விரைவு செய்திகள்

19 Aug 2026, 9:20 pm
தீக்கதிர் விரைவு செய்திகள்

வழிபாட்டுத் தலங்களில் பாகுபாட்டிற்கு இடமில்லை

சென்னை, ஆக. 19 -காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் பிராமணர் அல்லாத தென்கலை வைணவர்களுக்கு தீர்த்தம்,பிரசாதம் வழங்குவதிலும், திவ்யப் பிரபந்தம் பாடுவதிலும் பாகுபாடு காட்டப்படுவ தாக வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்நிலையில், இட நெருக்கடியால் தான் பக்தர்கள் வெளியே நிறுத்தப்படுவதாகவும், எவ்விதச் சாதிப் பாகுபாடும் காட்டப்படாது எனவும் கோவில் நிர்வாகம் அளித்த உறுதியை ஏற்று, வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது. இறைவன் முன்அனைவரும் சமம் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

தி.க. வாகனப் பேரணிக்கு அனுமதி

சென்னை, ஆக. 19 -நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகம் நடத்தவிருந்த இருசக்கர வாகனப்பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணைக்குப் பின், ஆகஸ்ட் 20-க்குள் பேரணிக்கு அனுமதி வழங்க அரசுத் தரப்பில்ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்து: வழக்கு தள்ளுபடி

சென்னை, ஆக. 19 -அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது தொடர்பான விஷயத்தில், மாநிலத்தில் அரசு நிகழ்ச்சிகளை தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்குவதை உறுதிசெய்து ஏற்கெனவேஅரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளதாக தமிழக அரசுதெரிவித்ததை ஏற்றுக்கொ ண்டு, இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த பொதுநல மனுவை சென்னைஉயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Share
FacebookXWhatsAppTelegram