முந்தய பக்கம்

ஸ்கேட்டிங் மினி மாரத்தான் உலக சாதனை படைத்த சிறுமி

yesterday
ஸ்கேட்டிங் மினி மாரத்தான் உலக சாதனை படைத்த சிறுமி
<p><strong>ஸ்கேட்டிங் மினி மாரத்தான் உலக சாதனை படைத்த சிறுமி</strong> </p><p>சென்னை, ஜூன் 22 - சாலைப் பாதுகாப்பு மற்றும் போதை இல்லாத தேசத்தை உருவாக்குதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், சென்னை – புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் அக்கரை முதல் கோவளம் வரை நேற்று (ஜூன் 21) ஸ்கேட்டிங் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. உலக சாதனை முயற்சியாகக் கருதப்பட்ட இந்த நிகழ்வு மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி. விஜயராஜ், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு கூடுதல் இயக்குநர் பி. அரவிந்தன், தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் ஆலோசகர் ஆர். ஜே. ரஞ்சன், எஸ்டிஎஸ் பவுண்டேஷன் நிறுவனர் ஜே. சுந்தர் மற்றும் பாரத் பவுண்டேஷன் நிறுவனர் ராஜகோபால் விஸ்வாமி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். 3 கி.மீ முதல் 21 கி.மீ வரை நடைபெற்ற இந்த மினி மாரத்தான் போட்டியில், ஏராளமான இளம் ஸ்கேட்டிங் வீரர், வீராங்கனைகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதில், செம்மஞ்சேரி செயின்ட் ஜோசப் கார்டன் பள்ளி மாணவி ஜே. என். நிவிஷாஸ்ரீ, 5 கிலோமீட்டர் தூரத்தைத் தடையின்றி நிறைவு செய்து அசத்தினார். இச்சாதனையைப் பாராட்டி, சிறப்பு விருந்தினர்கள் மற்றும் மாரத்தான் நிர்வாகிகள் அவருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்ததுடன், உலக சாதனைக்கான சான்றிதழையும் வழங்கி கௌரவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram