சென்னையில் திடீர் கனமழை விமானச் சேவைகள் கடும் பாதிப்பு
10 May 2026, 1:29 am
<p><strong>சென்னையில் திடீர் கனமழை விமானச் சேவைகள் கடும் பாதிப்பு</strong></p><p>சென்னை, மே 9- சென்னையில் சனிக்கிழமை பிற்பகல் பெய்த திடீர் கனமழை காரணமாக விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய மற்றும் புறப்பட வேண்டிய 15-க்கும் மேற்பட்ட விமானங்கள் பாதிக்கப்பட்டு, பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி யுள்ளனர். பெங்களூரு மற்றும் மும்பையிலிருந்து வந்த இரண்டு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் உட்பட மொத்தம் 5 விமானங்கள் பலத்த மழை மற்றும் மோசமான வானிலை காரணமாகச் சென்னையில் தரையிறங்க முடியாமல் போயின. இந்த விமானங்கள் நீண்ட நேரமாக நடுவானில் வட்டமடித்தபடி தத்தளித்தன. நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வரும் விமான நிலையக் கட்டுப்பாட்டறை அதிகாரிகள், இந்த விமானங்களை பெங்களூருக்கே திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். புறப்படுவதில் தாமதம் தரையிறங்குவது மட்டுமின்றி, சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அகமதாபாத், தில்லி, கண்ணூர், தூத்துக்குடி, கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்ல வேண்டிய 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்பட முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இந்த விமானங்கள் அனைத்தும் வானிலை சீரான பிறகு தாமதமாகப் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் அவதி சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பெய்து வரும் இந்தத் தொடர் கனமழையால், விமானச் சேவைகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன. இதனால் விமான நிலையத்திலேயே காத்திருக்கும் நூற்றுக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.</p>
