தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

11 Jun 2026, 11:35 pm
சென்னை விரைவு செய்திகள்

சுற்றுலா சென்ற இளைஞர் சாலை விபத்தில் உயிரிழப்பு

கடலூர், ஜூன் 11- சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் (24) மற்றும் விஷ்வா (24) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் கேரள மாநிலம் மூணாறுக்குச் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் மேம்பாலம் அருகே, இந்தியன் வங்கிப் பகுதி வழியாக வியாழக்கிழமை அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக விக்னேஷின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோரத் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் பயணித்த விஷ்வாவுக்குக் காலில் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவர் மீட்கப்பட்டு வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேப்பூர் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுலா சென்ற இடத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பர்கூர் பகுதி சிறுமி பாலியல் வன்கொடுமை குற்றவாளி கைது

கிருஷ்ணகிரி, ஜூன் 11 - பர்கூர் வட்டம் என்.தட்டக்கல் கிராமத்தை சேர்ந்த 30 வயது மணிகண்டன கூலி வேலை செய்து வருகிறார்.இவர் 16 வயது சிறுமி அவர் வீட்டில் தனியாக இருந்தபோது மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.இது குறித்து பெற்றோர்கள் பர்கூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

வாகனத்தில் சிக்கி மயில் பலி

உளுந்தூர்பேட்டை, ஜூன் 11- உளுந்தூர்பேட்டையில் இருந்து திருவெண்ணைநல்லூர் செல்லும் சாலையில் பாரதி நகர் முதல் துலுக்கம்பட்டு இடையிலான மாநில நெடுஞ்சாலையில் மயில் ஒன்று விபத்தில் சிக்கி இறந்து கிடந்தது. சாலையோரம் அடிபட்ட நிலையில் கிடந்த மயிலை பார்த வாகன ஓட்டிகள், உடனடியாக வனத்துறை மற்றும் காவல்துறையினர் வந்து மீட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

பாலியல் குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை!

விழுப்புரம், ஜூன் 11- திண்டிவனம் அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த செண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவா, வயது-36, இவர், கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர்.10ந்தேதி தனது பெற்றோர் இறந்த நிலையில் உறவினர் வீட்டில் தங்கி படித்த 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். சிவாவை திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் வழக்குப் பதிந்து கைது செய்தனர். வழக்கு விசாரணை முடிந்த நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி வினோதா, குற்றம் சாட்டப்பட்ட சிவாவிற்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 11 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

சிஐடியு கோரிக்கை வெற்றி ‘மக்களைத் தேடி’ மருத்துவ ஊழியர்களின் ஊதிய நிலுவைக்கு ரூ. 5 கோடி ஒதுக்கீடு!

கோயம்புத்தூர், ஜூன் 11 - தமிழக அரசின் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் பணி யாற்றி வரும் 13 ஆயிரத்து 225 (WHV) ஊழியர்களுக்கு, கடந்த இரண்டு மாதங்களாக வழங்கப்படாமல் இருந்த ஊதிய நிலுவைத்தொகை தற்போது முழுமையாக விடுவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து சிஐடியு மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். கிருஷ்ண மூர்த்தி கூறியதாவது: ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் தங்களை அர்ப்பணித்து பணியாற்றி வரும் 13 ஆயிரத்து 225 பெண் சுகாதாரத் தன்னார்வலர் களுக்கு (WHV) கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படா மல் இருந்தது. இதனால் ஊழியர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியிருந்தனர். இந்த ஊதியப் பிரச்சனை தொடர் பாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜை, சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொதுச்செய லாளர் எஸ். மகாலட்சுமி, துணைச்செய லாளர் என். ரேவதி உள்ளிட்ட நிர்வாகி கள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) அன்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துப் பேசினோம். ஊழியர்களின் கோரிக்கையை பரிசீலித்த அமைச்சர், உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப் படும் என்று உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து திங்கட் கிழமை அன்று ரூபாய் 5.01 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தர விடப்பட்டுள்ளது. அதற்கான அரசு அரசாணையும் உடனடியாக வெளி யிடப்பட்டுள்ளது. சங்கத்தின் கோரிக்கையை ஏற்று உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்ட அமைச்சர்க்கு, ஊழியர்கள் மற்றும் மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரி வித்துக் கொள்கிறோம். இவ்வாறு எஸ். கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

