முந்தய பக்கம்

சென்னை: விஷவாயு தாக்கி தந்தை, மகன் உயிரிழப்பு!

yesterday
சென்னை: விஷவாயு தாக்கி தந்தை, மகன் உயிரிழப்பு!
<p>சென்னையில் யானைக்கவுனி பகுதியில் விஷவாயு தாக்கி தந்தை மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>சென்னை யானைக்கவுனி பகுதியில், 45 அடி ஆழமுள்ள கிணற்றைத் தூர்வாரும் பணியின்போது, விஷவாயு தாக்கியதில் கொடுங்கையூரைச் சேர்ந்த ரவி (65) மற்றும் அவரது மகன் அய்யனார் (35) ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர். </p><p>கிணற்றுக்குள் இறங்கி நீண்ட நேரமாகியும் இருவரும் வெளியே வராததால், அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டு, உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். </p><p>இச்சம்பவம் குறித்தி வழக்குப்பதிவு செய்து, கிணற்றின் உரிமையாளர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram