சென்னை விரைவு செய்திகள்
yesterday

சென்னை விரைவு செய்திகள்

காவல் நிலையத்தில் தீக்குளித்த பெண்சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கடலூர், நவ.16-பண்ருட்டி அருகே புதுப்பேட்டை காவல் நிலையத்தில் கணவரை விடு விக்கக் கோரி தீக்குளித்த பெண், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில் சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார்.ஒறையூர் ஊராட்சியைச் சேர்ந்த லட்சாதிபதி (த.வெ.க. ஒன்றிய இளைஞரணி செய லாளர் என்பவரது மனைவிகண்மணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டத்தில் பணித்தளப் பொறுப்பாளராகப் பணி யாற்றி வந்தார். கடந்த 12-ஆம் தேதி ஊராட்சி செய லர்அருள்குமாருடன் ஏற்பட்டதகராறு தொடர்பாக இரு தரப்பி னரும் அளித்த புகாரின் பேரில், லட்சாதிபதியை போலீசார் விசாரணைக்குஅழைத்துச் சென்றனர்.

இதையடுத்து கணவரை விடுவிக்கக் கோரி காவல் நிலையம் சென்ற கண்மணி, அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். படுகாயமடைந்த அவர் விழுப்புரம் முண்டியம்பாக்கம்அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, பின்னர் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குசிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக ஊராட்சி செயலர் அருள் குமார் உள்ளிட்டோர் மீதுவன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர். கண்மணி உயிரிழந்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் அசம்பாவிதங்களைத் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.

தனியார் வங்கியில் ரூ.1.21 கோடி கையாடல்மேலாளர் உள்பட 6 பேர் கைது

கள்ளக்குறிச்சி, நவ.16-மகளிர் சுய உதவிக்குழுவுக்கு கடன் வழங்கியதாக தனியார் வங்கியில் ரூ.1.21 கோடி கையாடல் செய்த வழக்கில், மேலாளர் உள்பட 6 வங்கி ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சியில் எச்.டி.எப்.சி. வங்கி கிளை இயங்கி வருகிறது. இதில், திருவண்ணாமலையைச் சேர்ந்த அரவிந்தன் (வயது 41) என்பவர் பிராந்திய குழு தலை வராக இருந்து வருகிறார்.

இந்த வங்கியின் மூலம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 430 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. வங்கியில் பணிபுரியும் சில ஊழியர்கள், மகளிர் சுய உதவிக் குழு தலைவிகளின் கையெழுத்தைப் போலவே போலியாக கையெழுத்து போட்டு, ரூ.1 கோடியே 21 லட்சத்து 61 ஆயிரத்து 685 கையாடல் செய்திருப்பது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக அரவிந்தன், கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து வங்கியில் விற்பனை அதிகாரிகளாக பணியாற்றும் வி.பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பிரசாந்த் (27), தென்கீரானூரைச் சேர்ந்த ஆர்.பிரசாந்த் மற்றும் கார்த்திக் (34), கடன் மேலாளரான சதீஷ்குமார் (37), காசாளரான ரமேஷ் (33), ஆவணப் பதி வாளரான பிரியா (29) ஆகியோரை விசாரித்தனர். இதில், 6 பேரும் சேர்ந்து மகளிர் சுய உதவிக் குழுக்களின் பேரில் ரூ.1 கோடியே 21 லட்சத்து 61 ஆயிரம் கையாடல் செய்தி

ருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து, 6 பேரை யும் போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.