அமைச்சர் பி.விஸ்வநாதன் இன்று சிதம்பரம் வருகை

சிதம்பரம், ஜூன் 11- தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பி.விஸ்வநாதன், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) நடைபெறவுள்ள பல்கலைக்கழக வளர்ச்சி தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சிதம்பரம் நகருக்கு வருகிறார். அதனைத் தொடர்ந்து, சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதில் நந்தனார் கல்விக் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நந்தனார் ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி படிப்பிற்கான ஊக்கத்தொகைகளை வழங்கி பாராட்டுகிறார். மேலும், அமைச்சர் சிதம்பரம் அருகே ஓமகுளத்தில் உள்ள நந்தனார் மடத்திற்குச் சென்று வழிபாடு மேற்கொள்ள உள்ளார். அமைச்சரின் வருகையை முன்னிட்டு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேசிய உறுப்பினரும், நந்தனார் கல்விக் கழகத் தலைவருமான கே.ஐ. மணிரத்னம் தலைமையில் சிதம்பரம் வடக்கு மெயின் ரோட்டில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை அருகே மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு, சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே உள்ள மகாத்மா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. விஸ்வநாதன் சிதம்பரம் நந்தனார் பள்ளி மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் முன்னாள்

வேட்புமனு ஆவணங்களை வழங்க உத்தரவு

சென்னை, ஜூன் 11- சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட வேட்பாளர்களின் வேட்புமனு ஆவணங்களை மனுதாரரான மிலானி என்பவருக்கு விரைந்து வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. தேர்தல் வழக்குத் தொடுப்பதற்குச் சட்டப்படி 45 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளதைச்சுட்டிக்காட்டி நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

சிபிசிஐடி விசாரணை தொடக்கம்

சென்னை, ஜூன் 11- சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 18 ஹார்ட்டிஸ்க்குகள் திருடப்பட்ட வழக்கு, சிபிசி ஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இவ்வழக்கில் ஏற்கனவே ஒப்பந்த ஊழி யர் கோபிநாத் மற்றும் பெங்களூரு கடை உரிமையாளர் முரளி மனோகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 34 ஹார்ட்டிஸ்க்குகள் மீட்கப்பட்டுச் சிறையில டைக்கப் பட்டுள்ளனர். தற்போது சிபிசிஐடி ஏடிஜிபி அபின் தினேஷ் மொடக் உத்தரவின்படி, டிஎஸ்பி பிரபு விசார ணை அதிகாரியாக நியமிக்கப் பட்டுத் தீவிர விசாரணை தொடங்கியுள்ளது.

திருக்கோவிலூர் - பிள்ளையார் குப்பம் பேருந்தை மீண்டும் இயக்கக் கோரிக்கை

கள்ளக்குறிச்சி, ஜூன் 11- திருக்கோவிலூர் முதல் பிள்ளையார் குப்பம் வரை இயக்கப்பட்டு வந்த பேருந்தை மீண்டும் அதே வழித்தடத்தில் இயக்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, திருக்கோவிலூர் முதல் எம்.குன்னத்தூர் வரை இயங்கி வந்த இப்பேருந்து, உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினரால் கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி, பிள்ளையார் குப்பம் வரை நீட்டிக்கப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டது. பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இப்பேருந்து சேவை, கடந்த ஏப்ரல் மாதம் திருநரங்குன்றம் கிராமத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக, மீண்டும் எம்.குன்னத்தூர் வரை மட்டுமே சுருக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இதனால் பிள்ளையார் குப்பம் பகுதி பயணிகள் தங்களது அன்றாடப் பயணங்களுக்குப் பெரிதும் சிரமப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. எனவே, மாணவர் மற்றும் பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, இப்பேருந்தை மீண்டும் பிள்ளையார் குப்பம் வரை நீட்டித்து இயக்க வேண்டும் எனச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.ஏழுமலை தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.