‘முரசு’ புயலில் சிக்கிக் மாயமான 9 பேர் ஆந்திர மாநிலத்தில் கரை ஒதுங்கிய 3 சென்னை மீனவர்களின் உடல்கள்
5 Nov 2026, 11:35 pm

‘முரசு’ புயலில் சிக்கிக் மாயமான 9 பேர் ஆந்திர மாநிலத்தில் கரை ஒதுங்கிய 3 சென்னை மீனவர்களின் உடல்கள்

சென்னை, நவ. 5 –மீன்பிடிக்கச் சென்ற நிலையில், கடலில் காணாமல் போன சென்னை காசிமேட்டைச் சேர்ந்த 9 மீனவர்களில், 3 பேர் உடல்கள் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம், கொத்தப்பட்டினம் மற்றும் பள்ளிபாலம் கடற்கரைப் பகுதிகளில் கரை ஒதுங்கியுள்ளது. மேலும் 2 பேரின் உடல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

நங்கூரமிடப்பட்ட படகுகள்

‘முரசு’ புயல் எச்சரிக்கையையொட்டி கடலுக்குள் சென்றுள்ள மீனவர்கள், உடனடியாகக் கரைக்குத் திரும்புமாறு கடந்த அக்டோபர் 31 அன்று அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். அதன்படி,காசிமேட்டைச் சேர்ந்த மூன்று படகுகள் ராமாயப்பட்டினம் துறைமுகத்திலும், ஒன்று நிஜாம்பட்டினம்துறைமுகத்திலும் நிறுத்தப்பட்டன.அக்டோபர் 29-ஆம் தேதி, காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து செல்வழகன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், ஓட்டுநர் சூர்யா (49), குப்பன் (48), மோகன் (47), ராஜேஷ் (52), முருகன் (48), குப்புசாமி (58), விஜயகாந்த் (44),அரவிந்த் (40) மற்றும் கடலூரைச் சேர்ந்த நாராயணனை (57) ஆகியோர் கடலுக்குச் சென்றிருந்தனர். வானிலைஆய்வு மையம் ‘முரசு’ புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, இவர்களும் உடனடியாக தங்களது படகைநிஜாம்பட்டினம் துறைமுகத்தில் நிறுத்தினர்.

புயலில் சிக்கிய மீனவர்கள்

பின்னர், நங்கூரமிடப்பட்டிருந்த படகிலிருந்த 9 மீனவர்களும், ராமாயப்பட்டி னத்தில் இருந்த சக மீனவர்களுடன் சேர்வ தற்காகப் புறப்பட்டதாகக்கூறப்படுகிறது. அப்போது, வழியில் புயலில் சிக்கிய அவர்களது படகு கடலில் கவிழ்ந்துள்ளது. நவம்பர் 3-ஆம் தேதிஅதிகாலை 3.30 மணி

முதலமைச்சர் தலா ரூ. 7 லட்சம் நிவாரணம்

மீனவர்களை இழந்துவாடும் அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்திருப்பதோடு, மீனவர்களது குடும்பத்தினருக்குத் தலா 7 லட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவியையும், அதில் தலா 2 லட்சம் ரூபாயை உடனடியாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், மீனவர்களின் உடல்களை அரசு செலவில் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவந்து அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவும், காணாமல் போன ஏனைய மீனவர்களைத் தேடும் பணியினை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.யளவில், படகு பழுதடைந்த தகவலை, அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வெங்கடேஷ் ராஜேந்திரன் என்பவருக்கு வயர்லெஸ் மூலம் தெரிவித்துள்ளனர். ஆனால், அதுவே அவர்களிடமிருந்து கிடைத்த கடைசித் தகவலாக அமைந்தது. அதன்பிறகு அவர்களுடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இது சக மீனவர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. படகின் உரிமையாளர் செல்வழகன், காசிமேடு மீன்வளத்துறை இயக்குநர் அலுவலகத்தில் தகவல் கொடுத்தார்.

உறவினர்கள் தவிப்பு

மீனவர்களை உடனடியாகக் கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், காவல் நிலையத்திலும் மீன்வளத் துறை அலுவலகத்திலும் காத்திருந்தனர். ஓட்டுநர் சூர்யாவின் மனைவி பார்வதி அளித்த பேட்டியில், “நவம்பர் 2-ஆம் தேதி எனது கணவரிடம் செல்போனில் பேசினேன். அப்போது, கடலில் காற்று அதிகமாக வீசுவதாகக் கூறினார். மீன்பிடிப்பதை நிறுத்திவிட்டு, கரைக்குத் திரும்புமாறு கூறினேன். நவம்பர் 3-ஆம் தேதி முதல் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. செல்போன் அணைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வருகிறது. அவருக்கு என்ன ஆனது என்பது தெரியாமல் குடும்பத்தினர் அனைவரும் தவித்து வருகிறோம்” என்று கூறியிருந்தார்.

தீவிரமாக நடைபெற்ற தேடுதல் பணி!

இதுகுறித்த தகவல் தமிழக மீன்வளத் துறைக்குத் தெரியவந்ததும், மாயமான மீனவர்கள் மற்றும் படகு குறித்த முழு விவரங்களுடன் கடலோரக் காவல்படைக்கு அவசரக் கடிதம் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில், மாயமான மீனவர்களைத் தேடும் பணி கடந்த 3 நாட்களாகத் தீவிரமாக நடைபெற்றது. கப்பல்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதில், கொத்தாபுரம் கடற்கரையிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில், படகு கவிழ்ந்த நிலையில் கிடப்பதை கடலோரக் காவல்படையினர் கண்டுபிடித்தனர். பின்னர், அந்தப் படகு கொத்தாபுரம் கடற்கரைக்கு இழுத்து வரப்பட்டது.

அதிகாரிகள் குழு அனுப்பிவைப்பு!

இதற்கிடையே, பிரகாசம் மாவட்டம், கொத்தப்பட்டினம் அருகே கரை ஒதுங்கிய 5 உடல்களில், 3 உடல்கள் காசிமேட்டைச் சேர்ந்த மீனவர்களான சே. மோகன் (47), ராஜேஷ் (52), ஆ. முருகன் (48), குப்புசாமி (58), சி. விஜய

காந்த் (44) ஆகியோர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் 2 மீனவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இந்தச் சம்பவம் காசிமேடு மற்றும் திருவொற்றியூர் மீனவப் பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.