தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

yesterday
சென்னை விரைவு செய்திகள்

கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வுக்கு எதிராகப் போராட்டம்

திருவள்ளூர், ஜூலை 20- கட்டுமானப் பொருட்களின் விலையைக் குறைக்க வலி யுறுத்தி, கும்மிடிப்பூண்டி சிஐடியு அலுவலகத்தில் கட்டு மான தொழிலாளர் சங்கத்தின் வட்ட பேரவைக் கூட்டம் நடை பெற்றது. வி.ஆர்.லட்சுமணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்ட த்தில், சங்கத்தின் தலைவராக இ.ரங்கன் , செயலாளராக எம்.சி.சீனு , பொருளாளராக சி.நாகேஷ்வரராவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். செங்கல், ஜெல்லி, இரும்பு ஆகியவற்றின் விலையைக் குறைப்பதுடன், தொழிலாளர் களுக்கு ரூ.3,000 ஓய்வூதியம், ரூ.50,000 திருமண உதவித் தொகை மற்றும் கல்வி உதவித் தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

செய்தியாளர் குடும்பத்திற்கு கல்வி உதவித்தொகை

திருவள்ளூர், ஜூலை 19- மறைந்த செய்தியாளர் முகமது கௌஸின் மகள்களின் கல்விச் செலவிற்காக, ஐஆர்சிடிஎஸ் நிறுவனம் தொடர்ந்து இரண்டாவது முறையாக ரூ.10,000 கல்வி உதவித் தொகையை வழங்கியுள்ளது. தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட் சங்கத்தின் தொடர் கோரிக்கையை ஏற்று, அவரது மகள்கள் எட்டாம் வகுப்பு வரை கல்வி கற்க இந்த உதவியை அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது. நிதியுதவி வழங்கிய ஐஆர்சிடிஎஸ் நிர்வாக இயக்குநர் ஸ்டீபனுக்கும், இதற்காக முன்னின்று செயல்பட்ட டியுஜெ மாவட்ட நிர்வாகிகள் வி.பி.கோவிந்தராஜுலு, கே.வெங்க டேஸ்வரலூ, பெ.ரூபன் கருணாநிதி மற்றும் குழுவி னருக்கும் முகமது கௌஸின் குடும்பத்தினர் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

பழங்குடியினருக்கான சிறப்பு முகாம்களை முறையாக நடத்த கோரிக்கை

திருவள்ளூர், ஜூலை 19- திருவள்ளூர் மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக் கான சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களைப் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 16 வரை 14 ஒன்றி யங்களில் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறி வித்திருந்தது. இந்த அறிவிப்பை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வரவேற்றுள்ளது. இருப்பினும், இச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு, முகாம்கள் முறையாக நடைபெறவில்லை எனப் புகார் தெரிவித்துள்ளார். ஜூலை 18-ம் தேதி திருத்தணி யில் முகாம் நடைபெறவில்லை என்றும், அதற்கு மாற்றுக் தேதி அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப் பிட்டுள்ளார். பொன்னேரியில் நடைபெற்ற முகாமில், வரு வாய்த் துறையினர் பழங்குடியின மக்கள் மற்றும் நெறிக்குற வர்களை அலட்சியப்படுத்தியதோடு, உரிய ஆவணங்கள் வழங்காமல் அலைக்கழித்ததாகவும் அவர் குற்றம் சாட்டி யுள்ளார். மேலும், முகாம் நடைபெறும் இடங்களில் அடிப்படை வசதிகளான பந்தல் மற்றும் குடிநீர் வசதிகளைச் செய்து தருவதுடன், கணினி மற்றும் மின் இணைப்பு வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என்றும், அரசு அதிகாரிகள் முகாமில் கலந்து கொள்வதை மாவட்ட ஆட்சியர் கண்காணிக்க வேண்டும் என்றும் ஆர்.தமிழ்அரசு வலியுறுத்தியுள்ளார்.

ஓய்வூதியர் சங்க தாம்பரம் வட்ட பேரவை

சென்னை, ஜூலை 19 - தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் தாம்பரம் வட்ட 9வது பேரவை ஞாயிறன்று (ஜூலை 19) குரோம்பேட்டையில் நடைபெற்றது. வட்டக் கிளைத் தலைவர் பெ.பாலகிருஷ்ணன் தலைமையில் நடை பெற்ற இந்த பேரவை சங்க கொடியை மூத்த தோழர் மு.சி.பலராமன் ஏற்றினார். இணைச் செயலாளர் கு.பெருமாள் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சென்னை மாவட்ட துணைத் தலைவர் எம்.காதர் பேரவையை தொடங்கி வைத்தார். வேலை அறிக்கையை செயலாளர் பெ.சுப்ரமணியனும், நிதி அறிக்கையை பொருளாளர் ஆனந். அன்பழகனும் சமர்ப்பித்தனர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் பொருளாளர்கள் வி.தேவன், எம்.தங்கராஜ் உள்ளிட்ட தோழமை சங்கத் தலைவர்கள் பேசினர். மாவட்டத் தலைவர் பி.எஸ்.அப்பர் நிறைவுரையாற்றினார். ந.மீனாட்சி நன்றி கூறினார்.

ஏஐ அம்சங்களுடன் புதிய செல்போன் அறிமுகம்

சென்னை, ஜூலை 19- இன்றைய நவீனக் கல்விச் சூழலில், தொழில்நுட்பமும் கல்வியும் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டன. டிஜிட்டல் வகுப்புகள், ஆன்லைன் தேர்வுகள் மற்றும் ஆய்வுத் திட்டங்கள் என மாணவர்களின் உலகம் ஸ்மார்ட்போன்களைச் சுற்றி இயங்குகிறது. இந்தத் தேவையை உணர்ந்து, வரும் ஜூலை 23-ஆம் தேதி புதிய ஐக்யூஓஓ இசட் 11 லைட் என்ற செல்போன் அறிமுகம் செய்யப்படுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.