தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னையை அதிரவைத்த பாலின சமத்துவ எழுச்சி நடை!

5 Jul 2026, 10:37 pm
சென்னையை அதிரவைத்த பாலின சமத்துவ எழுச்சி நடை!

சென்னையை அதிரவைத்த பாலின சமத்துவ எழுச்சி நடை!

சென்னை, ஜூலை 5

எஸ்.வி.வேணுகோபாலன்

ஒரு திருவிழா களைகட்டத் தொடங்கி இருந்தது, சென்னை அண்ணா சாலை பெரியார் சிலை அருகே ஜூலை 4 சனிக்கிழமை இரவு ஒன்பதரை மணிக்கே.... பழங்காலத்து விடு கதை ஒன்று உண்டு; ஒரு குளத்தில் ஒரு நாள் எத்தனை பூக்கள் பூக்கி றதோ, அடுத்த நாள் இரட்டிப்பாகப் பூக்கும், பத்தாம் நாள் பாதிக் குளம் பூத்திருந்தது, அடுத்த நாள் எத்தனை பூ... அடுத்த நாள் குளம் முழுக்கப் பூ பூத்திருக்கும் என்பதுதான் விடை! இரட்டிப்பு இரட்டிப்பாக எங்கி ருந்தெல்லாமோ வந்து கொண்டே இருக்க, இரவு பத்து, பத்தேகால் மணிக்குப் பல்கிப் பெருகி இருந்தது உற்சாகக் கொண்டாட்டப் பெருந் திரள்... பெயர்கள் துறந்து, கருத்து ஒருமித்துக் கரைந்து பரவசம் பொங்கக் கூடி முழக்கமிட்டவர்கள் எல்லோரையும் பரவசம் அழைத்துக் கொண்டது தோழர்.... தோழர்... தோழர்... தோழர் தான்!

அதிர வைத்த பறை முழக்கம்: வயதுகள் கடந்த புரட்சிகர ஆட்டம்

பாலின சமத்துவத்திற்கான பறை முழக்கம் பத்து மணிக்கே பெண் விடுதலைக்குக் குரல் கொடுத்த தந்தை பெரியார் சிலை முன்பாகக் கிளர்ந்து, சுற்றுப்புறத்தை அதிர வைத்துக் கொண்டிருந்தது. பறை வெறும் காற்றின் ஒலி அல்லவே.... பாம்புப் பிடாரனில் பாரதி சொன்னது போலவே, உள்ளம் மூச்சுக்காற்றில் ஒட்டி, மூச்சுக்காற்று குழலிலே ஒட்டி எழும்பும் இசை போலவே, ஒடுக்கு முறைக்கு எதிரான உள்ளத்தின் அதிர் வெல்லாம் உடலில் அதிர்ந்து, கரங்க ளின் வழி கருவியில் இறங்கிப் பறை யில் அதிர்ந்து முழங்கும்போது, கேட் போர் உள்ளங்களிலும் எதிரொ லிக்கும் அதிர்வு அவர்களையும் அல்லவா ஆட்டம் போட அழைக் கம்! வயதுகள் தொலைத்துக் குதூ கலம் பற்றிக் கொள்ள, எல்லோரை யும் உணர்ச்சிவசப்பட்டு ஆட வைத்துக் கொண்டிருந்தது பாலின சமத்துவத்திற்கான பறையாட்டம்! இன்னொரு பக்கம் இந்திய மாண வர் சங்கத் தோழர்களின் தூரிகை கள் வண்ணங்கள் தொட்டுப் பங்கேற்பாளர்களது கரங்களில், முகங்களில் அரிவாள் சுத்தியலை மின்ன விட்டிருந்தது. ஒளியுமிழும் வண்ணக் குடைகள் வானத்திற்குச் செய்தி அனுப்பிக் கொண்டிருந்தன, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை முன்னெடுப்பை. சிவப்பு வண்ண பலூன்கள் தங் களை உரிமைக் காற்றால் நிரப்பிக் கொண்டு உயரப் பறக்கத் துடித்துக் கொண்டிருந்தன. அண்ணல் அம்பேத்கர் நினை வில் புரட்சிகர பாடல் ஒன்றை இசைத்தனர் எளிய இசைக்கலைஞர்கள்.

பெண் விடுதலை முழக்கம் பெரியார் சிலையிலிருந்து...

கூடியிருந்த தோழமை இதயங்களின் பெரு முழக்கங்களுக்கு இடையே தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பி. சம்பத். “இப்போது தொடங்க இருக்கிறோம் நமது நிகழ்ச்சியை” என்று மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா அறிவிக்க, திருநர் இயக்கப் பிரதிநிதி அக்னி ஆர்ப்பரித்துக் குரல் எழுப்ப, கைக்குழந்தையோடு வந்திருந்த அன்னையர் முதற்கொண்டு குடும்பங்களாய் சங்கமித்துப் பெருங்குரல் எடுத்துப் புறப்பட்டது பாலின சமத்துவ நடைக்கான எழுச்சிப் படை. ஆட்டோ, வீட்டு வேலை, தண்ணீர் கேன், ஹோட்டல், ஒப்பந்தப் பணிகள் என எண்ணற்ற தொழில்களில் அன்றாடம் சூரியத் தீயினில் உழைத்துத் திங்கள் ஒளி யினில் துயில்வோர், இந்த சனிக்கிழமை இரவைச் சமூக மாற்றத்திற்கான உணர்வுகளைப் புதுப்பித்துக் கொள்ளும் நடைக்காகத் தேர்வு செய்து வந்து நிறைந்து நடக்கத் தொடங்கி விட்டிருந்தனர்.

