தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்க! சென்னையில் விவசாயிகள் சங்கங்கள் போராட்டம்!

yesterday
தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடனை  முழுமையாகத் தள்ளுபடி செய்க! சென்னையில் விவசாயிகள் சங்கங்கள் போராட்டம்!

தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்க! சென்னையில் விவசாயிகள் சங்கங்கள் போராட்டம்!

சென்னை, ஜூன் 22 - சட்டப்பேரவைத் தேர்தலின் போது தவெக அளித்த வாக்குறு திப்படி, விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவுப் பயிர்க்கடனை முழு மையாகத் தள்ளுபடி செய்ய வலி யுறுத்தி, திங்கள்கிழமை (ஜூன் 22) சென்னையில் உள்ள மாநிலத் தலைமை கூட்டுறவுப் பதிவாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கங்களின் மாநிலக்குழு சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி. நடராஜன், தமிழக விவசாயிகள் சங் கத்தின் மாநிலப் பொதுச்செய லாளர் பி.எஸ். மாசிலாமணி நாகப் பட்டினம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வை. செல்வராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர்கள் டி. ரவீந்தி ரன், பொருளாளர் கே.பி. பெருமாள், தமிழக விவசாயிகள் சங்கத்தின் பொருளாளர் அயிலை சிவசூரியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சாமி. நடராஜன்

இந்த தொடர் முழக்கப் போராட்டத்தின் போது, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி. நடரா ஜன் செய்தியாளர்கள் மத்தியில் பேசி னார். அப்போது அவர் கூறியதாவது

“தமிழ்நாடு முழுவதும் விவசாயி கள் வேளாண்மை கூட்டுறவு வங்கி களில் வாங்கிய பயிர்க்கடனை முழு மையாகத் தள்ளுபடி செய்வோம் என்று தவெக தேர்தல் அறிக்கை யில் கூறியிருந்தது. 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ளவர்களின் கடனில் பாதியைத் தள்ளுபடி செய் வோம் என்றும் சொன்னார்கள். அதன் அடிப்படையில் பயிர்க்கட னைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத் தோம். அரசு கடந்த மே 25-ஆம் தேதி, ரூ. 50 ஆயிரம் வரை கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு முழு தள்ளுபடி யும், அதற்கு மேல் பெற்றுள்ளவர் களுக்குச் சிறு தள்ளுபடியும் அறி வித்தது. இது சரியான நடவடிக்கை இல்லை என்பதை வலியுறுத்தி, இரண்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் மே 26 அன்று தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

ரூ. 35,000 மட்டும் தள்ளுபடி என்பதை ஏற்க முடியாது

ஜூன் 2-ஆம் தேதி இரு சங்கங் களின் சார்பில் முதலமைச்சரைச் சந்தித்து, கடன் தள்ளுபடி அறி விப்பை முழுமையாக மறுபரி சீலனை செய்து வெளியிட வேண் டும் என்று வலியுறுத்தினோம். அதன் அடிப்படையில், ஜூன் 16-ஆம் தேதி ரூ. 75 ஆயிரம் வரை வாங்கப்பட்ட கடன்கள் முழுமையாகத் தள்ளு படி செய்யப்படும் என அறிவிக்கப் பட்டது. ஆனால், அதற்கு மேல் எவ்வளவு தொகை கடன் பெற்றி ருந்தாலும் ரூ. 35 ஆயிரம் மட்டுமே தள்ளுபடி என்பதை எங்களால் ஏற்க முடியாது. எனவே, இதனை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தைத் தற்போது நடத்திக் கொண்டிருக்கிறோம்

கூட்டுறவு சங்கங்களின் பதிவா ளர் எங்களை அழைத்து நடத்திய பேச்சுவார்த்தையில், இது அரசின் கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

குமரி மாவட்டப் பிரச்சனைகளும், பழங்குடியினர் வாழ்வாதாரமும்

கன்னியாகுமரி மாவட்டத்தி லிருந்து அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் சூறையாடப்படு வதைத் தடுக்க வேண்டும் எனக் கோரிய செல்லசுவாமி, மக்களுக்கு ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட் கள் நியாயமான விலையில் கிடைக்கக் கல் மற்றும் மண் குவாரிகளை அரசே நேரடியாக நடத்த வேண்டும் என்றார்.

மாவட்டத்தில் உள்ள 42 மலைக் கிராமங்கள் மற்றும் 22 மலைப்பாதைப் பகுதிகளில் சாலை, மின்சாரம், குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படை வசதி கள் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி னார். வனவிலங்கு பாதிப்பைத் தடுக்கச் சோலார் வேலிகள் அமைக்க வேண்டும் என்றும், வலிய ஏலா முதல் பேச்சுப்பாறை வரையுள்ள நிலங்களுக்கு உடனடியாகப் பட்டா வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி னார். சாதி ஆணவப் படுகொலை களைத் தடுக்க கே.என். பாஷா ஆணைய அறிக்கையைப் பெற்றுத் தனி ச்சட்டம் இயற்ற வேண்டும் என்றார்.

புதிய நடுவர் மன்றக் கோரிக்கை நிராகரிப்பு

காவிரியில் புதிய அணை கட்டு வோம் என்ற கர்நாடக அரசின் அறி விப்பைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்ட மன்றத்தில் கொண்டு வரப்பட்ட திருத்த மசோதாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிராகரிப்பதாகச் செல்லசுவாமி பிர கடனப்படுத்தினார். 1990-இல் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, இறுதித் தீர்ப்புகளும் உச்சநீதிமன்றத் தீர்ப்பும் பெறப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு புதிய நடுவர் மன்றம் என்பது ஏற்புடைய தல்ல; இது ஒட்டுமொத்த வழக்கையும் தலைகீழாக மாற்றிவிடும் அச்சம் இருப்பதால் அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதன் பின்னணி

முன்னதாக, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி இந்த அரசுக்கு வெளியி லிருந்து ஆதரவு அளிப்பதற்கான கார ணத்தைச் செல்லசுவாமி தனது உரை யில் தெளிவுபடுத்தினார். “மக்களால் தனிப்பெரும் கட்சியாக தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு ஆட்சி, எவ்வித வெளிப்புற ஊடுருவல்களும் இன்றித் தனித்துச் செயல்பட வேண்டும் என்ற நிலைப் பாட்டின் காரணமாகவே சிபிஎம் வெளி யிலிருந்து ஆதரவளிக்கிறது” என்று அவர் குறிப்பிட்டார்.

ஒன்றிய அரசிடமிருந்து தமிழ் நாட்டிற்கு வர வேண்டிய உரிய நிதிப் பகிர்வைப் பெறுவதற்குச் சட்டமன்றத் தில் அரசினர் தீர்மானம் நிறைவேற்றப் பட வேண்டும் எனவும், சட்ட வல்லுநர் களைக் கொண்ட குழுவை அமைத்து இப்பிரச்சனையைச் சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டும் என்றும் கூறி, ஆளுநர் உரையை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஒட்டுமொத்தமாக வரவேற்பதாகத் தெரிவித்துத் தனது உரையை நிறைவு செய்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.