தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

30 Oct 2026, 11:43 pm
சென்னை விரைவு செய்திகள்

2 பெண்களுக்கு பாலியல் கொடுமைஆசாமிக்கு சாகும் வரை சிறை

விழுப்புரம், அக்.30-திண்டிவனத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி மற்றும் 25 வயது பெண் இருவரையும் பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு சாகும்வரை கடுங்காவல் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது .

விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (43). இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ம் தேதி திண்டிவனம் அருகே கல்பாக்கம் கிராமத்தில் உள்ள தைல மரத் தோப்பில் சகோதரி

களான மனநிலை பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி மற்றும் 25 வயது இளம்பெண் ஆகியோரை பாலியல் வன் கொடுமை செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்களின் தாயார் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கன்னியப்பனை கைது செய்தனர். விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த இந்த வழக்கில் கன்னியப்பனுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து நீதிபதி வினிதா தீர்ப்பளித்தார். மேலும், அரசு தரப்பில் இருந்து பாதிக்கப்பட்ட இரு பெண்களுக்கும் தலா ரூ. 10 லட்சம் வழங்க உத்தரவிட்டார்.

தமிழக அரசுத் துறைகளில் அவுட்சோர்சிங் நியமனமா?அரசாணைக்கு ஜாக்டோ-ஜியோ கண்டனம்

சென்னை, அக். 30-அரசுத் துறைகளுக்கான ஒப்பந்தப் பணியாளர்களை அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன மான‘ஓஎம்சிஎல்’ மூலமாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும்என்ற அரசாணைக்கு, அரசு ஊழியர் - ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ கண்டனம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 21 அன்று தேதியிட்ட இந்த அரசாணையின்படி, அரசுத் துறைகள் நேரடியாகவோ தனியார் முகமைகள் மூலமாகவோ ஒப்பந்தப் பணியாளர்களை நியமிக்க முடியாது என்றும், தகுதியற்றவர்களின் நியமனம், ஊதியம் முறையாக வழங்கப்படாதது போன்ற புகார்களைத் தவிர்த்து, வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவரவே இந்தநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த நடவடிக்கை 69 சதவிகித இடஒதுக்கீட்டுக்கும் சமூகநீதிக்கும் எதிரானது என ஜாக்டோ-ஜியோ குற்றம் சாட்டியுள்ளது. எனவே,இந்த அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், நிரந்தரப் பணியிடங்களை நிரப்புவதாகத்தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும் அந்த அமைப்புவலியுறுத்தியுள்ளது.

சிறுவனை கிணற்றில் வீசிகொன்ற தந்தை கைது

விழுப்புரம்,அக்.30-மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 6 வயது சிறுவனை கிணற்றில் வீசி கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (40), கூலி தொழிலாளி. இவரது மனைவி தேவி (35). இவர்களுக்கு பிரபாவதி, சரண்யா, இனியா, ஸ்ரீஜா என நான்கு பெண் குழந்தைகள். ஐந்தாவது ஆண் பிள்ளை சஞ்சய் (6).

இந்நிலையில் கணவன்-மனைவி இடையே வெள்ளி யன்று காலை 8.30 மணியளவில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒன்றாம் வகுப்பு பயிலும் 6 வயது மகன் சஞ்சயை தூக்கி சென்று செல்வராஜ் வீட்டுக்கு பின்னால் உள்ள கிணற்றில் வீசி உள்ளார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அங்கே வந்த உறவினர்கள், பொதுமக்கள் கிணற்றில் குதித்து குழந்தையை மீட்க முயன்றனர். ஆனால், முடியவில்லை. இதற்கிடையில் தகவலறிந்த வந்த தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணிநேரம் போராடி சஞ்சயை கிணற்றில் இருந்து சடலமாக மீட்டனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து செல்வராஜை கைது செய்தனர்.

ஆவடியில் முதியவரைக் கத்தியால் வெட்டி நகை பறிப்பு!

ஆவடி, அக். 30-ஆவடி அடுத்த பட்டாபிராம் ராமாபுரம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் ஜெயராமன் (68), வண்டலூர் - மீஞ்சூர் 400 அடி வெளி வட்ட சாலை ராமாபுரம் கூவம் ஆற்றுப் பாலம் அருகே நடைபயிற்சி முடித்துத் தேநீர் அருந்தச் சென்றபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்துப் பணம் கேட்டு மிரட்டியுள்ளது. அவர் மறுக்கவே, கத்தியால் வெட்டி அவரது ஒரு சவரன் தங்க மோதிரத்தைப் பறித்துக்கொண்டு தப்பியோடினர். படுகாயமடைந்த ஜெயராமன் திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பட்டாபிராம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.