ஒளிர வைத்த சிந்தனை வெளிச்சம்: இரவும் பெண்களுக்கே!

குழந்தைகள், பெண்களுக்கு எதிரான கொடுங் கொடுமைகளுக்கு எதிரான ஆவேச முழக்கங்களோ டும்; சாதிய, பாலின, வர்க்க ஒடுக்குமுறைகளுக்கு எதி ரான உறுதியோடும் ஆண்கள், பெண்கள், திருநர்கள், பால் புதுமையினர் என எல்லோருமாக ஒத்திசைந்து நடை போட்டனர். பெரியார் சிலையிலிருந்து தொலைக் காட்சி நிலையம் இயங்கும் சுவாமி சிவானந்தா சாலை நோக்கிய நடை, சமூக மாற்றத்திற்கான சிந்தனை ஒளி யால் சுற்றுப்புறமெங்கும் மிளிர வைத்தது. சமூக சீர்திருத்தங்களுக்காக, பெண் விடுதலைக் காக, சோசலிச லட்சியங்களுக்காக மகத்தான போராட் டங்களை முன்னெடுத்த உன்னதத் தலைவர்களின் பதாகைகளை ஏந்திய நடை அது. மார்க்சிய சிந்தனை யோடு செங்கொடிகளை உயர்த்திப் போட்ட நடை அது. வழிநெடுக நொடிப்பொழுதும் நில்லாது இசைத்துக் கொண்டே சென்ற பறை முழக்கத்திற்கு ஏற்ப நடன மிட்டபடி நடந்து சென்ற நடை அது. “இரவும் பெண் களுக்கே” என்று எழுச்சிகர அடியெடுத்து வைத்த நடை அது. “பாலின சமத்துவம் உரிமை; என்று நாங்கள் வந்தோம் தெருவுக்கு” என்று கோஷமிட்டுப் புறப்பட்ட நடை அது.

உடைமை மக்களுக்குப் பொது: பாவேந்தரின் வரிகளில் உழைப்போர் திரள்

எழுத்தாளர்கள், கலைஞர்கள், சமூகச் செயற்பாட் டாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள், பண்பாட்டுத் தள ஊழியர்கள் முதற்கொண்டு மாநகரத்தின் கடைக் கோடி உழைப்பாளிகள் வரை, ‘பிரிவிலை எங்கும் பேதம் இல்லை.... உடைமை மக்களுக்குப் பொது... புவியை நடத்து பொதுவில் நடத்து’ - எனும் பாவேந்தர் பாரதிதாசன் கவிதை வரிகளை உயிர்ப்பிக்கும் உணர்ச்சிகளோடு நடந்த நடை அது!

சோசலிச லட்சியத்திற்கான உறுதிமொழி

ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்த நடையின் நிறைவில், பாலின சமத்துவ உயரிய நோக்கங்கள் எதி ரொலிக்கும் செம்மையான உறுதிமொழியை இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் மிருதுளா கூற, எல்லோரும் உறுதி ஏற்றுக்கொண்ட தருணம் பாலின சமத்துவ நடை நிகழ்ச்சியின் எழுச்சிகரமான பகுதி யாக அமைந்தது.

அப்போது உரையாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத், “பாலின சமத்துவ நடை என்பது அனைத்துவித ஒடுக்குமுறைகளுக்கும், ஆதிக்க சக்திகளுக்கும் எதிரான வரலாற்றுப் பதிவாகவே அமைந்துவிட்ட நடை; அரசு எனும் ஒடுக்குமுறைக் கருவிக்கு எதிரான போரில் சோசலிச லட்சியத்தை முன்னெடுக்கவும் உறுதி ஏற்று நடந்த நடை” என்று பாராட்டி, பங்கேற் றோர் அனைவருக்கும் வாழ்த்து கூறினார்.

ராமச்சந்திர வைத்தியநாத் எழுதிய ‘சென்னைப் பட்டினம்’ எனும் நூலின் பிரதிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டன. இரவின் மடியில் கேக்குகள், பழரசம் பரவலாகப் பகிர்ந்து கொள்ளப்பட, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தோடு நள்ளிரவைத் தொட்டும் கலையாத ஆர்வத்தோடும், களைப்பற்ற உற்சாகத்தோடும் திரண் டிருந்த அனைவருக்கும், நிகழ்ச்சியின் வெற்றிக்காக உழைத்தவர்களுக்கும் ஜி. செல்வா நன்றியுரை கூற, இப்போதைக்கு நிறைவு பெற்றது, இன்னுமின்னும் தொடர வேண்டிய புரட்சிகர நடை.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.