முந்தய பக்கம்

சூதாட்டப் பிரச்சனை: நண்பரைக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

1 Jul 2026, 11:28 pm
சூதாட்டப் பிரச்சனை: நண்பரைக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
<p><strong>சூதாட்டப் பிரச்சனை: நண்பரைக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை</strong></p><p>சென்னை, ஜூலை 1- சூதாட்டத்தில் ரூ.20 லட்சம் வரை இழந்த விரக்தியில் நண்பர் குமாரைக் கொலை செய்த ஜெகதீஷ் என்கிற ஜெகதீசன் (39) என்பவருக்கு, சென்னை அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பி. ஸ்ரீகுமார், குற்றவாளிக்குத் திருமணமானவர் என்பதையும், அவர் திருந்துவதற்கு வாய்ப்புள்ளதையும் கருத்தில்கொண்டு, இதனை அரிதிலும் அரிதான வழக்காகக் கருதாமல் ஆயுள் தண்டனை விதிப்பதாகத் தெரிவித்தார். மேலும், உயிரிழந்தவரின் தாயார் விஜயலட்சுமிக்கு உரிய இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram