சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் பெட்டி தடம்புரண்டது
6 Oct 2026, 1:05 am

சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் பெட்டி தடம்புரண்டது

சென்னை, அக். 5-சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சாரரயிலின் பெட்டி ஒன்று தடம்புரண்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னையில் திங்கட்கிழமை காலை10.42 மணியளவில் செங்கல்பட்டில் இருந்து கடற்கரை நோக்கி வந்த புறநகர் மின்சார ரயில், சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் யாரும் காயமின்றி நல்வாய்ப்பாஉயிர் தப்பினர்.

சென்னை கோட்டை ரயில் நிலையத்தின் 1ஆவதுநடைமேடைக்குள் ரயில் நுழைந்தபோது, எதிர்பாராத விதமாக ரயிலின் 5ஆவதுபெட்டியின் ஒரு சக்கரம் தண்டவாளத்தை விட்டு கீழேஇறங்கி தடம் புரண்டது. சத்தம் கேட்டவுடன் சுதாரித்துக் கொண்ட ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இந்த விபத்தில் பயணிகள் யாரும் காயமின்றி நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.

இதுகுறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்தவுடன் தெற்கு ரயில்வேயின் மூத்த அதிகாரிகள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் விபத்துநிவாரண ரயிலுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இந்த விபத்து காரணமாக சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையேயான ரயில் சேவையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்பட வேண்டிய தாம்பரம் மற்றும் செங்கல்பட்டுரயில்கள் தற்காலிகமாக சென்னை பூங்கா மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து இயக்கப்பட்டன.கடற்கரைக்கு வரும் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன. திடீர் ரயில் விபத்து மற்றும் சேவை மாற்றத்தால் அலுவலகம் செல்வோர் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.இதற்கிடையே சுமார் 1 மணியளவில் ரயில் சக்கரம் சரி செய்யப்பட்டு ரயில் சேவை மீண்டும்சீரானது.

இந்த விபத்து குறித்துதெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் நடந்த விபத்தில் பயணிகள் யாருக்கும்எவ்வித காயமும் ஏற்படவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.