சென்னை விரைவு செய்திகள்
30 Jun 2026, 12:02 am

தங்கம் விலை குறைவு

சென்னை, ஜூன் 29 – சென்னையில் திங்க ளன்று 22 காரட் ஆப ரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 குறைந்து ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல், தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 70 குறைந்து 13,300 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இன்றி, ஒரு கிராம் வெள்ளி 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

கள்ளக்குறிச்சி, ஜூன் 29 – கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், புகாரளிக்கவிடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்ட அவரது குடும்பத்தினர் 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சின்னசேலம் அருகே உள்ள கல்லாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவர், சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த சிறுமியின் உறவினர்கள், காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்தனர். இதனை அறிந்த அண்ணாமலை தரப்பினர், சிறுமியின் உறவினர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். புகாரளிக்கக் கூடாது என மிரட்டியதோடு, காவல்துறையிடம் செல்வதைத் தடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் துறையினர், பாலன் என்பவரின் மகன் அண்ணாமலை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், புகாரளிக்க விடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்ட தற்காக அண்ணாமலையின் மனைவி, மகன் மற்றும் உறவினர்கள் என 6 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதில் மணிவண்ணன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். தலை மறைவாக உள்ள அண்ணாமலை மற்றும் மற்றவர்களைக்

விழிப்புணர்வு இல்லாததால் வெறிச்சோடிய மக்கள் குறைகேட்பு முகாம்

சின்னசேலம், ஜூன் 29 – கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில், வாரந்தோறும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பொதுமக்கள் குறைகேட்பு முகாம் நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டிருந்தார். நிலத்தகராறு, குடும்பப் பிரச்சனைகள், கஞ்சா விற்பனை, கள்ளச்சாராயம் உள்ளிட்ட சமூகப் பிரச்சனைகளுக்கு வழக்கு பதியாமல், சுமுகத் தீர்வு காண்பதே இந்த முகாமின் நோக்கமாகும். ஆனால், சின்னசேலம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த முகாமில் பொதுமக்கள் யாரும் பங்கேற்காததால், அரங்கம் வெறிச்சோடி காணப்பட்டது. சின்னசேலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போதிய விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு இல்லாததால் இந்தத் திட்டம் மக்களிடையே சென்றடையவில்லை என்பதே உண்மை. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "இந்த முகாம் குறித்து பொதுமக்களுக்குத் தெரிவதில்லை. பேருந்து நிலையம், திரையரங்குகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க வேண்டும். செய்தித்தாள்கள் மற்றும் விளம்பரப் பதாகைகள் மூலமாகத் திட்டத்தின் பயன்களை எடுத்துரைக்க வேண்டும். காவல் ஆய்வாளர்கள் முன்முயற்சி எடுத்து, இந்த முகாம்களைப் பரவலாக்கினால் மட்டுமே, இருதரப்புப் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும்" என்று தெரிவித்தனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுத்து, ஒவ்வொரு காவல் நிலையத்தின் மூலமும் இந்த மக்கள் குறைகேட்பு முகாம் குறித்து போதிய விளம்பரம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பைபாஸில் மேம்பாலம் அமைக்க வேண்டும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை

கள்ளக்குறிச்சி, ஜூன் 29 – கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பைபாஸ் ரவுண்டானாவில் அதிகரித்து வரும் விபத்துகளைத் தடுக்கவும், பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்யவும் அங்கு உடனடியாக மேம்பாலம் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். உளுந்தூர்பேட்டை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த ரவுண்டானா வழியாகத் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்ட பிறகு, வாகனங்களின் வேகம் அதிகரித்துள்ளதால், விபத்துகளும் பெருகிவிட்டன. எலவனாசூர்கோட்டை, செம்பியமான்தேவி, தியாகதுருகம் பைபாஸ் எனச் சுற்றியுள்ள பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டாலும், ஏமப்பேர் ரவுண்டானா பகுதியில் மட்டும் மேம்பாலம் அமைக்கப்படவில்லை. குறிப்பாக, கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையம் இப்பகுதியில் அமைக்கப்பட்ட பிறகு, போக்குவரத்து நெரிசலும், சாலை கடப்பவர்களின் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்குச் செல்லும் பேருந்துகள் மற்றும் கல்லூரி வாகனங்கள் அதிக அளவில் இந்த நெடுஞ்சாலையைக் கடக்க வேண்டியுள்ளது. இதனால், பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் எப்போதும் அச்சத்துடனேயே இந்தச் சாலையைக் கடக்கும் நிலை நீடிக்கிறது. எனவே, உயிர்ப்பலிகளைத் தவிர்க்கும் பொருட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, போர்க்கால அடிப்படையில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தாம்பரத்தில் ரவுடி சுட்டுப்பிடிப்பு

சென்னை, ஜூன் 29 – தாம்பரம் அருகே 21.6 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட ‘ஏ பிளஸ்’ ரவுடி செல்வகுமார், போலீ சாரைத் தாக்கி விட்டுத் தப்பிக்க முயன்றபோது சுடப்பட்டார். கடந்த 2024-ல் திமுக பிரமுகர் அறமுதன் கொலை உள்ளிட்ட 23 வழக்குகளில் தொடர்புடைய இவர், தலை மைக்காவலர் ஒருவரை கத்தியால் வெட்டியதால், உதவி ஆய்வாளர் தற்காப்புக் காகச் செல்வகுமாரின் காலில் சுட்டுப் பிடித்தார். காயமடைந்த ரவுடியும், போலீஸ்காரரும் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.